ஒரு மனிதன் வாழக்கூடிய சூழல் மற்றும் அவனைச் சூளவுள்ள பிரதேசம் என்பன அவனுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் பாரிய செல்வாக்கு செலுத்தக் கூடியதாக உள்ளன.
அந்த வகையில் நாம் தொற்று நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு பெற வேண்டுமாயின் எமது சூழலை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியமானதாகும்.
தொற்று நோய் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டம்
- முன்னுரை
- தொற்றுநோய் என்றால் என்ன
- தொற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
- தொற்று நோய் பரவும் முறைகள்
- தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களை தொற்றக்கூடிய நோய்கள், தொற்ற முடியாத நோய்கள் என இருவகையாக பிரித்து நோக்க முடியும்.
அந்த வகையில் இங்கு ஃப்ளூ, தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, காசநோய், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களை நாம் தொற்று நோய்களாக அடையாளம் காட்ட முடியும். இந்த தொற்று நோய்கள் பற்றிய விரிவான விளக்கத்தை இக்கட்டுரையில் நோக்கலாம்.
தொற்றுநோய் என்றால் என்ன
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களுள், ஒருவருக்கு ஏற்பட்ட நோய் ஏதோ ஒரு காரணியின் மூலம் இன்னும் ஒருவருக்கு பரவுவதே தொற்று நோய் எனலாம்.
அதாவது உணவு, காற்று, நீர், தொடுகை போன்ற காரணிகளின் மூலமாக ஒருவருக்கு இருக்கக்கூடிய நோய்கள் இன்னும் ஒருவருக்கு பரவுவதையே நாம் தொற்று நோய்கள் என அடையாளம் கண்டு கொள்ள முடியும். இவை நீண்டகால தொற்றாகவோ அல்லது குறுங்கால தொற்றாகவோ காணப்படலாம்.
தொற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
ஒரு தொற்று நோய் ஒருவருக்கு பரவுகின்றது என்றால் அதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துவதனை காண முடியும்.
அந்த வகையில் சூழலில் தூய்மையின்மை, முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் இன்மை, உடல் தூய்மையின்மை, நோய் தொற்றுக்கான முறையான சிகிச்சைகள் இன்மை, நீர் காற்று போன்ற மூலப் பொருட்களின் மாசுபாடு, உடலில் காணப்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைவடைதல் போன்றவாறான காரணிகளின் மூலம் இந்த தொற்று நோய்கள் ஏற்படுவதனைக் காணலாம்.
தொற்று நோய் பரவும் முறைகள்
ஒருவருக்கு ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு விட்டால் அது அச்சூழலில் உள்ள அனைவரையும் தொற்றுக்கு உள்ளாக்கும் நோய் காவியாக மாறிவிடும்.
அந்த வகையில் இவ்வாறான நோய் காவிகள் பரவும் முறைகளாக பின்வருவனவற்றை காணலாம்.
அதாவது நோய் தொற்றுக்கொள்ளானவர்களுடன் நெருக்கமாக பழகுதல், தொடுதல் அவர்கள் உண்ட உணவுகளை உண்ணுதல், உடல் திரவங்களை பரிமாற்றிக் கொள்ளுதல் மற்றும் நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு முறையான சிகிச்சைகள் இன்மை போன்றவற்றின் மூலமாக தொற்று நோய்கள் பரவுவதனை காணலாம்.
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள்
ஒரு தொற்று கிருமி பரவுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் சூழலாகும். எனவே சூழலில் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதாக நோய் தொற்றிலிருந்து தடுத்துக் கொள்வதற்கு உதவியாக அமையும்.
மேலும் சுத்தமான உணவு நீர் காற்று என்பவற்றை நுகர்தலே சிறந்ததாகும். தொற்று நோயாளிகளை சிகிச்சையளிக்க, தனிமைப்படுத்த வேண்டும். தேவையான அளவு வலி நீக்கிகள், ஓய்வு மற்றும் திரவங்கள் கொடுத்தல், ஆன்டிபயாடிக் அளித்தல் வேண்டும்.
மற்றும் முழுமையாக பாதுகாக்கக்கூடிய இன்புளுயன்சா நோய்க்கு எதிராக பாதுகாக்கக் கூடிய, சாகடிக்கக்கூடிய இன்புளுயன்சா தடுப்பு ஊசி பயன்படுத்தல் போன்றவற்றின் ஊடாக தொற்றுநோய் பரவுவதில் இருந்து தடுத்துக் கொள்ள முடியும்.
முடிவுரை
நாம் வாழும் சமூகமும் தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சகட்டத்தை தொட்ட ஒன்றாக காணப்படுகின்ற போதும், பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் எழுத்தறிவு விகிதம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவே இவ்வாறாக கிராமம், சேரிப்புறங்களில் வாழக்கூடிய மக்களே முறையான வடிகால் கழிவகற்றல் சூழல் காணப்படாமையினால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே இவ்வாறான மக்களுக்கு தொற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களுடைய ஆரோக்கியத்தை காப்பது எம் ஒவ்வொருவரும் கடமையாகும்.
You May Also Like: