தசை சிதைவு நோய் என்றால் என்ன

thasai sithaivu in tamil

தசை சிதைவு நோய் மூலம் தசைகள் பலவீனமடைந்து காணப்படும். இன்று தசை சிதைவு நோயானது அதிகரித்து கொண்டு வருகின்றதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

தசை சிதைவு நோய் என்றால் என்ன

தசை சிதைவு நோய் என்பது உடலை அசைக்க உதவும் தசைகளை பலவீனமடையச் செய்யும் ஓர் நோயே தசை சிதைவு நோய் எனப்படும். தசை இழப்பானது முதலில் தொடைகள் மற்றும் இடுப்புக்களில் ஏற்படுகிறது.

தசை சிதைவு நோய்க்கான அறிகுறிகளும் வகைகளும்

தசை சிதைவின் மிக முக்கிய அறிகுறியாக முற்போக்கான தசை பலவீனத்தை கூறமுடியும். அதாவது தசைகளானவை மிகவும் பலவீனமடைந்ததாக காணப்படும்.

டுச்சன் வகை

இது ஒரு தசை சிதைவு வடிவமாகும். இது சிறுவர்களிடம் அதிகமாக காணப்படுவதோடு ஓடுதல், குதிப்பதில் சிரமம், தள்ளாடும் நடை, உட்கார்ந்த நிலையில் இருந்து எழுவதில் சிரமம், தசை வலி, கற்றல் குறைபாடு போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கும்.

மற்றுமொரு அறிகுறிகளுள் ஒன்றாக பெக்கர் வகையினைக் கூறலாம். இது டுசென் வகையை போலவே காணப்படும். தசைபிடிப்பு, கால் விரல்களில் நடப்பது அல்லது எழுந்திருப்பது சிரமம் போன்றவற்றை கொண்டிருக்கும்.

மயோடிக் வகை

இது ஸ்டெய்னெடர் நோயாக காணப்படுகிறது. இவ்வகையினூடாக முகம் மற்றும் கழுத்து தசை போன்றவை பாதிக்கப்பட்டு காணப்படும். அதாவது முகத்தின் தசைகள் தொங்குதல், கண் இமைகள், ஆரம்ப வழுக்கை, கண்புரை, எடை இழப்பு, பலவீனமான கழுத்து தசைகள் போன்றவைகள் இதன் அறிகுறிகளாக காணப்படும்.

பிறவி வகை

இது பிறந்ததிலிருந்து ஏற்படக்கூடிய ஒரு வகையாகும். அதாவது பிறந்த உடனேயே அல்லது ஒரு நபரின் வாழ்க்கையின் முதல் 2 ஆண்டுகளில் ஏற்படும். அதாவது தசை பலவீனமடைவதோடு ஒருவருடைய துணையின்றி எம்மால் உட்காரவோ அல்லது நிற்கவோ முடியாத நிலை ஏற்படும். பார்த்தலில் சிரமம், மோசமான இயக்கக்கட்டுப்பாடு, சுவாசப்பிரச்சினைகள் போன்றனவாக இது காணப்படும்.

மூட்டுக் கச்சை வகை

இந்த மூட்டுக்கச்சை வகையினுள் தோள்பட்டை தசைகளே பாதிப்படைகின்றது. அதாவது படிக்கட்டுகளில் ஏறுதலில் சிரமம் எளிதில் தடுமாறுதல், கனமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமை போன்ற அறிகுறிகளை சுட்டிக்காட்டலாம்.

தசை சிதைவு நோய்க்கான காரணங்கள்

தசை சிதைவு நோயானது மரபணு மாற்றங்களில் ஏற்படக்கூடியதாக காணப்படுகிறது. அதாவது எக்ஸ் குரோமோசாமில் ஏற்படும் பிறழ்வுகளே காரணமாகும்.

எமது உடலினுல் புரதத்தை ஒருங்கிணைக்க தேவையான குறிப்பிட்ட மரபணுக்கள் குறைபாடு உடையவையாக காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த மரபணு மாற்றங்கள் மரபுரிமையாகவே காணப்படும்.

அதாவது சில தாயின் முட்டை அல்லது கருவில் இது தன்னிச்சையாக ஏற்படலாம். இது ஆண், பெண் இரு பாலாருக்கும் ஏற்படக்கூடியதாகும். மேலும் தசை சிதைவு குடும்ப வரலாற்றை கொண்டவர்களுக்கு இது இலகுவாக ஏற்படக் கூடியதொன்றாகவே காணப்படும்.

தசை சிதைவு நோயின் விளைவுகள்

தசை சிதைவு நோயின் மூலமாக இயலாமை ஏற்படக்கூடியதாகவே காணப்படும். அதாவது எழும்பு, தசைகள், முதுகெழும்புகளின் கடுமையான தசை சிதைவு காரணமாக நகர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். இது ஒரு பகுதி அல்லது முழுமையான இழப்பிற்கு வழி வகுக்க கூடியதாக காணப்படுகிறது.

மேலும் இவ் தசை சிதைவு மூலமாக சுவாசப்பிரச்சினைகள், சிறுநீரக, இதய பிரச்சினைகள் ஏற்படுகின்றது எனலாம். குழந்தைகளில் மன உடல் ரீதியான வளர்ச்சியில் தாமதம், அறிவுசார் குறைபாடு, குள்ளத்தன்மை, கற்றல் திறன் இழப்பு போன்ற விளைவுகள் இந்நோயின் ஊடாக ஏற்படுகின்றது.

எனவே தான் இந்நோய்க்கான முழுமையாக சிகிச்சை இல்லை என்ற போதிலும் ஒரு முறையான சிகிச்சையை பெற்றுக்கொள்வதன் ஊடாக முடிந்தவரை ஒரு தசை சிதைவு நோயாளியை செயலில் வைத்திருக்க முடியும்.

You May Also Like:

தொற்றா நோய்கள் கட்டுரை

தொற்று நோய் பற்றிய கட்டுரை