சமுதாயம் என்றால் என்ன

samuthayam enral enna in tamil

மனித குலத்தின் இருப்பாக சமுதாயத்தினை கூறமுடியும். அதாவது சமுதாயமானது இன்று அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

சமுதாயம் என்றால் என்ன

சமுதாயம் என்பது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்தில் உட்பட்ட சமூக பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவை சமுதாயம் எனலாம். சமூகம், சமுதாயம் என்பன ஒரே பொருளினை சுட்டக்கூடியதாகும்.

அதாவது தனித்துவமான பண்பாடு, கலாச்சாரம் ரீதியான விடயங்கள், ஒரே எல்லைக்குள் வாழ்தல் போன்றவற்றை கொண்டமைந்ததாக ஒரு சமுதாயம் காணப்படும். சமுதாயமானது குறிப்பிட்ட மக்கள் குழுவினை குறிக்கின்றது.

சமுதாய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

சமுதாயமானது வளர்ச்சியை காணவேண்டுமெனின் அதனுள் இளைஞர்களின் பங்கு மிக அவசியமானதொன்றாகும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்த்தலின் மூலம் ஓர் சிறந்த இளைஞர் சமுதாயமானது எதிர்காலத்தில் உருவாகும். சிறு வயதில் இருந்தே நல்வழிப்படுத்தலில் ஈடுபடுத்துவதன் ஊடாக ஓர் சிறந்த சமுதாயத்தினை உருவாக்க முடியும்.

இன்றைய இளைஞர்களிடம் சமுதாய அக்கறையானது குறைவாகவே காணப்படுகின்றது. இன்று இளைஞர்களுடைய வாழ்க்கையானது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் என்றாகிவிட்டது.

இன்று சமூகத்தில் பல்வேறு தீய பழக்கவழக்கங்கள் இடம்பெறுகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. இளைஞர்கள் சிறந்தவர்களாக செயற்படுவதனூடாக ஒரு சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இளைஞர்களிடம் சாதிக்கும் திறன் அதிகரித்தே காணப்படுகின்றது. இவ்வாறானதொரு உணர்வானது தனது நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக அமையும்.

மேலும் அதிகமான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்கின்றனர். இவ்வாறு செல்வதன் ஊடாக எவ்வாறு எமது நாட்டின் அபிவிருத்திக்கு உதவிட முடியும்.

எனவே இளைஞர்களானவர்கள் தம் நாட்டின் தரத்தை உயர்த்துவதற்கு முன் வரவேண்டும். மேலும் தமது வாக்குரிமையை சரிவர பயன்படுத்த வேண்டும். இதுவே சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையாகும்.

இன்றைய உலகமானது அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மேலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்து கொண்டே காணப்படுகின்றது. இதன் காரணமாக பல்வேறுபட்ட இழப்புக்கள் காணப்படுகின்றது.

சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கக் கூடியதாகவே போதைப்பொருள் பாவனையானது காணப்படுகின்றது. இப்போதைக்கு அடிமையாகுதலின் பிரதான கர்த்தாவாக இளைஞர்களே காணப்படுகின்றனர்.

ஒரு சமுதாய வளர்ச்சியின் பிரதான பங்குதாரர்களாக காணப்படுகின்ற இளைஞர்களே இவ்வாறாக காணப்படும் போது சமுதாயமானது முன்னேற்றத்தை காண முடியாது.

எனவேதான் இளைஞர்கள் சமுதாய வளர்ச்சியின் பொருட்டு நல்ல காரியங்களில் ஈடுபடல், சாதிக்கும் உணர்வு, உதவி செய்தல், இன, மத, பேதங்களை இல்லாது ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடல் போன்றவற்றினூடாக ஒரு சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிக்கொள்ள முடியும்.

சமுதாய அமைப்புக்கள்

இன்று பல்வேறு சமுதாய அமைப்புக்கள் இயங்கிக்கொண்டு வருகின்றன. அதாவது கிராம மட்டத்தில் மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டு காணப்படுகின்றமையே சமுதாய அமைப்புக்களாகும்.

இதனூடாக மக்கள் தங்களது தேவைகளை நிறைவு செய்வதுடன் மக்களின் எதிர்கால நலனிற்காக பல்வேறு திட்டமிடல் விடயங்களை மேற்கொண்டும் பொருத்தமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்தும் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த அமைப்புக்களாக கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம், கலாச்சார கழகம் என பல்வேறு அமைப்புக்கள் இயங்கி கொண்டு வருகின்றன. இவற்றினூடாக சமுதாய பிரச்சினைகளை இணங்கண்டு தீர்வுகளை முன்வைக்கின்றனர்.

சமுதாய முன்னேற்றத்திற்கான விடயங்களை மேற்கொள்ளல் என பல்வேறு அபிவிருத்தி விடயங்களை மேற்கொள்கின்றனர். எனவேதான் சமூக அமைப்புக்களும் சமுதாய முன்னேற்றத்தில் பங்கு வகிக்கின்றதனை நோக்க முடிகின்றது.

You May Also Like:

சலனம் என்றால் என்ன

கேட்டல் என்றால் என்ன