அனைத்து மனிதர்களுக்கும் தூக்கம் என்பது பொதுவான ஒன்றே. தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் ஆகும்.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் ஆழ்மனத்தில் பதிந்துள்ள விடயங்களே கனவுகளாக தோன்றுகின்றன.
கனவுகளில் பல தரப்பட்ட விடயங்கள்,விசித்திரமான விடயங்கள்,நிஜத்தில் நடக்க முடியாத விடயங்கள், பயமுறுத்தும் விடயங்கள், உணர்ச்சி பூர்வமான விடயங்கள் போன்றன கனவுகளில் வரும் பொதுவாக கனவு காணும் நேரத்தின் அடிப்படையில் இந்த கனவுகள் இன்னும் எத்தனை காலங்களில் நிறைவேறும் என்று கனவு சாஸ்திரம் என்ற நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்றைய பதிவில் நண்பர்கள் கனவில் வந்தால் என்ன என்ன பலன்கள் என விரிவாகப் பார்ப்போம்.
நண்பர்கள்
ஒரு பிள்ளை தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தபடியாக உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒரு உறவு நண்பர்கள் ஆவார்.
நண்பர்கள் எனப்படுவோர் ஜாதி, மதபேதம், ஆண், பெண், தகுதி, தராதரம் என்ற எதுவுமே பாராமல் பிள்ளைகள் தமது சுக துக்கங்களை எவ்வித பயமும் இன்றி பகிர்ந்து கொள்ளும் உறவே நட்பு ஆகும். குறிப்பாக ஆறில் தொடங்கி அறுபது வரை நட்புக்கு வயது வேறுபாடே கிடையாது.
நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
ஒருவருடைய உறக்கத்தில் அவருடைய நண்பனை அல்லது நண்பியை கனவில் கண்டால் அந்த நபரை யாரோ ஒருவர் விரைவில் சந்திப்பார் என்றும் அந்த நபருடைய எதிர்காலம் வளமானதாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.
ஒருவர் உறக்கத்தில் தனது தோழர்களுடன் பயணம் செய்வது போன்று கனவு வந்தால் அவருக்கு இருக்கும் நட்பு வட்டாரத்தில் விரிசல் மற்றும் நண்பர்களுக்கு இடையே பிரிவு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
ஒருவர் உறக்கத்தில் தனது நண்பர்களுடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருப்பது போன்று கனவு கண்டால் அந்த நபருக்கு அதுவரை காலமும் இருந்து வந்த கஸ்டங்கள் நீங்கி தொழிலில் மிகப்பெரிய இலாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.
ஒருவர் உறக்கத்தில் தனது தோழரிடம் ஏதாவது காரணத்திற்காக உண்மையை மறைத்து பொய் சொல்வது போன்று கனவு வந்தால் அந்த நபர் நிஜ வாழ்க்கையில் அதிகமாக நேசிக்கின்ற யாரோ ஒரு நபரை வெறுக்க போகின்றீர்கள் என்று கூறப்படுகின்றது.
ஒருவர் உறக்கத்தில் தனக்கு யாரென்று தெரியாத நபரை தனது நண்பர் என்று உரிமையுடன் சொல்வது போன்று கனவு வந்தால் அந்த நபர் முன்னைய காலங்களில் செய்த தவறுகளை சரிசெய்து தவறுகளை இனிமேல் செய்ய கூடாது என்பதே இந்த கனவின் அர்த்தம் என்று கூறப்படுகின்றது.
ஒருவர் உறக்கத்தில் தனது நண்பர்களுடன் சண்டை போடுவது போன்று அந்த நபருக்கு கனவு வந்தால் அவருக்கு தனது நண்பர்கள் மற்றும் நட்பு வட்டாரதிடமிருந்து எதிர்காலத்தில் நல்ல செய்திகள் வரப்போகின்றது என்று நம்பப்படுகின்றது.
ஒழுவர் தன்னுடைய உறக்கத்தில் தன்னுடைய நண்பர்களை பெருமைப்படுத்துவது போன்று கனவு வந்தால் அந்த நபர் தன் நண்பர்கள் மீது வைத்த நம்பிக்கையை இழக்க போகின்றார் என்பது அர்த்தம் ஆகும்.
ஒருவர் தன்னுடைய உறக்கத்தில் தனது நண்பர்களை தேடிச் சென்று சந்திப்பது பார்ப்பது போன்று கனவு கண்டால் அந்த நபருக்கு அவரது தொழிலில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவரது தொழில் பதவி உயர்வு, தொழிலில் இலாபம் அதிகளவு கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
ஒருவர் தன்னுடைய உறக்கத்தில் தனது நண்பர்களிடம் சண்டை போடுவது போன்று கனவு கண்டால் அந்த நபருக்கு தனது நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தி பெற்றுக்கொள்வார் என்று அர்த்தம் ஆகும்.
You May Also Like: