அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது எளிமையான வாழ்க்கைக்கும் அடிப்படையாக தகவல் தொடர்பே அமைந்துள்ளது. இன்று தகவல் தொடர்பானது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றதனை காணக்கூடியதாக உள்ளது.
தகவல் தொடர்பு என்றால் என்ன
தகவல் தொடர்பு என்பது ஓரிடத்திலிருந்த தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தோடு எமது தகவல்வளை பரிமாரித்துக்கொள்வதற்கு பயன்படுத்தும் ஊடாகமே தகவல் தொடர்பு எனப்படும்.
அதாவது செய்திகளை இலகுவாக தொலைவில் இருப்வர்களிடம் கொண்டு சேர்க்கும் ஓர் அமைப்பாக தகவல் தொடர்பாடனது காணப்படுகின்றது.
தகவல் தொடர்பு முறையின் முக்கியத்துவம்
தொலைவில் உள்ள ஒருவருடன் இலகுவாக தகவல்களை பரிமாரிக்கொள்வதற்கு தகவல் தொடர்பு முறையானது துணைபுரிகின்றது. தொலைதூரமாக இருப்பவர்களை பார்க்க முடியாவிடினும் எமது தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் அவர்கள் எம்மை புரிந்து கொள்வதற்கும் துணைபுரிகின்றது.
நாட்டு நடப்புக்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக தகவல் தொடர்பானது காணப்படுகின்றது.
கல்வி ரீதியான விடயங்களை உடனுக்குடன் இணையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடிகின்றது. அதாவது இணையமானது இன்று தகவல் தொடர்பு சாதனமாக திகழ்வதோடு அதனூடாக பல தகவல்களை எம்மால் பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.
தகவல் தொடர்பு முறைமைகள்
ஒலி வழித்தகவல் பரிமாற்றம்
ஆரம்பகாலங்களில் மனிதானவன் ஒலி எழுப்புவதினூடாக தகவல்களை பரிமாரிக்கொண்டனர். இன்று உயிரினங்களும் ஒலி வழி தகவல் பரிமாற்றத்தையே பின்பற்றுகின்றன.
தோல் கருவிகள்
தோல் கருவிகளை பயன்படுத்தி அதனூடாக ஒலி எழுப்பி தகவல்களை ஆரம்பகாலங்களில் பரிமாரிக்கொண்டனர். இன்று மத்தளம், தபேல் போன்றவற்றால் ஒலி எழுப்பப்படுகின்றது. மகழ்ச்சி, ஆபத்து, போர் என பல நேரங்களில் ஒலி எழுப்புவதினூடாக அறிந்து கொண்டனர்.
கடிதங்கள்
எழுத்துக்கள் தோன்றிய காலம் முதல் இன்று வரை கடிதங்கள் ஊடாகவே தகவல் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓலை, தோல் போன்றவற்றில் தகவல்களை எழுதி தொடர்புகளை மேற்கொண்டனர். தற்காலத்தில் காகிதங்கள் ஊடாக கடிதங்கள் எழுதி தொடர்பானது மேற்கொள்ளப்படுகின்றது.
தொலைபேசி
1976ம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகம்பெலினால் கம்பி வழியாக இருமுனை தொடர்பினை ஏற்படுத்தும் தொலைபேசியானது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் தகவலினை இலகுவாக பரிமாரிக்கொள்ள சிறந்த ஊடாகமாகவும் தொலைபேசி காணப்படுகின்றது.
கணினி
இன்று கணிணியின் ஊடாக இலகுவாக தகவல்கள் பரிமாரப்படுகின்றன. ஒரு சிறந்த தகவல் தொடர்பு ஊடாகமாகவும் கணிணியானது காணப்படுகின்றது.
இணையம்
உலகில் எந்தவொரு பாகத்தில் இடம்பெறும் தகவல்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் தகவல் தொடர்பு ஊடகமே இணையமாகும். மின்னஞ்சல், வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு தகவல் தொடர்பு ஊடாகங்களிலூடாக தகவல்கள் பரிமாரப்பட்டு வருகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொடர்பு வளர்ச்சி
தகவல் தொடர்பு முறைமையானது இன்று பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள துணைபுரிகின்றது.
தொலைதூர உறவுகளுடன் இலகுவாக கருத்துக்களை பரிமாரிக்கொள்ள துணைபுரிகின்றது. இவ்வாறாக காணப்பட்ட போதிலும் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட தகவல் தொடர்புகள் மூலம் மனிதர்கள் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
இன்று நிம்மதியான வாழ்க்கையினை வாழாது தொலைபேசி, இணையம் என தனது முழு வாழ்க்கையையும் இவ்வாறன தொடர்பு சாதனங்களுக்கே அர்பணிக்கின்றனர். மேலும் பல்வேறு தீய வழிகளையும் பின்பற்றுகின்றனர்.
எனவேதான் தகவல் தொடர்பு சாதனங்களை தமது முக்கியமான நல்ல தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டும். மேலும் இன்று தகவல் தொடர்பானது தொலைதூரத்தில் இருப்பவருடன் முகம் பார்த்து பேசும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளமையினை காணலாம்.
இவ்வாறாக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது என்றாலும் சாதகமான விடயங்களை விட பாதகமான பல விடயங்களினையே அனேகமானோர் எதிர் கொள்கின்றனர்.
You May Also Like: