தமிழ் மொழியில் உருவான முதலாவது பேசும்படம் காளிதாஸ் ஆகும். இது தென்னிந்தியாவில் 1931ல் வெளியானது. காளிதாஸ் எனும் திரைப்படம் வெளியாகி பல வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆயினும் இன்று நாம் பார்க்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் வித்திட்டது இந்த காளிதாஸ் திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படத்தை உருவாக்கி முடிப்பதற்கு 8000 ரூபாவே செலவு ஏற்பட்டிருந்த போதிலும் இந்த திரைப்படத்திற்கான வருமான வசூல் மிக அதிகமாக காணப்பட்டது. இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் யாதெனில் இங்கு 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தமை ஆகும்.
பேசும் படத்தின் இயல்புகள்
ஒரு திரைப்படம் நல்லதொரு பொழுதுபோக்கு அம்சமாக காணப்படுவதற்கு அதற்கென்று தனித்துவமான அம்சங்கள் சில காணப்பட வேண்டும். குறிப்பாக சிறந்த கருவினை மையமாகக் கொண்ட கதை, பாடல், காதல், இசை, சண்டை, நகைச்சுவை, கிளேமாக்ஸ் போன்ற அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படுத்தியே சிறந்த ஒரு பேசும்படத்தை தயாரித்தல் வேண்டும்.
திரையில் வரும் திரைப்படத்தை பார்ப்பவர் உயிரோட்டம் பெற வேண்டும். நடிப்பு என்று தெரியாத வண்ணம் யதார்த்தமாக இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் சிறந்த ஒரு பேசும்படமாக பிரபல்யம் அடையும்.
காளிதாஸ் திரைப்படத்தின் வரலாறு
இன்று நாம் அனைவரும் பார்க்கும் பேசும் படங்களுக்கும் வித்திட்டது காளிதாஸ். இந்த திரைப்படம் 1931 அக்டோபர் 31 அன்று முதலாவது காட்சி சென்ட்ரல் திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது.
அன்றைய காளிதாஸ் திரைப்படத்தின் விளைவாலேயே இன்று வளர்ச்சி அடைந்த பல தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய பல தரத்துடன் கூடிய சிறப்பு வாய்ந்த திரைப்படங்களைக் காண முடிகின்றது.
காளிதாஸ் திரைப்படம் கி.பி 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மொழியைச் சேர்ந்த மகாகவிஞரான காளிதாஸ் என்பவரது வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இவர் சாகுந்தலம், மேகதூதம் ஆகிய அமர காவியங்களை இயற்றியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் பி.ஜி வெங்கடேசன் மற்றும் டி.பி ராஜலட்சுமி ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். தமிழ்மொழியில் உருவாகிய முதலாவது பேசும்படம் என்ற சிறப்பினை பெற்றாலும் இந்த திரைப்படத்தில் இந்தி, தெலுங்கு போன்ற வேற்று மொழிகளிலான பேசும் வசனங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
காளிதாஸ் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மதுரகவி பாஸ்கரதாஸ் என்ற பாடலாசிரியரால் எழுதப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் 50 பாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பாடல் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியே எழுதப்பட்டுள்ளன.
இந்த திரைப்படத்தை கான் பகதூர் அர்தேசீர் இரானி என்ற புகழ்பெற்ற இயக்குநரின் இம்பசிரியல் மூவிடோன் கம்பனி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. உதவி இயக்குநர் H.M ரெட்டி ஆவார்.
பல கோடி நஷ்டங்களை சில படங்கள் இன்றும் காணுகின்றது. ஆனால் அன்றைய கால கட்டத்தில் 8000 ரூபாய் முதலீட்டில் 75000 ரூபாவை வசூலாகப் பெற்ற வெற்றித் திரைப்படமாக முதல் பேசும்படமான காளிதாஸ் விளங்குகின்றது.
இன்றைய சந்ததியினர் இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும் இந்த திரைப்படத்தினது சிறப்புக்களை நாம் தெரிந்து கொள்வதுடன் ஏனையோருக்கும் அதனை தெரியப்படுத்த வேண்டும்.
You May Also Like: