பஞ்சும் பசியும் எனும் நாவலை எழுதியவர் | தொ. மு. சி. ரகுநாதன் |
தொ. மு. சி. ரகுநாதன்
1923ல் அக்டோபர் 21 இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் ரகுநாதன் பிறந்தார். இவருடைய தந்தையார் தொண்டைமான் முத்தையன் ஆவார்.
ரகுநாதனின் தந்தையார் பிரமமுத்தன் என்னும் புனைபெயரில் 33 தியானச் சிந்தனைகள் என்ற தனி நூலையும் தனிப் பாசுரங்கள் 3, இவை தவிர ஆங்கிலக் கவிதைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவருடைய ஆசிரியர் அ.சீனிவாசராகவன் ஆவார். குருவின் சிறந்த வழிகாட்டலின் மூலம் நற்பேறு பெற்றார்.
தொழிற் பின்ணனி
ரகுநாதன் 1941ல் தன்னுடைய முதலாவது சிறுகதையை விகடனில் வெளியிட்டார். இலக்கியப் பணிகள் தவிர அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னுடைய பங்களிப்பையும் வழங்கினார்.
இதன் காரணமாக 1942இல் சிறைக்குச் சென்றார். சிறைக்காலம் முடிவடைந்த பின்னர் வெளியே வந்து சில காலங்கள் தினமணிப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் பின்பு சில காலங்கள் முல்லை என்ற இலக்கியப் பத்திரிகையிலும் பணி புரிந்தார்.
இலக்கியப் படைப்புக்கள்
ரகுநாதனின் முதலாவது இதழான புயல் 1945களில் வெளி வந்தது. புயல் இதழானது இவரது படைப்புக்களில் குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் இலக்கிய விமர்சனம் ஒன்றையும் படைத்தார். அதற்குப் பின்னர் “பஞ்சும் பசியும்” என்ற புதினத்தை எழுதினார்.
தமிழ் நாட்டில் கைத்தறி நெசவாளர்களினது துன்பங்கள், இன்னல்களை பஞ்சும் பசியும் என்ற நூலின் மூலம் உலகிற்கு வெளிக்கொண்டு வந்தார். மேலும் அந்த நூலில் ரகுநாதன் தன்னுடைய கொள்கைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்த இதழானது செக் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையாகி சாதனை பெற்றது. அந்த ஆண்டே தன்னுடைய சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டார்.
மேலும் பின்னர் இரண்டு வருடங்கள் சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அந்த இதழின் மூலம் சுந்தர ராமசாமி, டேனியல் செல்வராஜ், ஜெயகாந்தன், ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை இலக்கியத் துறைக்கு அறிமுகப்படுத்தினார்.
பின்னர் 10 வருடங்கள் எந்தவொரு அமைப்பும் சாராத எழுத்தாளராக பணி ஆற்றினார். மேலும் சோவியத் நாட்டின் பதிப்பகத்தில் இணைந்து ரஷ்யா நாட்டின் படைப்புக்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து தொகுத்து வெளியிட்டார்.
ரகுநாதனின் பாரதி காலமும் கருத்தும் என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 1983இல் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இலக்கிய விமர்சன நூல் மட்டுமல்லாது இளங்கோ அடிகள் யார் என்ற வரலாற்று ஆய்வு நூலினையும் வெளியிட்டார்.
பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளரான புதுமைப்பித்தன் ரகுநாதனின் நெருங்கிய நண்பர் ஆவார். புதுமைப்பித்தனின் படைப்புக்கள் மற்றும் அவரது வரலாறு போன்றவற்றைத் தொகுத்து வெளியிட்டார்.
புதுமைப்பித்தன் கவிதைகள், விமர்சனங்களும் விஷமங்களும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். அதுமட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்னும் புனைபெயரில் பல கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.
ரகுநாதன் சாகித்ய அகாதமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை பரிசு, பாரதி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
சேற்றில் மலர்ந்து செந்தாமரை, சஷணப்பித்தம், சுதர்மம், ரகுநாதன் கதைகள் போன்ற சிறுகதைகளையும் ரகுநாதன் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், காவியப்பரிசு போன்ற கவிதைகளையும்
புயல், முதலிரவு, கன்னிகா, பஞ்சும் பசியும் போன்ற நாவல்களையும் சிலை பேசிற்று, மருது பாண்டியன், போன்ற நாடகங்களையும்
இலக்கியம், சமுதாயம், பாரதியும் ஷெல்லியும் போன்ற விமர்சனங்களையும் வரலாற்று நூல், ஆய்வு நூல், மொழி பெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
You May Also Like: