கற்றோரும், பாமரர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்து காணப்படும் நாட்டார் பாடலானது, மிகவும் தொன்மையும் காலவரை இல்லாததுமான செழுமையான இலக்கியங்கள் ஆகும்.
நாட்டார் பாடல்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நாட்டுப்புறப் பாடல் என்பது
- மறுபெயர்கள்
- நாட்டார் பாடலின் வகைகள்
- நாடார் பாடல்களின் பயன்கள்
- ஏர்ப்பாட்டு
- மலையக நாட்டார் பாடல்
- முடிவுரை
முன்னுரை
இது என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இசையை விரும்பாதவர்கள் என்று எவருமே இவ்வுலகில் காணப்படமாட்டார்கள்.
அந்த வகையில், பாமர மக்கள் தமது இன்பங்களையும் துன்பங்களையும் பாடல்களாக பாடி அவற்றை வீட்டில் எழுதாது வாய்மொழி மூலம் மாத்திரமே சங்ககாலத்திற்கு முதல் இருந்து பேணப்பட்டு வருகின்றமை சிறப்பான விடயமாக காணப்படுகிறது.
நாட்டுப்புறப் பாடல் என்பது
நாட்டுப்புறங்களின் வாழுகின்ற மக்கள் இடம்பெறும் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகள் பண்பாடுகள் நம்பிக்கைகள் என்பவற்றை பாடல்களாக இலக்கண விதிகளோ, செய்யுள் விதிகளோ இன்றி வெளிபடுத்தும் இலக்கியப் பாடல்கள் நாட்டுப்புற பாடல்கள் எனப்படுகிறது.
மறுபெயர்கள்
நாட்டார் பாடலானது நாடோடிப் பாடல், கிராமியப் பாடல், வாய்மொழிப் பாடல், பாமரப் பாடல், ஜனகானம், பழையப் பாடல், மக்கள் பாடல், காற்றில் வந்த கவிதைகள், மரபுவழிப் பாடல், தெம்மாங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
நாட்டார் பாடலின் வகைகள்
நாட்டார் பாடல் ஆனது விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டு பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், மருத்துவிச்சி பாடல்கள், நலங்கு பாடல், கும்மி பாடல், கப்பற்பாடல், மீனவர் பாடல், சூடு மிதித்தல் பாடல், அரிவு வெட்டுப்பாடல், ஏர்ப்பாட்டு, உப்பட்டி கட்டுதல், களைப் பிடுங்குதல் பாடல் என பல வகைப்படும்.
நாட்டார் பாடல்களின் பயன்கள்
நாட்டார் பாடல்கள் மக்களின் கலைகள் பண்பாடு பாரம்பரிய என்பவற்றைப் புலப்படுத்தி மக்கள் வரலாற்றை அறிய உதவுகின்றது அத்தோடு மக்களின் பழக்கவழக்கங்களையும் புலப்படுத்தி நிற்கின்றது.
மக்கள் அனுபவித்த இன்ப துன்பங்களை இப்பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஓய்வு நேரங்களில் மக்கள் அனுபவித்த இன்ப வாழ்க்கையை வேலை செய்யும் போது அவற்றின் களைப்பு தெரியாதிருக்கவும் இந்த பாடல்கள் உதவுகின்றன.
ஆடிப்பாடி விளையாடிய ஆட்டங்களையும் இல்லற வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் மற்றும் மக்களின் தொன்மையான நாகரீகத்தையும் அது வளர்ந்த வரலாற்று விதத்தையும் உரைப்பனமாக நாடார் பாடல்கள் காணப்படுகின்றன.
ஏர்ப்பாட்டு
நாட்டார் பாடல்கள் தொழில் பாடல்கள் ஒன்றாக காணப்படுகின்ற ஏர்ப்பாடலானது சிறந்த வருமானத்தையும் மகிழ்ச்சியும் தரும் வேளாண்மை தொழிலை குறிப்பதாக அமைகிறது.
காடுகளை வெட்டி களனியாக்கி, உழவுக்கு வேண்டிய மாடுகளை வளர்த்து காட்டில் இருந்து வெட்டிய நல்ல மரங்களில் இருந்து களைப்பை செய்து, களப்பையில் மாடுகளை போட்டு உழுவர் இவ்வாறு கலப்பைகள் பூட்டுவதே ஏர்ப் பூட்டுதல் என கூறப்படுகிறது.
உதாரணம்:
ஏர்ப்பாட்டு – “ஓரம்போஹ்……….. சார்பார்”
மலையக நாட்டார் பாடல்
இந்திய நாட்டிலிருந்து உழைப்புக்காக இலங்கையில் வந்து குடியேறிய மக்களே மலையாக மக்களாவர். இவர்கள் தங்களது வாழ்நிலைகளையும், உணர்வுகளையும், வேதனைகளையும் பாடல்களாய் வெளிப்படுத்துவதே மலையக நாட்டார் பாடல் எனப்படும்.
உதாரணம்:
பழம் – “கூனி அடிச்ச மலை……”
முடிவுரை
உலகில் வளர்ந்து வரும் நவீன மயமாக்கத்தின் காரணமாக பல தொன்மை மிக்க இலக்கியங்கள் அழிவடைந்த நிலையில் நாட்டார் பாடல்களாவை இன்று வரை சில பிரதேசங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக காணப்படுகிறது.
இவ்வாறு காணப்படுகின்ற நாடார் பாடல்கள் தற்காலத்தில் சில இசை கலைஞர்களால் புத்துருவாக்கம் பெற்று வருகின்றமையும் சிறப்புக்கிற்குரிய ஒரு விடயமாகும்.
You May Also Like: