நாம் வாழும் பூமியின் வயது ஏறக்குறைய 450 கோடி ஆண்டுகளாகும். பூமியானது பாறைகளால் ஆன கோளாகும். மலைகள் சமவெளிகள் பள்ளத்தாக்குகள் எனத் திடமான பல்வேறு வகை தரைப்பகுதிகள் பூமியில் காணப்படுகின்றன.
பூமியானது தரைப்பகுதியைக் கொண்ட மற்றைய கோள்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம் இது கடலால் சூழப்பட்ட கோள் என்பதனாலாகும்.
பூமியின் சுழற்சி
பூமியின் விட்டம் 12,742 கி.மீ, சுற்றளவு 40,075 கி.மீ ஆகும். பூமியின் நிறை 5.98×1024 கிலோ கிராம்.
இவ்வளவு பெரிய பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. பூமியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரம் இருப்பதற்குப் பூமி சுற்றுவது தான் காரணம் ஆகும்.
பூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ என்னும் வேகத்தில் சுழல்கிறது. அதாவது ஒரு நொடிக்குக் கிட்டத்தட்ட 30 கி.மீ. வேகம் ஆகும்.
பூமி சுழல்வதோடு பூமியில் வாழும் நாம் சுழலாமைக்குக் காரணம்
நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும், அதாவது பெருங்கடல்கள் மற்றும் காற்று மண்டலம் உட்பட பூமியுடனேயே சேர்ந்து பூமி சுழலும் அதே வேகத்திலேயே சுழல்வதால் நமது சுழற்சியை நாம் உணர்வதில்லை.
எடுத்துக்காட்டாக நாம் வாகனத்தில் சீரான சாலையில் சீரான வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது தண்ணீர் குடிக்க முடியும். அப்போது தண்ணீரும் சிந்துவதில்லை. காரணம் நாம் பயணம் செய்யும் வாகனத்தில் உள்ள பொருட்களின் வேகமும் வாகனத்தின் வேகத்திற்க்கு இணையாக இருக்கும்.
இயக்க நிலையில் உள்ள வாகனத்தை சடுதியாக நிறுத்தினால் எம்மால் இயக்க நிலையை உணர முடியும். அதேபோல் பூமியின் சுழற்சி தடைபட்டால் மட்டுமே நம்மால் பூமியின் சுழற்சியை உணர முடியும்.
பூமி தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே, பூமியை சுற்றியுள்ள காந்த மண்டலம் செயலிழந்து போய்விடும். இதனால் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களினால் பூமியில் உள்ள மீத உயிர்களும் அழிந்துவிடும்.
எனவே, நாம் வாழும் இந்த பூமியானது நீர், நிலம், காற்று இல்லாமல் நமக்கு தெரியாத ஈர்ப்பு விசை, காந்த மண்டலம் மற்றும் பூமியின் சுழற்சி போன்றவற்றை கொண்டு இன்றுவரை நம்மை அழிவில் இருந்து இயற்கையாகவே நம்மை பாதுகாத்துவருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
பூமியின் சூரியச் சுழற்சியின் முக்கியத்துவம்
பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான ஈர்ப்புவிசை மிகவும் அதிகம் என்பதனால்தான், பூமி சூரியனைச் சுற்றுகின்றது.
பூமியானது சூரியனைச் சுற்றி வருவதனால்தான் நமக்கு பகல், இரவு தோன்றுகின்றது. இதுவே காலத்தை அளப்பதற்கான நாள் எனும் அளவீட்டினை வழங்குகின்றது. பூமி சுழல்வதால்தான் மிகப் பெரும் பொளதீக மற்றும் உயிரியல் மாற்றம் பூமியில் நிகழ்கின்றது.
You May Also Like: