பெண்களின் உரிமைகள் பேச்சு போட்டி

pengalin urimaigal speech in tamil

தமிழுக்கு என் உயிர் என்ற கூற்றுடன் என் தமிழ் மொழிக்கு என் முதற்கண் வணக்கங்கள் அத்துடன் இங்கு கூடியுள்ள பெரியவர்களே தாய்மார்களே தந்தைமார்களே தோழர்களே தோழிகளே அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள் அந்த வகையில் அப்பெண்களின் உரிமையை பற்றி சிறு உரையாற்ற வந்துள்ளேன்.

மனித உரிமை என்பது

உலக நாடுகள் அனைத்திலும் தனிநபருக்கு என பொதுவான உரிமைகள் காணப்படுகின்றன. அந்தவகையில் சில விடயங்களை பொதுவான உரிமைகளாக கூறப்படுகின்றது.

அவற்றில் ஒரு தனிநபருக்கு இனம், மதம், மொழி தொடர்பான சுதந்திரமும் கல்வி தொடர்பான அறிவும், சுகாதாரம், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான விடயங்களை பெற்றுக்கொள்வதிலும் உரிமை உள்ளது.

இவற்றை அடிப்படையாக வைத்து அரசாங்கம் புதிய சட்டங்களை மனித உரிமைகளுக்காக ஒவ்வொரு ஆண்டுகளும் நடைமுறைப்படுத்தி கொண்டுள்ளது. அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கும் மனித உரிமை பாரிய அளவு பங்களிப்பை வழங்குகின்றது.

பெண்களின் உரிமை என்பது

மனித உரிமை என்பது பொதுவான எண்ணக்கருவை கொண்டது. அவற்றில் ஆண், பெண் என தனி தனி உரிமைகளும் உலக நாடுகளிடையில் காணப்படுகின்றது. அதனடிப்படையில் இந்திய நாட்டின் பெண்கள் உரிமையாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி கற்கும் உரிமை, குழந்தை தொடர்பான உரிமை, வேலை செய்யும் உரிமை, சமமான வருமானம் பெறும் உரிமை, பெண்களின் மீது ஏற்படும் வன்முறைகளை தடுப்பதற்கான உரிமை என பல உரிமைகள் பெண்களுக்காக இந்திய நாட்டால் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைகளின் மூலம் பெண் என்ற பெருமையை மேலும் வலுவூட்ட இந்திய நாடு பெரிதும் முயற்சி எடுத்து கொண்டுள்ளது.

பெண்கள் உரிமையின் முக்கியத்துவம்

பெண்கள் மிருதுவானவர்கள் என்பது அனைவரும் தெரிந்த உண்மை. ஆனால் அதனை சில கயவர்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றனர்.

அதனால் பெண்களின் வன்முறை தொடர்பான உரிமையால் பெண்களிற்குள் தைரியமான உணர்வு ஏற்படுகின்றது. பெண்களுக்கு கல்வி தொடர்பான உரிமை வழங்குவதால் நாட்டில் சிறந்த எதிர்காலத்தை பெண்களால் மாற்ற முடியும்.

அவற்றுடன் வாக்களிக்கும் உரிமை மூலம் நாட்டின் மேம்பாட்டை வளர்க்க முடியும். இவ்வாறு பெண்களின் உரிமைகள் மூலம் ஒரு சிறந்த எதிர்கால நாட்டை உருவாக்கும் வல்லமை பெண்களுக்கு உள்ளது. இந்திய நாட்டில் எத்தனையோ பெண்களின் சாதனை உலகளாவிய ரீதியில் புதிய சரித்திரங்களை பதித்துள்ளது.

எனவே பெண்களாக நீங்கள் தான் உங்கள் பாதைகளை உருவாக்க வேண்டும். எத்தனையோ உறவுகளாக பெண்கள் உள்ளார்கள். ஒரு உயிரின் படைப்பை நிகழ்த்துவதும் பெண் ஒருத்தியே ஆவாள்.

அவர்களின் அனைத்து சாதனைகளுக்கும் போராட்டங்களுக்கும் என் சார்பில் என் மரியாதையை செலுத்தி கொண்டு மேலும் இவர்களின் சாதனைகள் பேர் சொல்ல வேண்டும் என கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன் நன்றி வணக்கங்கள்.

You May Also Like:

தமிழர் பண்பாடு கட்டுரை

உடற்பயிற்சி நன்மைகள் கட்டுரை