இயற்கை மனிதனைப் பல வகைகளிலும் பிரம்மிக்க வைக்க செய்கின்றன. அதாவது மனிதனுக்கு பயன்மிக்க பல அம்சங்களையும் வியப்பூட்டும் பல விந்தைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
இயற்கையில் மரம், மலை, மழை, மண், மலர், வானம், நீர் எனப்பல விடயங்கள் இயற்கையில் அழகூட்டும் விடயங்களாக காணப்படுகின்றன. பலர் இயற்கையை முறையாக பராமரிக்காது நாசம் செய்து வருகின்றனர்.
ஆனாலும் சிலர் இயற்கையின் அருமையைப் புரிந்து அவற்றைப் பேணி பாதுகாத்து வருகின்றனர். இன்றைய இந்த பதிவில் நாம் மண்ணிலிருந்து செய்யப்படும் சுடுமண் சிலைகள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.
சுடுமண் சிற்பம்
இந்த வகை சிற்பங்கள் களிமண்ணைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. களிமண்ணால் செய்த பின்னர் அவற்றைக் காய வைத்து உருவங்களாக்கி மேலும் உறுதி ஆக்குவதற்காக செய்த சிற்பங்கள் யாவும் நெருப்பினால் சுடப்பட்டு உறுதி ஆக்கப்படுகின்றன.
இதனால் இவை சுடுமண் சிற்பங்கள் எனும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகின்றன. உறுதியான சிற்பங்கள் என்பதால் எளிதில் தேய்மானம் அடையாத துருப்பிடிக்காத பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாது பல வர்ணங்களை அழகு சேர்ப்பதற்காக பூசப்படுகின்றன. இவ்வகை சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் பல பாகங்களிலும் விசேடமாக தமிழகத்திலும் பாரம்பரியமாக காலம் காலமாக தொன்று தொட்டு செய்யப்பட்டு வருகின்றன.
பண்டைய காலத்தில் இருந்து இது மக்களிடையே கலையாக பரவி இருந்தது. அனைவராலும் செய்ய முடியாத கலை ஆகும்.
மண்ணுடன் நீர் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்படுவதன் மூலம் இத்தகைய சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த சுடுமண் சிலைகள் பண்டைய காலங்களில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிரசித்தி பெற்ற மனிதர்கள் அதுமட்டுமல்லாது மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் வடிவங்களில் செய்யப்பட்டன.
இவற்றின் சிறப்பு யாதெனில் இத்தகைய சுடு மண்ணினால் செய்யப்படும் சிற்பங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் வெயில், மழை போன்றவற்றால் பாதிக்கப்படமாட்டாது.
சுடுமண் சிலைகள் இரண்டு வகைப்படும். நிரந்தரமான சுடுமண் சிலைகள், தற்காலிக சுடுமண் சிலைகள் போன்றனவாகும்.
நிரந்தரமான சுடுமண் சிலைகள் எனப்படுபவை ஆலயங்களிலும் அதன் சுற்றுப்புறச் சூழல் மற்றும் கோபுரங்களில் நிரந்தரமாக செய்து வைக்கப்படுபவை ஆகும்.
தற்காலிக சுடுமண் சிலைகள் எனப்படுபவை திருவிழாக்கள் மற்றும் விசேட பூஜைகளுக்காக தற்காலிகமாக செய்யப்பட்டு பூஜை மற்றும் விழாக்கள் முடிவடைந்தவுடன் நீரில் கரைக்கப்பட்டோ உடைக்கப்பட்டோ இல்லாமல் செய்யும் வகை ஆகும்.
பண்டைய காலத்தில் செய்யப்பட்ட சுடுமண் சிலைகள் இந்தியாவின் பல இடங்களிலும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டன. இவை முழுவதும் கையினாலேயே நுட்பமாக செய்யப்படுகின்றன.
இந்தியாவில் திருக்காம்புலியூர், இராமநாதபுரம், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், தஞ்சாவூர், வட ஆர்க்காடு மாவட்டம், திருச்சி போன்ற மாவட்டங்களில் அகழ்வு ஆராய்ச்சி சிதைவுகள் கண்டெடுக்கப்படுகின்றன.
ஆலயங்களில் கிராம தேவதைகள், ஐயனார் குதிரை, பைரவர் சிற்பம், மதுரை வீரன், ஏழு கன்னிமார்கள், மாரியம்மன், பூதங்கள், கருப்பணசாமி போன்ற பல தெய்வங்களின் உருவங்கள் சுடுமண் சிலைகளாக செய்யப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது மக்கள் நேர்த்தி வைத்து அவற்றை நிறைவேற்றும் பொருட்டு சுடுமண்ணினால் அவர்களின் நேர்த்திகளிற்கு ஏற்றவாறு சிலைகளாக செய்து நேர்த்தியை நிறைவேற்றி கொள்கின்றன.
You May Also Like: