பாரதத்தின் சிறப்பு கட்டுரை

bharathathin sirappugal katturai in tamil

இந்தப் பாரினில் காணப்படுகின்ற நாடுகளில் பாரத நாடானது பல்வேறு சிறப்புகளையும், தொன்மை மிக்க வரலாற்றையும் கொண்ட தேசமாகும்.

பாரதத்தின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பாரதத்தின் பெருமை
  • பாரதத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்
  • பாரதத்தின் மொழி
  • பாரதத்தின் அறிவியல்
  • யோகா
  • முடிவுரை

முன்னுரை

இமயமலை முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த பரப்பினை உடைய பாரத தேசமானது இன்றைய பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு ஏழாவது மிகப் பெரிய நாடாக காணப்படுகிறது. இது தற்காலத்தில் இந்தியா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பாரதத்தின் பெருமை

சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகரிகம், வாழ்வை கொண்டமைந்து காணப்படுகின்ற ஒரு நாடாக பாரத நாடு விளங்குகிறது.

இங்கு பல்வேறுபட்ட மதம், இனம், மொழி வேறுபாடு உடைய மக்கள் ஒற்றுமையாக “ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்” என்ற கூற்றுக்கிணங்க வாழ்கின்றனர்.

உலகில் காணப்படும் மிகத் தொன்மை மிக்க மொழிகளில் ஒன்றாக காணப்படும் தமிழ் மொழி பாரதத்திலே தோற்றம் பெற்றது என்பது பாரதத்தின் சிறப்பாகும்.

பாரதத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

ஆரம்ப காலத்தில் கட்டடக் கலைகளில் சிறப்புமிக்க பாணியை பின்பற்றியவர்களாக பாரத நாட்டவர் காணப்படுகின்றனர். இதற்கு அமைவாக இங்கு ஆயிரக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க தளங்கள் காணப்படுகின்றன.

அந்த வகையில் பாரதத்தின் மிக முக்கியமான வரலாற்று இடங்களில் ஒன்றாக ஹம்பி எனும் இடம் காணப்படுகிறது இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாகும் தற்போது இடிபாடுகளுடன் காணப்படுகிறது.

உலக அதிசயமான ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாரதத்தின் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளமாக விளங்குகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் தஞ்சை எனப்படும் பிரகதீஸ்வரர் கோயில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். மற்றும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயமும் வரலாற்று சிறப்புமிக்க தளமாக காணப்படுகிறது. இவற்றை விடவும் பாரதத்தில் பல்வேறு சிறப்புமிக்க சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.

பாரதத்தின் மொழி

பல வளங்களை கொண்டு அமைந்த பாரதத்தில் பல மொழிகளை பேசும் மக்கள் காணப்படுகின்றனர். இங்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், துருத்தி, மணிப்பூரி, சமஸ்கிருதம் என பல மொழிகளை பேசும் மக்கள் வாழ்கின்றனர்.

இம்மக்கள் பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு மொழிகளை பேசுவர்களாக காணப்பட்டாலும் தேசிய ஒற்றுமை மிக்கவர்களாக காணப்படுகின்றனர்.

பாரதத்தின் அறிவியல்

பாரதத்தின் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படும் மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகரணங்களுடன் காணப்பட்ட ஓர் உபகரணமே தற்காலத்தில் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள்(leach) என உலகளவில் அதனை வைத்து ஆராய்ச்சிகள் இடம்பெறுகிறது.

தற்காலத்தில் காணப்படும் கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய ரசவாத குறிப்புகளையும் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்ற குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. இவ்வாறு பாரத நாட்டின் ஆரம்பகால அறிவியல் சிறப்புக்களை அறிந்து கொள்ளலாம்.

யோகா

தற்காலத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பாரதத்திலே முதன் முதலாக கி.மு 147இல் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டது. பாரதத்திலே முதலில் உருவாக்கப்பட்ட தற்காலத்தில் மிகச் சிறந்த மார்க்கமாக உலக மக்கள் அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது என்பது பாரதத்தின் சிறப்பாகும்.

முடிவுரை

பல்வேறு சிறப்புகளைக் கொண்டு காணப்படுகின்ற பாரத நாடானது தற்காலத்தில் பல்வேறு சமூக கலாச்சார பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. அந்தப் பிரச்சினைகளை இல்லாமல் செய்து பாரதத்தின் பெருமையை மென்மேலும் விரிவாக்குவது தற்கால இளைஞர்களின் பொறுப்பாகும்.

You May Also Like:

டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை