இன்று நாம் பல்வேறு சப்தம்களை கேட்டுக் கொண்டு வருகின்றோம். அத்தகைய சப்தம்களில் ஒன்றே இரைச்சலாகும். அதாவது எம்மால் கேட்க இயலாத, அதிகம் சப்தம் கொண்ட, விரும்பத்தகாத அல்லது தேவையற்ற ஒலியே இரைச்சலாகும்.
இந்த ஒலி மற்றும் இரைச்சலை பிரித்தறிவது எமது மூளையாகும். அந்த வகையில் ஒலியால் ஏற்படும் இரைச்சலை அனைவராலும் காதால் நன்கு உணர முடிகிறது.
இரைச்சல் வேறு சொல்
- சத்தம்
- குழப்பமான ஒலி
- ஓசை
இரைச்சலினால் ஏற்படும் பாதிப்புக்கள்
இரைச்சலானது எமது உடலில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இரைச்சலினால் உயர் இரத்த அழுத்தம், இதய பாதிப்புகள், தூக்கக் குறைபாடு என பல்வேறு பாதிப்புக்கள் எம்மை ஆட்கொள்கின்றன.
மேலும் இரைச்சல் அதிகமான இடங்களில் வேலை செய்வதும் எமக்கு ஆபத்தானதொன்றாகவே காணப்படுகின்றது.
சுற்றுச் சூழல் இரைச்சல்
சுற்றுச் சூழல் இரைச்சலானது இன்று அதிகரித்து கொண்டே காணப்படுகின்றது. அதாவது சுற்றுச் சூழல் இரைச்சலில் பிரதானமான மூலங்களாக புகைவண்டி, வானூர்தி, தொழிற்சாலைகளை குறிப்பிட முடியும்.
இரைச்சலின் காரணமாக சூழல் மாசுபாடானது அதிகரித்து பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றது. எனவேதான் இயன்றளவு இரைச்சலை குறைப்பதனூடாக இதனிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
You May Also Like: