பொதுவாக பாதுகாப்பு என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். பாதுகாப்பானது நம் வாழ்நாளில் அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் ஒன்றாகும். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் நடுவே வேலை செய்கின்ற ஊழியர்களுக்கு அல்லது தொழிலாளர்களுக்கு பணி புரியும் இடத்தில் பாதுகாப்பு அவசியமாகும்.
தொழிற்சாலை பாதுகாப்பு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தொழிற்துறைப் பாதுகாப்பின் முக்கியத்துவம்
- தொழிற்சாலையின் வகைகள்
- தொழிற்சாலையில் தொழிலாளியின் பாதுகாப்பற்ற செயல்களுக்கான காரணங்கள்
- விபத்துத் தடுப்பு முறைகள்
- முடிவுரை
முன்னுரை
பாதுகாப்பான பணிச் சூழல் காணப்படுமாயின் எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையிலும் பணி புரியும் மன உறுதியைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கும். எனவே தொழிற்சாலை பாதுகாப்பு என்பது மிகவும் முக்கிய அம்சமாகும்.
அதுமட்டுமல்லாது பாதுகாப்பு பணி நிலைமை மற்றும், தனிநபரின் பாதுகாப்பை வழங்குவது தொழிற்சாலையின் கடமையாகும்.
தொழிற்சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம்
எந்தவொரு தொழிற்துறையின் செயற்பாடுகளிலும் தொழிற்சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது. ஆபத்துக்கள், விபத்துக்கள், தவறுகள் போன்றவற்றைக் குறைப்பதற்குத் தொழிற்சாலைப் பாதுகாப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
குறிப்பாக அணுசக்தி, விமானம், இரசாயனம், எண்ணெய் மற்றும் சுரங்கத் தொழில்கள் போன்ற ஆபத்தான தொழில்களில் தொழிற்சாலைப் பாதுகாப்பு என்பது முக்கியமானதாக உள்ளது. தொழிற்சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்பது தார்மீக மற்றும் சட்டபூர்வமான பொறுப்பாக உள்ளது.
தொழிற்சாலையின் வகைகள்
தொழிற்சாலைகளானவை பொதுவாக நான்கு வகைப்படுகின்றன. பிடித்தெடுக்கும் தொழிற்சாலை, மரபுத் தொழிற்சாலை, கட்டுமான தொழிற்சாலை, தயாரிப்பு தொழிற்சாலை என்பனவையே அவையாகும்.
பூமியிலிருந்து தோண்டி எடுக்கும் பொருட்களை பிரித்தெடுக்கக்கூடிய தொழிற்சாலைகளை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் என்கின்றோம். இதற்கு சிறந்த உதாரணம் சுங்க தொழிற்சாலையாகும்.
கட்டுமான தொழிற்சாலை என்பது கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், அணைகள் போன்றவற்றை கட்டத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகும். இதற்கு சீமெந்துத் தொழிற்சாலைகளை உதாரணமாக கூறலாம்.
மரபுத் தொழிற்சாலை என்பது நுகர்வோரின் தேவைக்காக சில தாவரங்கள் மற்றும், மிருகங்கள் போன்றவற்றை வளர்க்கும் தொழிற்சாலைகள் ஆகும்.
கச்சா பொருட்கள் அல்லது, பாதி முடிவு பெற்ற பொருட்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றக்கூடிய தொழிற்சாலைகள் தயாரிப்பு தொழிற்சாலை எனப்படுகின்றன. பருத்தித் துணி உற்பத்தி தொழிற்சாலை ஓர் தயாரிப்பு தொழிற்சாலை வகையைச் சார்ந்ததாகும்.
தொழிற்சாலையில் தொழிலாளியின் பாதுகாப்பற்ற செயல்களுக்கான காரணங்கள்
அறியாமை, அனுபவம் அல்லது, பயிற்சியின்மை, அலட்சியம் (என்ன செய்ய வேண்டும் என தெரிந்தும் அக்கறையின்மை) சோம்பல், உடல் நலக்குறைவு, நிதானமின்மை, கவனச் சிதறல், அவசரம் மற்றும் அதீத தன்னம்பிக்கைகளால் பெரும்பாலான விபத்துக்கள் நடைபெறுகின்றன.
விபத்துத் தடுப்பு முறைகள்
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
- முறையான தொழிற்கூடங்களையும், இயந்திரங்களையும் அமைத்தல்
- முறையான செயன்முறைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்துதல்
- தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாகப் பராமரித்தல்
- தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைப் பராமரிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்.
முடிவுரை
தொழிற்சாலையில் பாதுகாப்பு என்பது பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலையும் உறுதிப்படுத்த முக்கியமானதாகும். நாம் செய்யும் ஒவ்வொரு தொழில்களிலும், வேலைகளிலும் ஒரு சில பாதுகாப்பற்ற நிலை கலந்துள்ளது.
இதனால் தொழிற்சாலைப் பாதுகாப்பு என்பது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இது விபத்துக்களைத் தடுக்கின்றது. தொழிலாளர்களின் வாழ்க்கையை மற்றும், உற்பத்திச் சூழலைப் பராமரிக்க உதவுகின்றது.
எனவே அனைத்துத் தொழிற்சாலைகளும் தொழிற்சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்வது இன்றியமையாததாகும்.
You May Also Like: