அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்

arivurai kovai

அறிவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும். முதுமொழிக்காஞ்சி காஞ்சித்திணை துறைகளுள் ஒன்றாக காணப்படுகின்றது.

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி என்பது உலகியல் உண்மையை தெளிவாக பெருமக்கள் கூறுவதே ஆகும். முதுமொழி என்பது பழமொழி எனும் சொற்பொருளோடு தொடர்புடையது.

அதாவது நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் என்றும் காஞ்சி என்பது தொல்காப்பியம் காட்டும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது.

இந்நூலினை மதுரை கூடலூர் கிழார் என்பவர் இயற்றினார். இந்நூலில் 100 பாடல்கள் காணப்படுகின்றன. இது பதிணென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

முதுமொழிக்காஞ்சி நூலின் அமைப்பும் பாடுபொருளும்

இந்த நூலானது பத்து அதிகாரங்களை கொண்டதாக காணப்படுகின்றது. இந்த நூலானது ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து செய்யுள்களாக 100 பாடல்களை கொண்டுள்ளன. எல்லா அதிகாரத்திலும் முதல் செய்யுள் மட்டும் ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என தொடங்கி ஈரடியால் ஆன வெண் செத்துறை யாப்பில் அமைந்துள்ளது. ஏனைய 9 செய்யுள்கள் ஒரடியால் ஆனவை ஆகும்.

பத்து என்று குறிப்பிடப்படுவது பத்து பொருள்களாகும். சிறந்த பத்து என்பது சிறந்தவையாகிய பத்துப் பொருள்கள் பற்றிதாகும். மேலும் சிறந்த பொருள்கள் பற்றி அறிவுப்பத்து பழியார் என்ற சொல்லால் உலகில் எதையெல்லாம் பழிக்கமாட்டார்கள் என்று பத்து அடிகளில் சொல்வதே பழியாப்பத்து ஆகும்.

எவையெல்லாம் நீங்காது என்பதை சொல்வது துவ்வாப்பத்தாகும். தவிராமை கூறும் பத்து தண்டாப்பத்தாகவும் பத்து அதிகாரங்களை கொண்டமைந்ததாக இந்த நூலின் அமைப்பும் பாடுபொருளும் காணப்படுகின்றது.

முதுமொழிக்காஞ்சியும் வாழ்வியல் சிந்தனைகளும்

முதுமொழிக்காஞ்சியானது பல்வேறு வாழ்வியல் சிந்தனைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான் என்பதானது வாழ்க்கைக்கான இலக்கணத்தை வகுக்கின்றது. இதன் விளக்கம் யாதெனில் வாழ்வில் செல்வாக்கு வேண்டுபவன் தன் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதாகும்.

இதனூடாக வாழ்வியல் சிந்தனைகளை எடுத்தியம்பக் கூடியதாக இந்நூல் அமைந்துள்ளது.

முதுமொழிக்காஞ்சியானது தனிமனித வாழ்வியல் சிந்தனைகள், குடும்ப வாழ்வியல் சிந்தனைகள், சமுதாய வாழ்வியல் சிந்தனைகள் என பலவாறான வாழ்வியல் அம்சங்களை தெளிவுபடுத்தியுள்ளது எனலாம்.

தனிமனித ஒழுக்கம் பற்றிய சிந்தனைகள்

தனிமனிதனானவன் ஒழுக்கத்துடனான வாழ்வை வாழ வேண்டும். அதுவே அவன் உயிருக்கும் உடலுக்கும் நல்லது என ஒழுக்கமுடைமை (சிறந்த பத்து 1) என்ற பாடலடியினூடாக ஒழுக்கத்தை கல்வியினும் மேலானதாக எடுத்துக் காட்டுகின்றது.

அதாவது ஒழுக்கத்தை சான்றோர் மீறினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதினூடாக தனிமனித ஒழுக்கம் பற்றி இந் நூலில் கூறப்பட்டுள்ளது.

தனிமனித வாழ்வியல் சிந்தனை

தனிமனிதனின் குடிபிறப்பு, கல்வி, அறிவுடமை, வாய்மை, ஆளுமை, நோயற்ற வாழ்வு, தவம், சொல்வன்மை போன்றன பற்றியும் இந்நூலானது எடுத்தியம்புகின்றது.

கல்விச் சிந்தனைகள்

கல்விச் சிறப்பு பற்றி இந்நூலில் ஆசிரியர் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றார். அதாவது (சிறந்த பத்து 7) இல் குலத்தின் சிறப்பை விட கல்விச் சிறப்பே ஒரு மனிதனுக்கு உயர்வைத் தரும் என்று கூறுகின்றார்.

மேலும் கற்றவன் ஒருவனின் தரத்தைத் திறத்தை அவளின் அறிவு வெளிப்பாடு வெளிக்காட்டி விடும். (கற்றது உடைமை காட்சியின் அறிப அறிவுப்பத்து 4) இந்த அடியினூடாக கல்வியால் அறிவு மேம்படும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.

வாய்மை பற்றிய சிந்தனை

வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை (சிறப்புப் பத்து, பாடல் 4) என்ற கவித் தொடர் வள்ளல் தன்மையை விடச் சிறந்தது வாய்மை ஆகும் என்றுரைக்கின்றது.

அதாவது தனிமனிதனின் வாய்மை என்பது அவனுக்கு பாதுகாப்பினை நல்கும். எனவே வாய்மை மரபு காக்க முதுமொழிக்காஞ்சி மனிதர்களை வேண்டுகிறது.

சொல்வன்மை பற்றிய சிந்தனை

தனிமனிதனானவன் தன் கருத்தை எவர்க்கும் பயப்படாது உரைக்கும் ஆற்றலை கொண்டிருத்தல் வேண்டும் என்று முதுமொழிக்காஞ்சி கருதுகின்றது.

ஆராய்ச்சி பற்றிய சிந்தனை மற்றும் நோயற்ற வாழ்வு பற்றிய சிந்தனை என பல வாழ்வியல் அம்சங்களை கொண்டமைந்ததாக முதுமொழிக்காஞ்சியானது அமைந்து காணப்படுகின்றது.

You May Also Like:

பா வகையால் பெயர் பெற்ற நூல்

அகநானூறு குறிப்பு வரைக