சதுப்பு நிலங்கள் இன்று பல்வேறு இடங்களில் அமைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் சதுப்பு நிலங்கள் உவர்ப்பு மற்றும் தண்ணீர் சதுப்பு நிலங்கள் என இரு வகைகளாக காணப்படுகின்றன. இன்று பல்வேறு வகையில் பூமிக்கு உறுதுணையாக சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன சதுப்பு நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வகையில் ஒன்றாகும்.
சதுப்பு நிலம் என்றால் என்ன
சதுப்பு நிலம் என்பது சேற்றினை கொண்டதொரு பகுதி ஆகும். அதாவது சதுப்பு நிலத்தினை ஈரநிலம் என்று அழைக்க முடியும்.
சதுப்பு நிலமானது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும் நீர்வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய ஒரு பகுதி ஆகும்.
சதுப்பு நிலங்களின் சிறப்புக்கள்
சதுப்பு நிலங்கள் உணவு உற்பத்திக்கான சிறந்த சூழலை ஏற்படுத்துகின்றது. அதாவது அதிக நீர் உள்ளதன் காரணமாக அவை பல்வேறு தானியம் மற்றும் பயிர்களை உருவாக்க துணைபுரிகின்றது.
இந்த நிலங்களானவை ஊட்டச்சத்து கட்டுப்பாடு, உயிரியல் உற்பத்தி போன்ற சுற்றுச் சூழலின் சமநிலையில் தலையிடுகின்றன. இதனுடாக இயற்கை பாதுகாப்பிற்கு துணை செய்வதோடு சூழல் சமநிலை பேணவும் வழியமைக்கின்றது.
சதுப்பு நிலங்கள் மழைக்காலங்களில் நீரை சேமிக்கவும் வெள்ளத்தில் இருந்து சுற்றியுள்ள நிலப்பரப்பினை பாதுகாக்கவும் சதுப்பு நிலங்கள் உதவுகின்றன. ஏனெனில் பூமியின் சிறுநீரகங்களாக சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.
பல்வேறுபட்ட உயிர்களின் பெருக்கதிற்கு முக்கியமானதொரு காரணமாக சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன. அதாவது பறவைகள், தாவரங்கள் போன்றவற்றிக்கு சிறந்த வாழ்விடங்களை வழங்கி வருகின்றமை இதன் சிறப்பாக கருதலாம்.
சதுப்பு நிலங்களை பாதுகாப்பது எவ்வாறு
இன்றய காலகட்டத்தில் சதுப்பு நிலங்களை பல்வேறு தேவைக்காக அபிவிருத்தி எனும் நோக்கில் அழிக்கின்றனர். இவ்வாறு செய்வதனை தவிர்த்து தன்னார்வ அமைப்புக்களை ஊக்குவிப்பதோடு அரசுசார் நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தி இதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
சதுப்பு நிலங்களின் அவசியம் மற்றும் சூழலியல் மாற்றத்தால் சதுப்பு நிலத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் அதனால் உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் சதுப்பு நிலங்களை பாதுகாக்க முடியும்.
சதுப்பு நிலம் காணப்படும் பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அரசு அறிவிப்பதோடு அப்பிரதேசத்தில் பாதிப்பினை ஏற்ப்டுத்துவோருக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக சதுப்பு நிலத்தை பாதுகாக்கலாம்.
சதுப்பு நிலங்களில் உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுகளை அதனுள் சேரமால் தடுப்பதோடு அத்தைகைய தொழிற்சாலைகளை சதுப்பு நில பகுதிகளில் அமைப்பதை தவிர்த்தல் வேண்டும்.
சதுப்பு நில காடுகளின் பயன்கள்
சதுப்பு நில காடுகளானவை இன்று பல்வேறுபட்ட உயிரினங்களின் உறைவிடமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் உயிரினங்களுக்கு அவசியமான பல்வேறு வகையான உணவுகளையும் கொண்டமைந்துள்ளது.
சதுப்பு நில காடுகளானவை புயல், வெள்ளம், மண்அரிப்பு வெள்ளப்பெருக்கு போன்ற மனிதனுக்கு இடர்விளைவிக்கும் அனர்த்தங்களில் இருந்து அனைவரையும் காக்கின்றது.
கடலுணவு உற்பத்திக்கு சதுப்பு நில காடுகள் உறுதுணையாக காணப்படுகின்றன. அதாவது ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இக்காடுகள் இல்லையெனில் மீன்களே இல்லை என சுட்டிக்கட்டுகின்றனர்.
புலம்பெயர்ந்த பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு சதுப்பு நில காடுகள் துணைபுரிவதோடு காலநிலை மாற்றத்திற்கான விளைவுகளை தாங்கவும் துணைபுரிகின்றது.
சதுப்பு நில காடுகளானவை மனிதன் உயிர்வாழ தேவையான அதிகளாவான ஒட்சிசனை வழங்குகின்றது. இதனூடாக அனைவரையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இக்காடுகள் தொழிற்படுகின்றன. இவ்வாறான சதுப்பு நில காடுகளை அழிக்காமல் அதனை சிறந்த முறையில் பாதுகாப்பதன் மூலம் நாடு செழிப்புற விளங்குவதற்கு இக்காடுகள் துணைபுரிகின்றது.
You May Also Like: