இந்திய சுதந்திரத்திற்கு பின் நாட்டின் வளர்ச்சிக்கு மாபெரும் தொண்டு ஆற்றியவர்கள் வரிசையில் கலைஞர் அவர்களும் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றார்.
இந்திய ஜனநாயகத்தில் கலைஞரின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கலைஞரின் இளமை காலம்
- இந்திய ஜனநாயகத்தில் கலைஞர் பங்கு
- கலைஞரின் திருமணவாழ்கை
- கலைஞரின் இறுதி பயணங்கள்
- முடிவுரை
முன்னுரை
இந்திய நாட்டு சிறந்த தலைவர்களில் ஒருவராக கலைஞர் அவர்களும் காணப்படுகின்றார். தன் தமிழ் ஆர்வத்தையும் சமூக நீதியையும் பெரியார், அண்ணா வழி நின்று மக்களுக்காக இவர் ஆற்றிய பணிகள் ஏராளம் உள்ளன. அதனடிப்படையில் முத்தமிழ் அறிஞர் மூத்த தலைவர் கருணாநிதி அவர்களின் ஜனநாயக பங்களிப்பை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
கலைஞரின் இளமைகாலம்
1924ஆம் ஆண்டு யூன் மாதம் 3ஆம் திகதி இந்திய நாட்டில் நாகப்பட்டனம் மாவட்டத்தில் தந்தை முத்துவேல் தாயார் அஞ்சுகம் அம்மையார் இவர்கள் இருவருக்கும் மூத்த மகனாக கலைஞர் பிறந்தார்.
இவரது இளமைப்பெயர் கருணாநிதி ஆகும். இவர் பள்ளி படிப்பில் ஆர்வம் செலுத்தியதை விட கவிதை, நாடகம், கதை எழுதுவதில் அதிக ஆர்வத்தை செலுத்தினார்.
கலைஞர் அவர்களின் இறுதி பரீட்சையின் போது சித்தியடையவில்லை. அதை ஒரு தடைகல்லாக உணர்ந்த அவர் சோர்வடையாது தனது பயணங்களை ஆச்சரியமாக மாற்ற நினைத்தார்.
15 வயதிலே திரையுலக வாழ்க்கைக்குள் வந்தார். இவருக்கு நாடகங்கள் நடிப்பதில் ஆர்வம் கொண்டமையால் பல கதாபாத்திரங்களை ஆர்வத்துடன் நடிப்பார்.
கால போக்கில் அவரே கதைகளையும், வசனங்களையும் அமைத்து புதிய திரையுலகத்தை படைத்தார். இதன் விளைவாக இவர் எழுதிய பராசக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல வெற்றிகளை அள்ளித்தந்தது.
கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் என பெயர் பட்டமாக எம்.ஆர் ராதா அவர்களால் வழங்கப்பட்டது அதனால் காலப்போக்கில் கருணாநிதி என்ற பெயரை விட கலைஞர் என்ற பெயர் தான் அதிகமாக அழைக்கப்பட்டது.
இந்திய ஜனநாயகத்தில் கலைஞரின் பங்கு
தனது பதினான்கு வயதில் அரசியலில் ஈர்ப்பு கொண்டு ஒரு கட்சி உறுப்பினராக அரசியலுக்கு வந்தார்.
பின்னர் திராவிட முன்னேற்ற கழக தலைவராக பதவியேற்று ஐந்து முறை இந்திய நாட்டின் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் ஆட்சியை சிறப்புற நடாத்தி மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.
தந்தை பெரியார், அண்ணா வழி வந்த கலைஞர் அவர்கள் தமிழ் பற்றில் ஆர்வம் கொண்டதால் தமிழை நிலைநாட்ட பாரிய அளவிலான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
அந்த போராட்டங்களிற்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கி தமிழை வளர்தெடுத்த மாமனிதன் கலைஞர் ஆவார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்றத்தையே கதிகலங்க வைத்தார்.
தமிழ் மாணவர்களுக்கான பல்கலைக்கழக ஒதுக்கீடுகளை ஏற்படுத்தி கொடுத்தார். மற்றும் ஹிந்தியை கட்டாய மொழியில் இருந்து அகற்றி தமிழ் மாணவர்களுக்காக தமிழ் மொழியை கட்டாய மொழியாக்கினார். பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பேராசிரியர்களை உருவாக்கினார். இவ்வாறு இந்திய நாட்டின் ஜனநாயக ஆட்சியை சிறப்பித்தார்.
கலைஞரின் திருமணவாழ்க்கை
கலைஞர் அவர்கள் மூன்று பெண்களை தன் வாழ்கை துணைவிகளாக மாற்றினார். அவர்களின் இல்லற வாழ்க்கையில் மூத்த மனைவி பத்மாவதி அவர்களுக்கு மு.க.முத்து எனும் மகனும். இரண்டாவது மனைவி தாயள் அவர்களுக்கு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு எனும் மூன்று பிள்ளைகளும் மூன்றாவது மனைவி ராசாத்தி அவர்களுக்கு கனிமொழியும் பிறந்தார்கள்.
கலைஞரின் இறுதி பயணங்கள்
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி அன்று அவரது வயது நிலை காரணத்தால் உடல் நிலை மோசமடைந்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவரின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தது.
முடிவுரை
இவர் சிறந்த அரசியல்வாதி என்று சொல்வதை விட ஒரு கவிகளின் கலைஞர் என சொல்வது மிகையாகாது.
இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ள ஒரு சிறந்த குடிமகன் நம் முத்தமிழ் கலைஞர் ஐயா அவர்கள். கலைஞர் அவர்களின் சிறப்புக்கு என்றும் அவர் புகழ் ஓங்கும்.
You May Also Like: