கழிப்பறை விழிப்புணர்வு வாசகங்கள்

மனிதனின் ஆரோக்கிய வாழ்வில் கழிப்பறை சுத்தம் பேணப்படுதல் அவசியமானதாகும். நமது உடலில் தேக்கி வைத்துள்ள கழிவுகளை முறையாக வெளியிடுவதற்கு கழிப்பறைகள் பயன்படுகின்றன. கழிப்பறைகளை சுத்தமாக பேணுவது எம் அனைவரதும் கடமையாகும்.

மேலும் கழிப்பறைகளில் காலணிகளை அணிந்து கொண்டு செல்வது மிக முக்கியமானதாகும். ஏனெனில் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் ஏற்படும் இடமாகவே கழிப்பறைகள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து பாதுகாப்பு பெற கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருத்தல் எம் அனைவரினதும் கடமையாகும்.

இன்று பல பொது இடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு காணப்படுகின்றது ஆனாலும் இவ்வாறான கழிப்பறைகளை விட்டு விட்டு சிலர் பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக கிருமி தொற்றுகள், வாந்திபேதி, தொற்றுநோய்கள் என பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிலர் இறந்தும் போகின்றனர், பலர் ஆரோக்கியத்தை இழந்து பல்வேறு நோய் நிலைக்கும் ஆளாகின்றனர்.

எனவேதான் முறையாக கழிப்பறைகளை பயன்படுத்துகின்ற போதே ஆரோக்கியமாக வாழ முடியும். கழிப்பறைகளை அமைக்கும் போது காற்றோட்டமிக்கதாகவும், வெளிச்சம் புகக்கூடியதாகவும் அமைப்பதோடு மாத்திரமல்லாமல் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு கருத்துகளையும் பரப்புதல் வேண்டும்.

அந்த வகையில் கழிப்பறை விழிப்புணர்வு வாசகங்களை இந்த பதிவில் நோக்கலாம்.

கழிப்பறை விழிப்புணர்வு வாசகங்கள்

மோசமான கழிப்பறை ஆரோக்கியத்தை கெடுக்கும்.! சுத்தமான கழிப்பறை ஆரோக்கியத்தை காக்கும்.!

முறையான கழிவகற்ற.! கழிப்பறையே சிறந்த முறை.!

கிருமிகளை விரட்டுங்கள், கழிப்பறை சுத்தம் பேணுங்கள்.!

வாழ்வை எளிதாக்க.! கழிப்பறையை பயன்படுத்துங்கள்.!

நோய் தொற்றுக்களை தடுக்க சிறந்த கழிப்பறையே தீர்வு.!

உங்கள் கழிப்பறையை சுத்தமாக வைத்திருந்தால் உங்களால் ஆரோக்கியத்தை நோக்கி ஒரு படி எடுத்து வைக்க முடியும்.!

கழிப்பறை இருப்பது ஆடம்பரம் அல்ல அவசியம்.!

திறந்த வெளி தேவையில்லை! கழிப்பறையே எமது தேவை.!

சிறந்த தொற்று நீக்கியே! கழிப்பறையின் சிறந்த பாதுகாவலன்.!

தூய்மையான கழிப்பறைகளே ஆரோக்கியமான வாழ்வை தரும்.!!

அசுத்தமான கழிப்பறைகளே கிருமிகளின் வீடு.!

கழிப்பறையை பயன்படுத்திய பின்பு கைகளை கழுவுங்கள்.!

கழிப்பறையின் சுத்தமே வாழ்வில் நித்தம் தேவை.!

கழிப்பறை கிருமி நீக்கியை பயன்படுத்துங்கள்.! கழிப்பறையை பாதுகாருங்கள்.!

தூய்மையான கழிப்பறையே பாதுகாப்பான இடம்.!

வீட்டுக்கொரு கழிப்பறையே சுகாதாரமான வாழ்விற்கு வழி.!

முறையாக பயன்படுத்தும் கழிப்பறையே முறையான வாழ்க்கைக்கான வழி.!

சுகாதாரமற்ற கழிப்பறை காவு வாங்கும் குழந்தைகளை.. எனவே கழிப்பறையில் சுகாதாரம் பேணு.!

வைரஸை பரப்பும் திறந்த வெளி கழிப்பிடத்தை நீக்கி வீட்டிற்கொரு கழிப்பறை அமைப்போம்.!

சுத்தமற்ற கழிப்பறைகள் பல உயிரினங்களை கொல்லும் உயிர் கொல்லி..!

நோய் தொற்றை தடுப்போம்..! திறந்த வெளி கழிப்பிடத்தை ஒழிப்போம்! கழிப்பறைகளை தூய்மையாக பேணுவோம்.!

அன்றாட தேவையே கழிப்பறை அதன் அவசியத்தை உணர்ந்தால் தேவையில்லை வேற்றறை.!

பள்ளியில் கழிப்பறையே மாணவர்களின் அவசியமான தேவை.!

உடலின் கழிவுகளையும் மனதின் கழிவுகளையும் இறக்கி வைக்கும் இடமே கழிப்பறை.!

சுற்றுச் சூழலின் அழகை பேண கழிப்பறைகளை அழகாக்குவோம்.!

கழிப்பறை அமைப்போம்! முறையாக கழிவகற்றுவோம்.!

ஆரோக்கியத்திற்கு வழியமைப்போம்! வீதிக்கொரு கழிப்பறை அமைப்போம்.!

திறந்த வெளி கழிப்பிடத்தை ஒழிப்போம்.! சுத்தமான காற்றை சுவாசிக்க கழிப்பறைகள் அமைப்போம்.!

கொடிய மரணத்தை தவிர்க்க கழிப்பறை அமைப்போம்.!

You May Also Like:

கழிப்பறை சுத்தம் கட்டுரை

சுத்தம் பற்றிய வாசகங்கள்