சித்தாந்தங்களை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உறுதுணையாக ஆதினங்கள் செயற்படுகின்றன. இவ் மடங்களின் தலைவர்களை ஆதினகர்த்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
ஆதீனம் என்றால் என்ன
ஆதினம் என்பது சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உருவாக்கப்பட்ட மடங்களே ஆதினம் எனப்படும். அதாவது மடமானது ஆச்சாரியர் வாழ்கின்ற இடத்தினை குறிக்கின்றது. ஆதினமானது தலைமையாய் இருந்து பல கோயில்களையும், சீடர்களையும் கொண்டு காணப்படுகின்ற ஒரு அமைப்பாகும். முதன் முதலாக திருவாவடுதுறை ஆதினமே தோற்றுவிக்கப்பட்டது.
ஆதினத்தின் சிறப்புக்கள்
ஆதினமானது சைவ சித்தாந்தத்தினை வளர்ப்பதற்கு மிகவும் பக்கபலமாக காணப்படுகின்றது. இதனூடாக இலகுவான முறையில் சைவமானது மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகின்றது.
ஆதினங்களானது தமிழ் வளர்ச்சியில் பிரதான பங்கினை வகுக்க கூடிய தொன்றாக காணப்படுகின்றது. உதாரணமாக திருவாவடு துறை ஆதினம் காணப்படுகின்றது. ஆதினங்களில் ஞானியாரடிகள், குன்றக்குடி அடிகளார், சகஜானத்தர் போன்ற பலர் காணப்படுகின்றமை ஆதினத்தின் சிறப்பினை எடுத்து காட்டுகின்றது.
திருவாவடுதுறை ஆதினம்
தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதினங்களுள் முதன்மையான ஆதினமே திருவாவாடுதுறை ஆதினமாகும். இதுவே முதன் முதலாக தோற்றுவிக்கப்பட்ட ஆதினமாகும். இவ் ஆதினமானது கி.பி 14ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
இன்று சைவ சித்தாந்த வகுப்புக்களை நடாத்தி வருகின்றது. மேலும் திருவாவடு துறை ஆதினமானது தமிழ் வளர்ப்பு பணியில் பல்வேறுபட்ட முயற்சிகளை ஆற்றி வருகின்றன. இவ் திருவாவடு துறை ஆதினமானது ஸ்ரீ மெய்கண்டாரின் வழி சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள் திரு நமசிவாய மூர்த்தியால் தோற்றுவிக்கப்பட்டது.
இதன் கிளைகள் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்பட்டு வருகின்றன. இவ் ஆதினத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பல கோயில்கள் இயங்கிக் கொண்டு வருகின்றது.
திருவண்ணாமலை ஆதினம்
தமிழகத்தில் சைவமும் தமிழும் ஒருங்கே வளர்க்க கட்டமைக்கப்பட்ட பக்தி இலக்கிய கால ஆதினங்களில் முதன்மையான ஆதினமே திருவண்ணாமலை ஆதினமாகும். இது கி.பி 11ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் நிறுவப்பட்டது.
திருவண்ணாமலை ஆதினத்தின் மறைந்த குரும்காசந்தி தானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சமூக சிருத்தர் தந்தை பெரியாருடன் இணக்கமான நட்புறவினை பேணக் கூடியவராக காணப்பட்டார்.
மதுரை ஆதினம்
சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இது சைவ சமய திருமடங்களில் ஒன்றாக திகழ்கின்றது. மதுரை ஆதினமானது மதுரை நகரில் அமைந்துள்ளது.
மதுரை ஆதினத்திற்குரிய 03 கோயில்கள் காணப்படுகின்றன. இவை தஞ்சாவூர் போன்ற இடங்களில் அமைந்து காணப்படுகின்றன.
ஆதினங்களின் பணிகள்
சைவ சமயத்தில் சைவ சித்தாந்தங்களை பரப்புவதற்கு மிகப் பிரதானமானதொன்றாக ஆதினங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக மக்களிடம் சைவ சித்தாந்த கொள்கைகளை இலகுவாக பரப்புவதற்கு துணைபுரிகின்றது.
சடங்குகள் மற்றும் வழிபாடுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கான ஒரு சிறந்த இடமாக ஆதினங்கள் காணப்படுகின்றன.
தத்துவ ஞானிகள் மற்றும் துறவிகள் தனியே ஓர் இடத்திலிருந்து யோகநெறி கலை பழகுவதற்கான சிறந்த இடமாக ஆதினங்கள் காணப்படுகின்றது. மேலும் கடவுள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும்.
அறநெறிகள் மற்றும் தத்துவம், தத்துவ ஞானங்களை தன்னை நாடி வருபவருக்கு போதிக்கும் ஓர் இடமாக ஆதினங்கள் அமைந்துள்ளன. கிடைப்பதற்கரிய பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு ஆதினங்கள் துணைபுரிகின்றன.
மேலும் ஆதினங்களினூடாக மன அமைதியினை பெற்று சிறப்பாக வாழ்க்கையினை வாழ்வதற்கும் தேவையான வாழ்வு நெறி தத்துவங்களை போதனை செய்யும் ஓர் இடமாகவும் ஆதினங்கள் காணப்படுகின்றன.
You May Also Like: