காலம் தவறாமை கட்டுரை

kalam thavaramai katturai in tamil

ஒரு பணியை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் அல்லது சரியான நேரத்திற்குச் சென்று கடமையை நிறைவேற்றுவதே காலம் தவறாமையாகும்.

காலம் தவறாமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காலம் தவறாமையின் முக்கியத்துவம்
  • காலத்தின் அருமை
  • வெற்றிக்கான கதவு
  • காலம் தவறாமை பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்
  • முடிவுரை

முன்னுரை

இவ்வுலகமே காலத்தின் படியே செயற்படுகின்றது. நாம் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். காலம் தவறாமல் செயற்படுபவரது வாழ்வு மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகரமானதாகவும் காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

காலம் தவறாமையின் முக்கியத்துவம்

காலம் தவறாமையானது மனித வாழ்வில் மிக முக்கியமானதொரு பண்பாகும். அந்த வகையில் ஒரு நபர் சரியான காலத்தில் செயற்படுகின்ற போதே ஏனைய விடயங்கள் அனைத்தையும் சரியாக செய்துகொள்ள முடியும்.

நேரத்தை மதிப்பவர்கள் பிறருடைய மதிப்பை பெற்றுக் கொள்வார்கள். அதே போன்று காலம் தவறாமையினை கடைப்பிடிக்கும் நபரானவர் ஏனையவர்களை விட வேகமாக வெற்றியடையக்கூடியவராவார்.

சிறந்த குணம் மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழுவதில் முக்கியத்துவமிக்க ஒன்றாக காலம் தவறமையானது காணப்படுகின்றது.

காலத்தின் அருமை

காலம் என்பது திரும்ப பெற முடியாதது எனவே நாம் உரிய விடயத்தை அதற்குரிய காலத்தில் செய்வதே சிறந்ததாகும்.

அதாவது காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியானது காலம் கடந்த பின் வருந்துவதனால் எவ்வித பயனுமில்லை என்பதனை சுட்டிநிற்கின்றது.

நாம் வயலில் நெல்லை விதைப்பதற்கான காலம் தவறிய பின்பு நெல்லை விதைத்தோமேயானால் அதன் அறுவடையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படும்.

மேலும் இளமையில் உழைப்பதற்காகவே முழு நேரத்தையும் செலவழித்துவிட்டு நிம்மதியில்லை என பலர் கூற காரணம் தனது முழு நேரத்தையும் உழைப்பிற்கே செலவழிப்பதாகும்.

அதேபோன்று பசியில் வாடுகின்ற போது கிடைக்காத உணவு நாம் இறந்த பின்னர் கிடைப்பதில் எவ்வித பயனுமில்லை. காலத்தின் அருமையை உணர்ந்து உரிய காலத்தில் எமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது எமது கடமையாகும்.

வெற்றிக்கான கதவு

நாம் எமது வாழ்வில் வெற்றியீட்டுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றே காலம் தவறாமையாகும். அந்த வகையில் காலத்தை புரிந்து கொண்ட ஒருவர் சரியான நேரத்தில் செயற்பட்டு தனது இலக்கை அடைந்து கொள்வார்.

நாம் இழந்த காலத்தை மீண்டும் பெறமுடியாது என்பதனை உணர்ந்த ஒருவரே வெற்றிப் பாதையை நோக்கி செல்வார். அந்தவகையில் சரியான திட்டமிடலுடன் தனது இலக்கை அடைய காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதே எமது வெற்றிக்கான ஆரம்பமாகும்.

காலம் தவறாமை பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

“தொழிலில் முக்கிமானது நேரம் தவறாமை அது இல்லாமல் எந்த முறையும் பயனற்றது.”

“காலம் தவறுதல் பண்பில் குறைந்ததாகும்.”

“மூன்றுமணி நேரம் முன்கூட்டிச் சென்றாலும் செல்லலாம். ஒரு நிமிடம் பின்தங்கி விடக்கூடாது.”

“ஓடிச்செல்வதால் பயனில்லை. முன்கூட்டியே புறப்படிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.”

“நான் எனக்கு குறித்த நேரத்திற்கு கால் மணிநேரம் முந்தியே சென்றுவிடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியுள்ளது.”

இவ்வாறாக காலம் தவாறமை பற்றி பல்வேறு அறிஞர்கள் தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளதானது காலத்தின் மகத்துவத்தையும் காலத்தை தவறவிடுவதால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக்காட்டுகின்றது.

முடிவுரை

காலம் தவாறமையே எம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் எம்மை உயர்த்தக்கூடியதாகும். ஒவ்வொரு தனிமனிதனும் காலத்தின் அருமையை உணர்ந்து இன்றே செயற்படுவதன் மூலமே சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்.

You May Also Like:

சுற்றுலா பயணம் கட்டுரை

அன்றாட வாழ்வில் கணிதம் கட்டுரை