அ பதிவேடு என்றால் என்ன

a pathivedu endral enna in tamil

நிலம் என்பது பெரும்பாலான மக்களுக்குச் சொந்தமான மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று எனலாம். இது அந்தஸ்த்தின் குறியீடாகவும், மக்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்க ஆசைப்படும் சொத்தாகவும் கருதப்படுகிறது.

எனவே, சொத்து வாங்கும் முன் ஆவணங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி விற்கும் போதும் ஆவணத்தை சரி பார்ப்பது முக்கியமானதாகும்.

நில பரிவர்த்தனைக்கு மிக முக்கியமான பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவற்றைப் போல் அ-பதிவேடும் மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிராம கணக்கில் பெரும்பாலும் இடம் வாங்கும் பொழுது பழைய ஆவணங்களில் இருக்கும் பழைய சர்வே எண்ணை இந்த அ-பதிவேடுடன் ஒப்புமைபடுத்தி கொள்ள வேண்டும்.

அ-பதிவேடு பிழையை திருத்த முதலில் வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். வட்டாட்சியர் முடிவில் திருப்தி இல்லையெனில், வருவாய் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்ய முடியும்.

தமிழகத்தில் உள்ள பதிவேடானது 1980 முதல் 1987 வரை கிராம நிலங்களை நில அளவை செய்து புதிய சர்வே எண்கள் கொடுத்து உருவாக்கப்பட்டதாகும்.

அ-பதிவேட்டில் சர்வே செய்யப்பட்ட காலத்தில் நிலத்தை அனுபவித்த உரிமையாளர்கள் பெயர் காணப்படும்.

இதனால் தற்போதைய உரிமையாளர்களுக்கும், அ-பதிவேட்டில் இருக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே லிங்க் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதனை அறிந்து கொள்ள முடியும். இதனால் நிலம் தொடர்பான பல சட்டச் சிக்கல்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

நில அளவியல் துறை, நிலவரித்திட்டத் துறை

சர்வேயைப் பொறுத்தவரை அரசு இரண்டு வகையாகப் பிரிக்கின்றது. அதாவது நில அளவியல் துறை, நிலவரித்திட்டத் துறை என்பவையாகும். அளந்து தயாரிக்கப்படும் எல்லைகள், அளவு, அளவீடு இவையெல்லாம் ஒரு துறைக்குத் தனியாக கொடுத்துவிடுகின்றது. அதுவே நில அளவியல் துறை ஆகும்.

மேலும், கிராமத்தின் மூலத்தினைப் பற்றிய தகவல்களையும், அதன் ஆதியையும் சொல்ல ஒரு துறை ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதுவே நிலவரித் திட்டத் துறை ஆகும்.

அ பதிவேடு என்றால் என்ன

அ-பதிவேட்டை ஆங்கிலத்தில் A-Register என்பார்கள். கிராமத்தைப் பற்றி அனைத்து பதிவுகளும் அ-பதிவேட்டில் இருக்கும். இதனை கிராமத்தின் சட்டப் புத்தகம் என்றும் கூறுவர்.

அதாவது ஒரு கிராமம் எப்போது எப்படி உருவானது என்பது பற்றிய முழு விவரங்களும் அடங்கி இருக்கும். இதன் மூலம் கிராமத்தின் முழு விவரங்களையும், தன்மைகளையும் தெரிந்து கொள்ளலாம். இது ஒரு நீண்ட கால பதிவேடு ஆகும்.

எனவே இது ஆண்டுதோறுமோ அல்லது, அடிக்கடியோ மாற்றப்படுவதில்லை. எனினும் பெரும்பாலும் கிராமத்தை ஒட்டுமொத்தமாக நில அளவை செய்து ரிசர்வ் செய்தார்கள் என்றால் மட்டும் அ-பதிவு திருத்தப்படும் அல்லது, மாற்றி அமைக்கப்படும்.

அ பதிவேட்டில் உள்ளடங்குபவை

அ-பதிவேடு என்பது வருவாய்த் துறையின் மிக முக்கியமான ஆவணமாகும். இப்பதிவேடு அச்சிடப்பட்டிருக்கும்.

இந்தப் பதிவேட்டில் வரிசை எண் கொடுக்கப்பட்டு சர்வே எண், நிலத்தின் உரிமையாளர் எண், நிலத்தின் வகைப்பாடு ( நஞ்சை, புஞ்சை, மானாவரி ), நில உரிமையாளர் பெயர், பட்டா எண், நிலத்தின் நீள அகலம், ஹெக்டேர் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

அது மட்டுமன்றி அந்நிலம் அரசிடமா அல்லது தனியாரிடமா உள்ளது என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

You May Also Like:

அகவிலைப்படி என்றால் என்ன