எம் ஒவ்வொருவரதும் வாழ்க்கை பயணத்தின் ஆரம்பத்தில் இருந்து கணக்கு உருவாகத் தொடங்கி விடுகின்றது. அதாவது என்னுடைய ஒவ்வொரு நாளும் ஏதோ ஓர் அடிப்படையிலே கணக்குடன் இணைந்ததாகவே சொல்வதனை காண முடியும்.
இதனை நாம் புரிந்து கொள்வோமே ஆனால் கணக்கும் இனிக்கும் என்பது உண்மையாகும். உதாரணமாக நோக்கும் போது எமது வயது, நிறை, உயரம் போன்ற அனைத்துமே கணக்கோடு தொடர்புடையதாகவே காணப்படுகின்றது.
கணக்கும் இனிக்கும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கணக்கின் ஆரம்பம்
- கணக்கின் முக்கியத்துவம்
- கணக்கின் உபயோகச் சிறப்பு
- கணக்கினை இலகுபடுத்துவதற்கான வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள கணிதமானது, இன்று கடினமானது என பலராலும் பேசப்படுகின்றது. ஆனால் கணிதத்தை கடினமானது என எண்ணி எண்ணியே தான் பலர் கணித துறையை கடினமானது என மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஆனால் கணிதத்துறையினை விரும்பி கற்றால் கணிதமும் இனிக்கும் என்பதனை பலர் இன்று உணர்வதில்லை. கணிதமும் இனிக்கும் என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கணக்கின் ஆரம்பம்
கணக்கின் தோற்றம் பற்றி மிகச் சரியாக கூற முடியாவிட்டாலும் கூட இந்த கணிதமானது வேடுவர் காலத்தில் இருந்தே உளரீதியான எண்ணுதல் என்பதோடு தோன்றியதாக பல்வேறு கருத்துக்கள் இன்று காணப்படுகின்றன.
வேடுவர் காலத்தில் காணப்பட்ட எண்ணுதல் தொடர்பான உளரீதியான அறிவு விவசாய பொருளாதாரக் காலத்தில் நாட்காட்டி எண்ணுதல் தொடர்பாக வளர்ச்சி கண்டது.
இவ்வாறே கி.பி 2500 ஆம் ஆண்டு சுமேரியர்களால் நிறைகளும், அளத்தல் தொடர்பான எண் கணிதங்களும் பயன்படுத்தப்பட்டது.
அதேபோன்று கிரக காலத்தில் எண் கணிதம், கேத்திர கணிதம், வான சாஸ்திரம் போன்ற பல்வேறு கணிதத்துறை சார் வளர்ச்சிகள் இடம்பெற்றன. இவ்வாறாக படிப்படியாக கணிதம் வளர்ச்சி அடைந்து வந்திருப்பதனை காண முடியும்.
கணக்கின் முக்கியத்துவம்
மனிதனுடைய வாழ்நாளில் அவன் ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கு கணித அறிவு அவசியமானதாகவே காணப்படுகின்றது.
அதாவது அன்றாட கொடுக்கல் வாங்கல், வருமானம், வீட்டு செலவுகள், வியாபாரம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் போன்ற அனைத்திலும் இன்று கணித அறிவு மிகவும் முக்கியமானதாகவே காணப்படுகின்றது.
அதேபோன்று உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல் போன்ற பாடத்துறைகளை தாண்டி சமூகவியல், புவியியல், வரலாறு, தர்க்கவியல், மெய்யியல் போன்ற அனைத்து பாடத்துறைகளுக்கும் கணிதம் அவசியமான ஒன்றாகவே இன்று மாறிவிட்டது.
கணக்கின் உபயோகச் சிறப்பு
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்று சான்றோர்களின் கருத்துக்கு அமைய எழுத்துக்களை கொண்டு ஏனைய துறைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோன்று எண் கணிதங்களைக் கொண்ட கணக்கும் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
ஒருவன் கணிதத்துறையில் சிறந்து விளங்கினால் ஏனைய அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
அதாவது கணித உபயோகத்தின் மூலம் பொருளாதாரத் துறை, அபிவிருத்தி துறை, விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வு முறை போன்ற அனைத்திலும் சிறப்பான பலனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கணக்கினை இலகுபடுத்துவதற்கான வழிமுறைகள்
மாணவர்கள் மனதில் கணிதம் தொடர்பான ஒரு கசப்பான எண்ணமே அதிகமாக காணப்படுகின்றது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளாக கூட இருக்கலாம்.
ஆகவே சிறு வயதிலேயே கணிதம் தொடர்பான அறிவை வழங்கும் போது குழந்தைகளுக்கு விளையாட்டுக்களோடு தொடர்பான எண் கணிதங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
மனக்கணிதம் தொடர்பான தெளிவை வழங்குதல், மாதிரி வடிவங்களை பயன்படுத்தி கற்றுக்கொடுத்தல், சமன்பாடுகளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்பானதாக இணைத்துச் சொல்லிக் கொடுத்தல் போன்ற நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கணக்கை இலகுவானதாக மாற்ற முடியும்.
முடிவுரை
கணிதத்துறை என்றாலே பல மாணவர்களின் மனதில் கசப்பான ஓர் எண்ணமே காணப்படுகின்றது. நாம் வாழும் இன்றைய 21ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் இந்த கணித துறையின் பங்கும் மகத்தானதாகவே காணப்படுகின்றது.
கல்வித் துறைகளில் சாதனைகளைப் படைக்க கணித நுட்பங்கள் மிகவும் அடிப்படையான அம்சமாகவே விளங்குகின்றன.
ஒவ்வொரு மாணவர்களும் எளிய முறைகளைக் கொண்டு கணித பயிற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதோடு கணிதத்தை விரும்பி கற்றால் “கணக்கும் இனிக்கும்” என்பது இங்கு சாத்தியமாகும்.
You May Also Like: