கழிப்பறை சுத்தம் கட்டுரை

kalivarai sutham katturai in tamil

கழிப்பறை சுத்தம் கட்டுரை.

ஒரு மனிதனின் உடலானது அவன் நன்றாக உண்பதன் மூலமும் உறங்குவதன் மூலமும் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றுவதன் மூலமுமே ஆரோக்கியம் அடைகின்றது.

எனவே அவன் கழிவுகளை முறையாக வெளியேற்றும் கழிப்பறைகள் மூலம் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் அவை சுத்தமானதாகவே இருக்க வேண்டும்.

கழிப்பறை சுத்தம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கழிப்பறைகளின் தோற்றம்
  3. கழிப்பறையின் முக்கியத்துவம்
  4. கழிப்பறை திட்டங்கள்
  5. கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் இன்றியமையாததாக காணப்படுகின்றது. எனவே மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் அவர்களின் சுகாதாரமும், சுற்றுச்சூழலும் ஆரோக்கியமானதாக காணப்பட வேண்டும்.

எனவே சுகாதாரமான வாழ்க்கையைப் பேணுவதற்கு கழிப்பறைச் சுத்தம் இன்றியமையாத ஒன்றாகும்.

கழிப்பறைகளின் தோற்றம்

மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு முற்பட்ட காலத்தில் மறைவான புதர்கள், வெட்டவெளிகள் போன்ற இடங்களிலே மனிதன் கழிவுகளை அகற்றி வந்துள்ளான்.

இதன் தொடர்ச்சியாக 19ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலில் தனிப்பட்ட கழிப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் கழிப்பறைகள் உலகில் எல்லா நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதை காண முடிகின்றது.

கழிப்பறைகளின் முக்கியத்துவம்

மனிதனின் அன்றாட கடமைகளில் ஒன்றாக காணப்படும் மலம் மற்றும் சலம் என்பவற்றை கழிப்பதற்காக கழிப்பறைகள் முக்கியம் பெறுகின்றன.

அதாவது முன்னைய காலங்களில் முறையான கழிப்பறைகள் இன்றி மனிதன் கழிவுகளை அகற்றியமையினால் பல்வேறு கிருமி தொற்றுகளும், வாந்திபேதி போன்ற தொற்று நோய்களும் ஏற்பட்டன. கோலாரா நோய் ஏற்றப்பட்டமைக்கு இதுவே காரணமாக இருந்தது.

எனவே மனித கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு கழிப்பறைகள் முக்கியமானவையாக காணப்படுகின்றன.

கழிப்பறைத் திட்டங்கள்

எமது நாட்டில் அபிவிருத்தி அடையாத கிராமங்கள் மற்றும் புறநகர்களில் சுகாதாரத்தை பேணும் நோக்கில் அரசாங்கம் கழிப்பறை திட்டங்களையும், கழிப்பறைகளை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருவதனையும் காண முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்

கழிப்பறைகளை உருவாக்குவது மட்டுமின்றி அவற்றினை சுத்தமாக வைத்திருப்பதும் எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். அதாவது தனிப்பட்ட கழிப்பறைகளை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் கிருமி தொற்று நீக்கிகளை பயன்படுத்தி சுத்தம் செய்வது அவசியமானதாகும்.

கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் தூரிகைகளை ஆறு மாதத்திற்கு ஒரு தடவை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைகள் காற்றோட்டமானதாக இருந்தால் ஈரப்பதன் குறைவாக காணப்பட்டு கழிப்பறையில் கிருமிகளும் வளராமல் போகும்.

எனவே கழிப்பறைகளை காற்றோட்டமானதாகவும், வெளிச்சம் புகக் கூடியதாகவும் அமைப்பதன் மூலமும் கழிப்பறையின் சுத்தத்தை பேணலாம்.

முடிவுரை

உலகிலே ஒவ்வொரு நாட்டினதும் சுகாதார துறையின் வளர்ச்சியானது, அந்நாட்டிலுள்ள கழிப்பறைகளை வைத்து தற்காலங்களில் மதிப்பிடப்படுகின்றன.

எனவே அரசாங்கம் கூறும் விழிப்புணர்வுகளை கவனத்திற்கொண்டு, கழிவறைகளை சரியான முறையில் பயன்படுத்துவதோடு, அவற்றை சுத்தமாக வைத்திருப்பதும் எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

You May Also Like:

சுத்தம் சுகம் தரும் கட்டுரை