சூழல் மாசடைவதில் பிரதான பங்கினை காடழிப்பு நடவடிக்கையே கொண்டுள்ளது. பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான ஓர் சிறந்த இடமாக காடுகள் திகழ்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க காடுகளை மனிதன் தன் சுயநலத்திற்காக மனிதனானவன் அழிக்கின்றான்.
இதன் காரணமாக இன்று பல்வேறு இயற்கை சீற்றங்கள் இடம் பெறுகின்றன. மனிதன் தனது தேவைகளிற்கு முன்னுரிமை அளித்து காடுகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கையான காட்டுத்தீ அல்லது ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை கொண்டும் காடழிப்பில் ஈடுபடுகின்றான்.
இவ்வாறாக காடுகளை அழிப்பதன் மூலம் சூழலிற்கு மாத்திரமல்லாமல் மனிதர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
பல்வகை உயிரினங்கள் பாதிப்படைகின்றன
காடுகளை வாழ்வதற்கான ஓர் இடமாக கொண்டு வாழும் உயிரினங்கள் காடழிப்பினூடாக தனது வாழ்விடங்களை இழந்து உணவின்றி இறந்து போகின்றன.
சில விலங்குகள் மனிதர்கள் வாழும் ஊர்களுக்குள் புகுந்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறாக காடழிப்பினூடாக உயிரினங்கள் பாரியதொரு அழிவினையே எதிர்நோக்குகின்றன.
உள்ளூர் மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கின்றது
ஆரோக்கியமான காடுகள் உலகில் காணப்படும் பல மில்லியன் மக்களுக்கு வாழ்வாதரத்தை அளிக்கின்றது. அவர்களில் ஏழ்மையானவர்களும் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் காடுகளை சார்ந்து வாழ்கின்ற மக்களும் உள்ளனர். இவர்கள் வேட்டையாடுதல், சிறிய அளவிலான மூலப்பொருட்களை சேகரித்து காடுகளை ஆதாரமாக கொண்டே வாழ்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழலில் காடுகளை அழிப்பதால் இவர்களது வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு வாழ்வதற்கு மிகுந்த சிரமத்தினையும் எதிர்நோக்குகின்றனர்.
மண் அரிப்பு ஏற்படுதல்
காடுகளை அழிப்பதன் ஊடாக மண்ணின் தன்மை வலுவிழந்து மண்ணரிப்பு ஏற்படுகின்றது. மண்ணரிப்பானது மோசமான வானிலை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழியமைக்கின்றது.
அதாவது மண்ணே வேர்கள் மற்றும் தரையில் உள்ள மரங்களை சிறப்பாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் மரத்தின் உறையாக மண்ணே காணப்படுகின்றது.
எனவேதான் காடழிப்பின் ஊடாக மண் உடைவதோடு நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரழிவுகளும் ஏற்படுகின்றது.
காற்று மாசுபாடு ஏற்படுதல்
சுத்தமான காற்றினை பெறுவதற்கு காடுகள் அவசியமானவையாகும். அதாவது ஒளிச்சேர்க்கை மூலம் மரங்களின் காபனீரொட்சைட்டு மற்றும் நீரை தன்னகத்தே எடுத்துக்கொள்வதோடு அவை ஊட்டச்சத்துக்களையும் உற்பத்தி செய்கின்றன.
ஆக்ஸிஜனை எம் அனைவருக்கும் வழங்குவது மரங்களே மேலும் மரங்களே தூய்மையான காற்றை எமக்களிக்கின்றது இத்தகைய மரங்கள் நிறைந்த காடுகளை அழிப்பதினூடாக காற்று மாசுபாடு ஏற்படுவதோடு நுரையீரல் மற்றும் இதய நேய்கள் ஏற்படுகின்றன.
வறட்சி ஏற்படுதல்
சிறந்த மழைவீழ்ச்சியை அழிக்கும் காடுகளை அழிப்பதனூடாக மழைவீழ்ச்சி குன்றுவதோடு வெப்பம் அதிகரித்து வறட்சி ஏற்படுகின்றது. இதன் காரணமாக மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது
காடுகளை அழிப்பதனூடாக புவியின் வெப்பநிலைகள் மாற்றமடைந்து சென்று காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. மேலும் பசுமையற்ற வாயுக்களின் செயற்பாடும் அதிகரித்து காணப்படுகின்றமையும் காடழிப்பின் விளைவினாலேயாகும்.
எனவேதான் காடழிப்பானது எமக்கு மாத்திரமல்லாது எம்மை சுற்றியுள்ள சூழலுக்கும் பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதனை உணர்ந்து கொண்டு காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.
எமக்கு சிறந்த சுவாசத்தை அளித்து எம்மை காக்கும் வனங்களை நாம் காப்போம் என உறுதிமொழி எடுப்பதோடு மட்டுமல்லாமல் காடழிப்பினை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படுவதனூடாகவும் காடுகளை பாதுகாத்து கொள்ள முடியும்.
You May Also Like: