இன்று மனிதனை அழிக்கும் ஓர் விடயமாகவே அவனது பேராசை காணப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் தீமைகளுக்கு காரணமே பேராசைதான். எமது வாழ்வை அழிவிற்கு உட்படுத்தும் ஓர் பண்பாகவே பேராசையானது காணப்படுகின்றது.
பேராசை தீமை தரும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பேராசை என்பது
- பேராசையின் தீமைகள்
- பேராசை பெரு நஸ்டம்
- பைபிள் குறிப்பிடும் பேராசையின் விளைவுகள்
- முடிவுரை
முன்னுரை
மனித பேராசையின் மிகப் பெரிய விடயமாகவே பணம் காணப்படுகின்றது. இன்று மனிதர்கள் தனது பேராசையின் காரணமாக பணத்தை பல்வேறு வகைகளில் சம்பாதித்து வருகின்றனர்.
நல்ல வழிகளை தாண்டி தவறான வழிகளில் பணம் ஈட்டுவதே இன்று அதிகமாக இடம் பெறுகின்றது. இத்தகைய பேராசையின் இறுதி விளைவு எம்மை அழிப்பதாகவே இருக்கும் என்பதே நிதர்சனமாகும்.
பேராசை என்பது
பேராசை என்பது யாதெனில் பொருள், உடமைகள், செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீதான தீராத ஆசையினை வெளிப்படுத்தக் கூடியதொரு பண்பாகும். இப்பேராசையானது தனது தேவையை விடவும் அதிகரித்த ஆசையை உள்ளடக்கியதாகும்.
அதாவது பேராசை பெரு நட்டம் என்ற கூற்றினூடாக பேராசையின் இறுதி விளைவு அழிவிலேயேதான் எம்மை நிறுத்தும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றது.
பேராசையின் தீமைகள்
நாம் ஒரு விடயத்தை தேவைக்கதிகமாக ஆசைப்படுகின்ற போது அது பேராசையாக மாறி விடுகின்றது. இப்பேராசையானது எம்மிடம் இயலாமை மற்றும் நல்லிணக்கமற்ற நிலையினை உருவாக்குகின்றது. அதிருப்தியான வாழ்க்கை, உளவியல் பிரச்சினைகள் மற்றும் உயர்ந்த விருப்பங்களை பலவீனப்படுத்துகின்றது.
மேலும் ஒரு சூழ்நிலைக்கு அடிமைப்படுத்துகின்றது. அதாவது உணவானது எமது தேவையாகும். ஆனால் அவ்வுணவில் அவர் பேராசை கொண்டவராக மாறும் போது அந்த உணவின் மூலமாகவே அவர் ஆக்கிரமிக்கப்பட்டு அழிவை நோக்கி செல்வார்.
பேராசையானது பதுக்கி வைத்தல் மற்றும் பல்வேறு தவறான வழிகளுக்கு எம்மை இட்டுச் செல்லும் ஓர் பண்பாகும். எமது சிந்தனையை மழுங்கடிக்கச் செய்கின்றது.
பேராசையானது ஏற்படும் சந்தர்ப்பத்தில் நாம் தன்னம்பிக்கையை இழக்காது நல்ல முறையில் எமது தேவையை நிறைவேற்றிக் கொள்தல் எமக்கு சிறந்ததாகும்.
பேராசை பெரு நஷ்டம்
பேராசை பெரு நட்டம் என்ற பழமொழியை பின்வரும் கதை மூலமாக சிறப்பாக விளங்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் எமது மனமானது நல்லவை, தீயவை என 2 விதமான ஆசைகளை கொண்டமைந்ததாகும்.
அந்த வகையில் ஒரு நபரானவர் தனது வேலை நிறைவு பெற்ற பின்னர் தனது பணத்தை சேமிக்காமல் அதிக வட்டியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஒருவரிடம் கொடுக்கின்றார். ஆனால் பணத்தை வாங்கிய நபர் ஏமாற்றி விட்டார். இதற்கு காரணம் இவர் பேராசை கொண்டவராக காணப்பட்டமையாகும்.
பணம் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பணத்தை சேமிக்காது வட்டியில் ஈடுபட்டார். இப்பேராசை இவரது சந்தோசத்தை இல்லாமல் செய்தது. இறுதியில் இவருடைய பேராசையின் விளைவு பெரும் நஷ்டத்திலேயே முடிந்தது. நாம் எமது வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு பேராசையை விட்டு தவிர்ந்திருத்தல் சிறந்ததாகும்.
பைபிள் குறிப்பிடும் பேராசையின் விளைவுகள்
பைபிளானது பேராசையின் விளைவுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. அதாவது பேராசையானது லஞ்சம் மற்றும் சட்டவிரோதமான முறையில் வெகுமதியை கோருவதற்கு சமமாகும்.
அதாவது இப்பேராசையானது 7 கொடிய பாவங்களில் ஒன்றாகும். இது மனிதனின் ஆபத்தான எதிரியாகவும் காணப்படுகின்றது. மேலும் மனிதனின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியதாகும் எனவும் பேராசை பற்றி பைபிளானது கூறுகின்றது.
முடிவுரை
மனிதனானவன் தனது வாழ்வை சிறப்பாக வாழ வேண்டுமாயின் பேராசையை குறைப்பதன் மூலமாகவே முடியும். எனவேதான் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு பேராசையை தவிர்ப்போம் என்ற பண்பை இன்றே வளர்த்துக்கொள்வதன் மூலமே எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் அழிவுகளிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.
You May Also Like: