இன்று நாம் வாழும் நவீன யுகத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. அதாவது பல்வேறு நன்மைகளின் பொருட்டு இந்த சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு தீமைகளும் கிடைக்கப் பெறவே செய்கின்றன.
சமூக வலைத்தளங்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன
- சமூக வலைத்தள உருவாக்க வரலாறு
- சமூக வலைத்தளங்களின் நன்மைகள்
- சமூக வலைத்தளங்களின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழும் உலகம் இன்று உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. அதாவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக உலகம் ஓர் கைக்குள் அடங்குவதனை காணலாம்.
இந்த தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனோடு இணைந்த வலைத்தளங்களின் வளர்ச்சியும் மனிதனை அதன் அடிமையாகவே மாற்றி விட்டது. இன்று வலைத்தளங்களை உபயோகிக்காத எவருமே இல்லை எனும் அளவுக்கு உலகம் மாறிவிட்டது.
சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன
சமூக வலைத்தளங்கள் என்பது உலகளாவிய தன்மை கொண்ட, அனைத்து மக்களையும் அருகாமையில் உணர வைக்கும் ஓர் இணைப்பாகும்.
அதாவது பல்வேறு கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வலையமைப்பு வலைத்தளங்கள் எனப்படுகின்றன. இவற்றுக்கு இணையதளம் அடித்தளம் இட்டுள்ளது எனலாம்.
சமூக வலைத்தள உருவாக்க வரலாறு
ஆரம்ப காலங்களில் மனிதர்களுடைய தொலைத்தொடர்புகள் கடிதங்கள் வழியாக நிகழ்ந்த போதிலும் பின்பு தொலைபேசி, கணினி என வளர்ச்சி கண்டு வந்தது.
அவ்வாறே 1997 இல் six Degree எனும் வலைத்தளம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2005 இல் youtube பின்னர் facebook, yahoo, Twitter என, இன்று WhatsApp, Instagram, Viber, messenger போன்ற பல்வேறு வலைத்தளங்கள் உருவாகி, பலகோடி பயனர்களை கொண்டுள்ளதாக இன்று மாறி உள்ளன.
சமூக வலைத்தளங்களின் நன்மைகள்
சமூக வலைத்தளங்களின் மூலமாக உலகில் நடைபெறும் பல்வேறு செய்திகளையும், தகவல்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும், என்ற ஆர்வலர்களின் ஆசைகள் நிறைவு செய்யப்படுவதோடு, இணையவழி கல்வி கற்றல், வீட்டிலிருந்தபடியே நல்ல புத்தகங்களை வாசிக்க முடிதல்,
திறமைகளுக்கும் பல்வேறு கலைகளுக்கும் தளமாக அமைதல், உலகிலே நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளையும், வன்முறைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிதல் மற்றும் கடல் கடந்தும் நட்புகளை உருவாக்கிக் கொள்ள முடிதல் போன்ற பல்வேறு நன்மைகளை வலைத்தளங்கள் தருகின்றன.
சமூக வலைத்தளங்களின் தீமைகள்
சமூக வலைத்தளங்களின் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும் கூட, அதிகமாக வலைத்தளங்களை பாவிப்பதனால் உடலியல் சார் நோய்கள் ஏற்படுதல் (பார்வைக் குறைபாடு, தலைவலி),
அதிகமாக வலைத்தளங்களை உபயோகிப்பதால் தனிமனித முயற்சியை திறமைகள் என்பன மழுங்கடிக்கப்பட்டு சோம்பேறியாக மாறுதல், சிறுவர்களை தவறான வழியில் மாற்றுதல், மற்றும் குடும்ப வன்முறைகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு தீமைகளும் இந்த வலைத்தளங்களின் மூலம் மனிதன் அடைந்து கொள்கின்றான்.
முடிவுரை
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழிக்கு இணங்க, வலைத்தளங்களையும் நாம் அளவுடனே உபயோகிக்க வேண்டும்.
அதாவது வலைதளங்களை உருவாக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட வலைத்தள பாவணைக்கு குறைவான நேரத்தையே செலவழிக்கின்றன.
ஆனால் எமது நாட்டில் இளைஞர்களின் முழு நேர வேலையாகவே இந்த வலைதள பாவனை மாறி உள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு நாம் செயற்படுவது அவசியமாகும்.
You May Also Like: