இந்த உலகில் காணப்படும் அனைத்து உயிர்களிடத்திலும் காருண்யத்துடன் இருப்பது கட்டாயமாகும். காருண்யம் உடையவர்கள் இருப்பதனாலேயே தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. காருண்யம் என்பது கருணையின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றது.
காருண்யம் என்றால் என்ன
காருண்யம் என்பது கருணையை சுட்டுகின்றது. அதாவது பசித்தவர்களுக்கு உணவு அளித்தல், வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்தல், எதையும் எதிர் பாராமல் பிறருக்கு உதவுவது போன்றவற்றை குறிப்பது காருண்யம் எனலாம்.
மேலும் காருண்யமானது பிறருக்கு தீங்கிழைக்காமல் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்வதாகும். இவ்வாறு செயற்படுவதனையும் காருண்யமாக கருத முடியும்.
காருண்யம் ஏன் அவசியம்
இன்றைய உலகில் நாம் உயிர்களிடத்தில் அன்பு காட்டவும், பிறருக்கு உதவி செய்யவும், மிருகங்களிடம் ஜீவகாருண்யத்துடன் நடந்து கொள்ளவும் காருண்யம் அவசியமாகும்.
இன்றைய உலகமானது சுயநல போக்குடையதாக மாறிக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் போட்டி, பொறாமை, நயவஞ்சகம் போன்றவற்றை இல்லாதொழிக்க காருண்யம் முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது.
கருணை காட்டும் போது பிறருடைய நலனில் அக்கறை செலுத்தும் பண்பு ஏற்படுகின்றது. அந்த வகையில் பிறரிடத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவதற்கு காருண்யம் அவசியமாகின்றது.
ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யம் என்பது மனிதன் மனிதனுக்கு கருணை காட்டுவது போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் கருணை காட்டுவதனையே ஜீவகாருண்யம் எனலாம். அதாவது அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு காட்டுதலாகும்.
பசி, பிணி, தாகம், எளிமை, பயம், கொலை போன்ற துன்பங்களால் வருந்தும் உயிர்களுக்கு உண்மையான அன்பு, தயவு, கருணை, இரக்கம் கொண்டு நம்மால் முடிந்தளவிற்கு உபகாரம் செய்வது ஜீவகாருண்யம் என குறிப்பிடலாம்.
இன்றைய உலகில் காருண்யத்தின் செல்வாக்கு
உலகமானது நிலையானதாகவும் சீரானதாகவும் நிலை பெற்றுக் காணப்படுவதற்கு காருண்யமான மனிதர்கள் வாழ்வதே காரணமாகும். இன்று உலகமானது ஒரு சம நிலையுடன் காணப்படுவதற்கு அன்பு, கருணை போன்ற நல்ல குணங்களினாலேயே இவ் உலகம் சீரானதாகவும் செழிப்புமிக்கதாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று போதை என்ற ஒரு கொடிய பொருள் அனைவரையும் ஆட் கொண்டுள்ளதன் காரணத்தினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு காருண்யம் என்பதொன்று இல்லாமலே போய் விட்டது எனலாம்.
உதாரணமாக:- போதை தலைக்கேறியதன் காரணமாக தன்னுடைய தந்தை என்றும் பாராது மகனானவன் தந்தையை கொலை செய்கின்றான். கற்பழிப்பு, கொள்ளை, கொலை என பல காருண்யமற்ற செயல்கள் நடந்தேறுவது காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான குற்றச் செயல்களை தவிர்ந்து கருணையோடு நடந்து கொள்வதற்கு ஆரம்பத்திலிருந்தே கருணை பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் இவ்வாறான குற்றச் செயல்களிலிருந்து அனைவரும் விலகி நடந்து கொள்ள முடியும்.
சமூகத்தில் தீய பழக்க வழக்கங்களை இல்லாதொழிக்க ஒவ்வொரு தனி நபரிடத்திலும் இருந்து மாற்றமானது துவங்கப்பட வேண்டும். இதனூடாக சிறந்த முறையில் கருணை மற்றும் அன்பினை ஏற்படுத்த முடியும் எனலாம்.
காருண்யத்தினூடாக ஒரு மனிதனிடத்தில் எவ்வாறு கருணை காட்ட வேண்டும் என்பது பற்றியும் அனைவரிடத்திலும் காருண்யத்துடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அனைத்து மதமும் சிறந்த முறையில் தெளிவூட்டுகின்றது என்பதனை குறிப்பிடலாம்.
இவ்வாறாக சிறந்த முறையில் காருண்யத்துடன் நடந்து கொள்வதனூடாக சிறந்த சமூதாயத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலமாக அனைவரிடத்திலும் காருண்யத்துடன் இருப்பதோடு இறைவனும் எம் மீது காருண்யத்தினை பொழிவார் எனக் கொள்ளலாம்.
You May Also Like: