நற்செயல் என்றால் என்ன

ஒரு சமூகத்தை நல்வழிப்படுத்துவதில் பிரதானமான தொன்றாக நற்செயல் காணப்படுகின்றது. ஒரு தனிமனிதனானவன் சிறந்து விளங்குவதற்கு நற்செயல்களே உறுதுணையாக அமைகின்றது. தீய எண்ணங்களை களைந்து நல்ல எண்ணங்களை மேலோங்க செய்வதினூடாகவே எம்மை நல்ல விடயங்கள் வந்து சேரும்.

நற்செயல் என்றால் என்ன

நற்செயல் என்பது யாதெனில் தாம் செய்யும் செயலானது நல்ல எண்ணங்களுடன் அமைந்து காணப்படுதலே நற்செயல் ஆகும்.

அதாவது பிறருக்கு உதவுதல், நன்றி மறவாது செயற்படல், ஆபத்தின் போது காப்பாற்றல், உண்மையாக இருத்தல், தீய எண்ணங்களை கைவிட்டு நல்ல எண்ணங்களை சிந்தித்தல் போன்றவற்றை நற்செயல்களாக குறிப்பிடலாம்.

எமது வாழ்வில் நாம் நல்ல செயல்களுடன் மேற் கொள்ள கூடிய அனைத்து விடயங்களும் எமக்கு நன்மையினை ஏற்படுத்தக் கூடியதாகவே காணப்படுகின்றது.

நற்செயலின் முக்கியத்துவம்

நற்செயலை நாம் மேற் கொள்ளும் போது எமது எண்ணங்கள் தூய்மை பெறுவதோடு மனதிற்கு அமைதியான ஒரு சூழலினையும் நற்செயலானது ஏற்படுத்துகின்றது. அதாவது கஷ்டத்தில் வாடும் ஒருவருக்கு உதவி செய்கின்ற போது எமக்கு ஒரு வகையான மன அமைதி, உள திருப்தி ஏற்படுவதே மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒரு தன்னம்பிக்கையுள்ள மனிதனாக நற்செயல் எம்மை மாற்றுகின்றது. அதாவது நாம் நல்ல செயல்களை மேற்கொள்ளும் போது எம்மால் ஒரு சிறந்த மனிதராக திகழ முடியும் என்ற நம்பிக்கையானது ஏற்படுகின்றது.

நற்செயலில் ஈடுபடுவோரை நன் மதிப்புடனும் மரியாதையுடனும் அனைவரும் நோக்குவர். அதாவது நல்ல விடயங்களை மேற்கொள்பவர்களை அனைவரும் மரியாதையுடனேயே நடத்துவர்.

நற்செயலை மேற் கொள்பவன் சுய நலத்தினால் தோன்றுகின்ற ஆசைகளில் இருந்து விடுபட துணை புரிகின்றது. அதாவது தீய எண்ணங்கள் மற்றும் தீய நடவடிக்கைகளில் இருந்து நற்செயலானது எம்மை காக்கின்றது.

இன்றைய கால கட்டமும் நற்செயலும்

இன்றைய கால கட்டத்தில் நற்செயல்களானவை மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றது. அதாவது ஆரம்ப காலப் பகுதியில் காணப்பட்டது போன்று இன்று நல்ல விடயங்களானவை மருவியே வருகின்றது.

அதாவது பிறருக்கு உதவுதல், உண்மையினை பேசுதல், தீய எண்ணங்களை விட்டு தவிர்ந்து நடத்தல் என்பன இன்றைய நவீன சூழலில் பலமிழந்து காணப்படுகின்றது.

வீதிகளில் இன்று முதியவர்கள் பலர் தங்குவதற்கும் உண்ணுவதற்கும் வழியின்றி காணப்படுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு உதவியினை செய்வதற்கு யாருமே முன்வருவதில்லை மாறாக அவர்களை கண்டும் காணாமலுமே செல்கின்றனர். மேலும் இன்று முதியோர் இல்லங்கள் பல காணப்படுகின்றன.

நற்செயலானது காணப்படுமாயின் வயதான பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடாமல் தாங்களே அவர்களை பராமரித்திருப்பார்கள். ஆனால் இன்று பல முதியவர்கள் தனது பிள்ளைகளால் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டவர்களே ஆவார்.

இன்று அன்பு காட்டுதலானது மருவி காணப்படுகின்றது. அதாவது சிறுவர் துஸ்பிரயோகம், கற்பழிப்பு என பல தீய நடவடிக்கைகள் இடம் பெற காரணம் நற்செயல்கள் பற்றிய புரிந்துணர்வு இல்லாமையே ஆகும்.

ஏனெனில் ஆரம்ப காலங்களில் பிள்ளைகளுக்கு நற்செயல்களை சொல்லி கொடுத்து பிள்ளைகளை வளர்க்கின்றனர். ஆனால் இன்று சிறு பிள்ளைகளிற்கு போன் மற்றும் மடிக்கணணிகளை வழங்குகின்றனர். இதனூடாக பிள்ளைகள் அதற்கு அடிமையாகி சிறு வயதில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை கடைப்பிடிக்காது வளர்ந்து பெரியவராகின்ற போது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே தான் ஒரு பிள்ளைக்கு சிறு பராயத்தில் இருந்தே பெற்றோரானவர்கள் நற்செயல்களை புகட்ட வேண்டும். இதனூடாக ஒரு பிள்ளையானது எதிர் காலத்தில் நற்செயலையுடையதொரு பிள்ளையாக உருவாக முடியும்.

ஒவ்வொரு தனிமனிதனும் நற்செயல்களை தனது வாழ்வின் அனைத்து செயற்பாடுகளிலும் மேற்கொள்ளல் வேண்டும். இதனூடாகவே ஒரு மனிதனானவன் சிறந்தவனாக காணப்படுவான்.

You May Also Like:

வாழ்வின் ஐந்து பருவங்கள்

அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்