ஓட்டுநர் என்பதே சரியானதாகும்.
காரணம்
தமிழ் இலக்கணத்தின் படி ஓர் வினைச்சொல்லானது அதனைச் செய்பவர் என்கின்ற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும் போது “நர்” என்ற விகுதியை பெற்றே வரும்.
அதாவது வினைச்சொல்லானது கட்டளைச்சொல்லாக உகாரத்தில் காணப்படல் வேண்டும். இவ்வாறாக காணப்படும் அச்சொல்லானது “நர்” விகுதியை பெற்று வருகின்றது என்றவகையில் ஓட்டுதல் என்ற வினையினை செய்பவரை ஓட்டுநர் என்றே எழுத முடியுமே தவிர ஓட்டுனர் என்று எழுதுவது பிழையானதாகும்.
எடுத்துக்காட்டுகள்
- ஆடுநர்
- பாடுநர்
- ஆளுநர்
- அனுப்புநர்
- பெறுநர்
You May Also Like: