அனைத்து மனிதர்களும் சிறந்த வாசனையை விரும்பக்கூடியவர்களாகவே காணப்படுகின்றனர். அந்தவகையில் ஒரு பொருளின் வேதியியல் பண்புகளே வாசனையை தீர்மானிக்கக் கூடியதாகும் என்றவகையில் அதனை நுகர நமக்கு இனிமையாக இருப்பின் அதுவே வாசனையாகும்.
எடுத்துக்காட்டாக, மண் வாசனை, பூ வாசனை, புதிய ஆடையின் வாசனை என பல்வேறு வாசனைகளை மனிதர்களாகிய நாம் நுகர்கின்றோம்.
அதேபோன்று எம்மால் நுகர முடியாத வாசனையே நாற்றம் என அழைக்கப்படுகின்றது. சிறந்த வாசனையே புத்துணர்வூட்டும் வாசனையாகும்.
வாசனை வேறு பெயர்கள்
- நறுமணம்
- மணம்
- வாசம்
- நல்ல மணம்
- வாடை
மண் வாசனை
மண் வாசனையானது மரபணுக்கள் வழியாக அனைத்து மனிதர்களுக்கும் கடத்தப்படுவதோடு பிடித்தமானதோர் வாசனையாகவும் திகழ்கின்றது.
அந்தவகையில் மண் வாசனை என்பது மழைநீர் உலர்ந்த மண் மீது வழும்போது ஏற்படக்கூடிய வாசனையாகும். இத்தகைய வாசனையானது மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மண்ணில் வேகமாக விழும் நீர்த்துளிகளின் காரணமாக ஏற்படுகின்றது.
You May Also Like: