சிறுகதைகள் என்பது அந்தந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் அப்போதைய காலகட்டங்களில் வாழ்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டதையே ஆகும். இந்த சிறுகதைகள் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பப்படுகின்றன.
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழ் சிறுகதைகளின் தோற்றம்
- சிறுகதைக்கான இலக்கணம்
- சிறுகதைகளின் வளர்ச்சிக்கான காரணங்கள்
- உலகளாவிய ரீதியில் சிறுகதைகளின் வளர்ச்சி
- முடிவுரை
முன்னுரை
உலகத்தில் தோன்றிய அனைத்து சமூகங்களிலும் கதை சொல்லுதல், கேட்டல் என்ற வாய்மொழி மரபு காணப்பட்டே வந்துள்ளது. இந்த மரபின் மூலமாகவே சிறுகதைகளின் எழுத்துருவும் தோற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் நாம் இக்கட்டுரையில் தமிழ் சிறுகதைகளைப் பற்றி முதன்மையாக நோக்கலாம்.
தமிழ் சிறுகதைகளின் தோற்றம்
மேலைத்தேய தொடர்புகளின் காரணமாக தமிழ் மொழியிலும் புதிய இலக்கிய வகைகள் உட்புகுந்தன. அவ்வாறே சிறுகதை எழுத்துருவாக்கமும் இடம்பெற்றுள்ளது.
அதாவது 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழியின் வருகையோடு, அச்சு இயந்திர பாவனையும் அதிகரித்தமையினால் இந்த வாய்மொழியில் இருந்த சிறுகதைகள் எழுத்துருவுக்கு கொண்டுவரப்பட்டன.
அதன் அடிப்படையில் வா.வே.சு.ஐயரினால் எழுதப்பட்ட “குளத்தங்கரை ஆலமரம்” என்பது தமிழின் முதல் சிறுகதையாக காணப்படுகின்றது.
சிறுகதைக்கான இலக்கணம்
“செட்ஜ்விக்” என்பவர் குறிப்பிடுகையில் ஒரு சிறுகதையின் தொடக்கமும் முடிவும் குதிரை பந்தயம் போல் அமைய வேண்டும் என்கிறார்.
இன்னும் கூறுவோமே ஆனால் 3000 சொற்களுக்கு மேற்படாததாகவும், அரை மணி நேரத்துக்குள் வாசித்து முடிக்க கூடியதாகவும் இந்த சிறுகதைகள் அமைய வேண்டும். மேலும் சுருங்கச் சொல்லுதலும், சொல்ல வந்த விடயத்தை தெளிவாக சொல்லுதலும் இச்சிறுகதைகளுக்கான உத்திகள் ஆகும்.
சிறுகதைகளின் வளர்ச்சிக்கான காரணங்கள்
சிறுகதை வளர்ச்சி பெறுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் எழுத்தாளர்கள் ஆகும். அந்த வகையில் கல்கி, பிச்சமூர்த்தி, ராஜகோபாலன் போன்றோர் தமிழ் சிறுகதையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களாவர்.
மேலும் பல்வேறு இதழ்கள் சிறுகதை போட்டிகளை உருவாக்கி அதற்கான பரிசீல்களை வழங்குவதன் மூலமும், இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக இணையதளம், அலைபேசிகளின் மூலமாகவும் சிறுகதைகள் வளர்ச்சி கண்டு வருவதனை காணலாம்.
உலகளாவிய ரீதியில் சிறுகதைகளின் வளர்ச்சி
உலக நாடுகளைப் பொறுத்த வரையில் அமெரிக்காவிலேயே சிறுகதைகள் மிகவும் விருப்பமான இலக்கிய வடிவமாக காணப்படுகின்றது.
நத்தானியன்ஸ் ஹாதான், வாஷிங்டன் இர்விங் மற்றும் ஒஹென்றி போன்றோர்கள் அமெரிக்காவில் சிறுகதை வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார்.மெரிமீ, பால்ஸாக்,மாப்பசான் போன்றோர் பிரான்சிய சிறுகதை வளர்ச்சிக்கு பங்காற்றி உள்ளனர்.
ஜோசப் கான்ராட், ஹென்றி ஜேம்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்ற எழுத்தாளர்களும், ஸ்டான்ட், ஆர்கஸி, பியர்சன்ஸ் மெகசின் போன்ற இதழ்களும் இங்கிலாந்தின் சிறுகதை வளர்ச்சிக்கு பங்காற்றி உள்ளன. இவ்வாறு ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுகதை வளர்ச்சி அடைந்தே வருகின்றது.
முடிவுரை
காலத்துக்கு ஏற்ப வளர்ச்சி கண்டு வருகின்ற இந்த சிறுகதைகள் இன்றைய அவசர காலங்களுக்கு ஏற்ப ஒரு பக்க அல்லது அரை பக்க அளவிலான மைக்ரோ சிறுகதைகளாகவும் வரத் தொடங்கியுள்ளன. உலகளாவிய ரீதியில் சிறுகதைகளுக்கான தனித்துவமான ஓர் இடம் உண்டு.
அதன் காரணமாகவே இன்று சிறுகதைகள் இணையதளங்களிலும் வளம் வருவதனை காண முடிகின்றது. எனவே சிறுகதைகளின் வளர்ச்சி காலத்துக்கு ஏற்ப வளர்ந்து கொண்டே செல்லும் என குறிப்பிடலாம்.
You May Also Like: