பண மோசடி என்பது தற்கால உலகில் அதிகரித்து வரும் குற்றங்களில் ஒன்றாகும். பண மோசடி என்பது சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பணத்தை சேமிப்பதாகும்.
இன்று பணத்தின் மீதான ஆசையின் காரணமாக பல்வேறு வகையான மோசடிகளில் மனிதனானவன் ஈடுபடுகின்றான்.
அந்தவகையில் பண மோசடிக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும். மேலும் இது ஒரு பெடரல் குற்றமாகவும் காணப்படுகின்றது.
பண மோசடி வேறு சொல்
- நிதி மோசடி
- காசு மோசடி
பண மோசடி தடுப்புச் சட்டம்
பண மோசடி தடுப்பு சட்டமானது இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகவே காணப்படுகிறது.
இச்சட்டத்தினூடாக பண மோசடியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் பண மோசடியை கட்டுப்படுத்தவும், பண மோசடி தொடர்பான சிக்கல்களை சமாளிக்கவும் இச்சட்டமானது துணை புரிகின்றது.
You May Also Like: