தகவல் தொழிநுட்பங்களை குறிவைத்து இடம் பெறும் குற்றமாக சைபர் கிரைம் குற்றங்கள் காணப்படுகின்றன. இணைய ரீதியாக இடம் பெறும் குற்றங்கள் இன்று அதிகளவில் இடம் பெறுகின்றது. இதற்கு காரணம் போதியளவு விழிப்புணர்வு இல்லாமை ஆகும்.
சைபர் கிரைம் என்றால் என்ன
சைபர் கிரைம் என்பது பிறருக்கு தீங்கிழைக்கும் நோக்கில் கணினி, இணையம் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக நடைபெறும் குற்றச் செயல்களாகும்.
இந்த சைபர் குற்றங்கள் கிரிமினல்களின் லாபத்திற்காகவும், கணினிகளை சேதப்படுத்த அல்லது செயலிழக்க செய்வதற்காக நடத்தப்படுகின்றது. இன்று இவ்வாறான குற்றங்கள் அதிகளவில் இடம் பெறுவதனை காணக் கூடியதாக உள்ளது.
அதாவது தனிநபரையோ அல்லது ஒரு குழுவில் உள்ள நபர்களையோ நவீன கால தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலம் அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது உடல் மனதிற்கு நேரடியாகவே மறைமுகமாகவோ துன்பம் தரும் குற்றங்களே சைபர் கிரைம் எனப்படும்.
சைபர் கிரைம் வகைகள்
- தகவல்களை அழிப்பது.
- இணையத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது.
- கணினி மற்றும் தகவல் தொழிநுட்ப சாதனங்களில் இருந்து தகவல்களை திருடுவது.
- மற்றவர்களின் தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது.
- தகவல் தொழில்நுட்ப சேவைகளை திருடுவது.
- சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது.
- இணையவழி பொருளாதார குற்றங்கள்.
சைபர் கிரைமின் நோக்கங்கள்
சைபர் கிரைமினை மேற்கொள்பவர்கள் பவ்வேறுபட்ட நோக்கங்களை கொண்டு இந்த குற்றத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில்,
பிறருடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதனை இணையத்தில் பரப்புதல்.
சட்ட விரோதமாக லாபம் ஈட்டுகின்ற நோக்கில் தகவல்களை மாற்றுதல், சேதப்படுத்துதல், அழித்தல்.
வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்தல். அதாவது இன்டர்நெட் பேங்கிங் லொகின் தகவல்களை, டெபிட்கார்டு தகவல்கள் போன்றவற்றை திருடி அதன் மூலம் பணத்தை எடுத்தல்.
கணினி அல்லது சாதனங்களை சேதப்படுத்தல் அல்லது செயழிலக்க செய்தல். மேலும் ஒருவரின் அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆன்லைன் வழியாக அவரை கண்கானித்தல்.
தகவல்களை திருடி அதனூடாக அவர்களை மிரட்டி பணம் பறித்தல். போன்றவற்றை நோக்காக கொள்ளலாம்.
சைபர் கிரைமில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
நாம் பயன்படுத்தப்படும் கணினிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இணைய வலையமைப்புக்களை தவிர்த்தல் வேண்டும்.
இ-மெயில் தளத்தில் பயன்படுத்தப்படும் கணக்குகளில் இருந்து வேறுபட்டு காணப்படும் வகையிலும் யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் பாஸ்வேர்டுகளை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
ஓர் தகவலை உள்ளீடு செய்வதற்கு முன்பு எஸ்.எம்.எஸ் மற்றும் இ.மெயில் மூலமாக பெறப்படும் யூ.ஆர்.எல் களை பரிசோதித்து தகவல்களை உள்ளீடு செய்தல் வேண்டும்.
எமது வங்கி கணக்கு தகவல்கள், ATM CARD தகவல்கள் போன்றவை பற்றிய விபரங்களை யாரிடமும் சொல்லாது இரகசியமாக பேண வேண்டும்.
கணினிகள் மற்றும் மொபைல் போன்களின் செயலிகள், சாப்ட்வெயார்களை அப்டேட் செய்து கொள்ளல் வேண்டும். மேலும் எமக்கு தேவையான முக்கிய தகவல்களை Backup செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனூடாக எமது சாதனம் செயலிழந்தாலும் எமது தகவல்கள் பாதுகாப்பாக காணப்படும்.
சமூக வலைத் தளங்களினூடாக அனுப்பப்படுகின்ற தேவையற்ற இணைப்புக்களை கிளிக் செய்யாமல் இருத்தல் வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது எம்மால் சைபர் கிரைமில் இருந்து பாதுகாப்பினை பெற்று கொள்ள முடியும். சைபர் கிரைம் போன்ற குற்றங்களில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்வதனை சாதாரண விடயமாக நினைத்துக் கொள்ளாது அதனிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
You May Also Like: