சூழ்மண்டலத்தின் செயற்பாடுகளுள் ஒன்றாகவே ஆற்றல் ஓட்டமானது காணப்படுகின்றது.
ஆற்றல் ஓட்டம் என்றால் என்ன
ஆற்றல் ஓட்டம் என்பது சுற்றுச் சூழலில் உள்ள உயிரினங்கள் வழியாக நிகழ்வதே ஆற்றல் ஓட்டமாகும்.
இதனூடாக அனைத்து உயிரினங்களையும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களாக ஒழுங்கமைக்க முடியும் என்பதோடு அந்த உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மேலும் உணவுச்சங்கிலியில் ஒழுங்கமைக்கப்படலாம்.
ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் ஆற்றல் ஓட்டத்தின் உதாரணமானது சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளி ஆற்றலிடமிருந்து தொடங்குகிறது. தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று உணவை தானே உற்பத்தி செய்து கொள்கிறது. மேலும் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலை தாவர பகுதிகளில் சேர்த்து வைத்து கொள்கிறது.
ஆற்றல் ஓட்டத்தின் அவசியம்
அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் தங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களை சார்ந்துள்ளது.
எனவே ஒரே திசையிலான ஆற்றல் ஓட்டத்தை சூரியனில் இருந்து உற்பத்தியாளருக்கும் மற்றும் உற்பத்தியாளரில் இருந்து நுகர்வோருக்கும் செல்வதனை காண முடிகிறது. சூழ்மண்டலத்தில் மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதற்கு நிலையான ஆற்றலானது அவசியமாகின்றது.
மேலும் அதிகரித்து வரும் உலகளாவிய சீர்குலைவிற்கு எதிராக எதிர்ப்பதற்கு இந்த ஆற்றல் ஓட்டமானது அவசியமாகின்றது. தயாரிப்பாளர்களில் காணப்படும் ஆற்றலானது ஒரு நுகர்வோருக்கு கடத்தப்படுகிறது.
மேலும் உயிரினத்தின் உட்பகுதியிலும் நிரந்தரமாக ஆற்றலானது சிக்கிக் கொள்ளாது காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆற்றல் ஓட்டமானது அத்தியாவசியமாகின்றது.
ஆற்றல் ஓட்டத்திற்கான எடுத்துக்காட்டுகள்
வெட்டுக்கிளியானது உணவாக புற்களை உண்ணும் போது புற்களில் உள்ள ஆற்றல் வெட்டுக்கிளிக்கு செல்கிறது. தவளை உணாக வெட்டுக்கிளியை உண்ணும் போது அதனிடம் உள்ள ஆற்றலை தவளை பெறுகிறது.
இந்த ஆற்றலானது பாம்பிற்கு அந்த தவளையை உணவாக உண்பதன் மூலமாக கிடைக்கிறது. கடைசியாக பாம்பை கழுகு உணவாக உண்பதன் ஊடாக ஆற்றலை பெற்றுக் கொள்கிறது. ஆற்றல் அடிப்படையாக சூரிய ஒளி மூலமாக தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதன் மூலமாக ஆற்றல் உற்பத்தியானது நிகழ்கின்றது.
நுண்ணுயிர்கள் அழிந்து போன தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் அதன் கழிவுகளையும் அழித்து எளிமையான மூலக் கூறுகளாக மாற்றி மண்ணில் சேர்க்கிறது. இந்த எளிய மூலக் கூறுகள் தாவரங்கள் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
இந்த ஆற்றல் அடிப்படை நுகர்வோரிலிருந்து உயர்மட்ட வேட்டையாடும் விலங்குகள் வரை செல்லும் ஒரு வட்டப்பாதையில் ஆற்றலானது கடத்தப்பட்டு மீண்டும் மண்ணை அடைகிறது. இவ்வாறே ஆற்றல் ஓட்டமானது நடைபெறுகின்றது.
வெப்ப இயக்கவியல் விதிகள்
ஒரு சூழ்மண்டலத்தின் ஆற்றல் சேமிப்பு மற்றும் இழப்பு வெப்ப இயக்கவியலின் இரண்டு விதிகளை அடிப்படையாக கொண்டு காணப்படுகின்றது.
வெப்ப இயக்கவியலின் முதல் விதி
ஆற்றல் வெவ்வேறு வடிவங்களில் ஒரு அமைப்பில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகின்றது என்பதே முதல் விதியாகும். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்.
உதாரணம்: ஒளிச்சேர்க்கையில் வினைபடு பொருட்கள் (பச்சையம், நீர், கார்பன்) சேர்க்கைச் செயல் மூலம் வேதி ஆற்றல் உருவாகிறது.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
ஒவ்வொரு ஆற்றல் மாற்றத்தின் போதும் அமைப்பில் உள்ள கட்டிலா ஆற்றல் அளவு குறைக்கப்படுகிறது என்பதே இரண்டாம் விதியாகும். ஆற்றலானது ஒரு உயிரினத்திலிருந்து மற்றொன்றிற்கு உணவு வடிவில் கடத்தப்படும் பொழுது ஆற்றலின் ஒரு பகுதி உயிர்த்திசுவில் சேகரிக்கப்படுகின்றது.
You May Also Like: