நம்மில் பெரும்பாலானோர் சிறந்த தூக்கத்தை எதிர்பார்த்தே தூங்கச் செல்கின்றோம். ஆனால் நம்மில் சிலருக்கு அது வரமாக கிடைத்து விடும். ஆனால் அதற்கிடையில் இந்த கனவு என்பது பலருக்கு ஒரு தொந்தரவான விடயமாகக் காணப்படுகின்றது.
இன்றைய இந்த பதிவில் நாம் சிவனுடன் தொடர்பான விடயங்கள் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்
பெரும்பாலும் ஒரு நபருடைய உறக்கத்தில் சிவலிங்கம் கனவில் வந்தால் அந்த நபர் முயற்சி செய்து கொண்டிருக்கும் எந்த விடயமாயினும் அந்த விடயத்தில் காரிய சித்தி உண்டாகும் வெற்றி கிடைக்க போகின்றது என்பதன் அறிகுறி ஆகும்.
அதாவது அந்த நபரது வாழ்வில் இருக்கும் தடைகள் அனைத்தும் அகன்றுவிடும் என்று குறிப்பிடப்படுகின்றது. போதுமான அளவுக்கு, பணம், பொன், பொருள், சேர்க்கை கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
சிவன் பார்வதி இருவருமாக இணைந்து கனவில் வருவதன் பலன்
ஒருவருடைய உறக்கத்தில் சிவன் மற்றும் பார்வதி இருவரும் கனவில் வந்தால் அந்த நபரது வாழ்க்கையில் நல்ல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கப் போகின்றன என்றும் அர்த்தம் ஆகும்.
விரைவில் தொழிலில் சிறந்த இலாபம் கிடைப்பதோடு பிரயாணங்கள் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. தானிய சேர்க்கை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
சிவன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன்
ஒருவருடைய உறக்கத்தில் சிவன் கோவில் கனவில் வரும் பட்சத்தில் அந்த நபருக்கு நோய் ஏதும் ஏற்பட்டிருப்பின் அந்த நோயிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்கப் போகின்றது என்றும் அதாவது விரைவில் அந்த நோயிலிருந்து அந்த நபர் குணமடையப் போகின்றார் என்றும் குறிக்கும் வண்ணமே அந்த கனவு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது சிலருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறக்க போகின்றன என்றும் நம்பப்படுகின்றது.
சிவன் நடராஜர் வடிவில் கனவில் வந்தால் என்ன பலன்
ஒருவருடைய உறக்கத்தில் சிவன் நடராஜர் வடிவத்தில் கனவில் வந்தால் அந்த நபருக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தடைகள் யாவும் முறியடிக்கப்பட்டு சிவனால் தீர்க்கப்பட்டு காரிய சித்தி கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
சிவனின் கையில் இருக்கும் திரிசூலம் மூன்று காலங்களையும் குறிப்பதோடு அந்த மூன்று காலங்களையும் நமக்கு நேருகின்ற இடர்களை சிவனே நீக்கி நம்மை நல்வழியில் கூட்டிச் செல்வார் என்று நம்பப்படுகின்றது.
சிவனின் தலையில் இருக்கும் பிறை ஒருவருடைய கனவில் வந்தால் அந்த நபருக்கு கல்வி தொடர்பாக சிறந்த முன்னேற்றம் கிடைக்கப்போகின்றது. மேலும் அந்த காலங்களில் வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுக்க தகுந்த நேரம் என்றும் கூறப்படுகின்றது.
சிவனுடைய மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் ஒருவருடைய கனவில் வந்தால் வாழ்வில் ஏதோ ஒரு முக்கியமான மிகப்பெரிய மாற்றம் நிகழ போகின்றது எனவே விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகின்றது.
You May Also Like: