தமிழ் நாட்டின் புளியங்குடி எனும் நகரமே எலுமிச்சை நகரம் என அழைக்கப்படுகிறது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவகிரி வட்டத்தில் உள்ள நகராட்சி தான் தமிழ் நாட்டின் எலுமிச்சை நகரம் என அழைக்கப்பட்ட புளியங்குடி நகரமாகும். இந்த நகரத்தில் தற்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
புளியங்குடி நகரம் எலுமிச்சை நகரம் என பெயர் பெற்றமைக்கான காரணம்
புளியங்குடி நகரமானது தமிழ் நாட்டில் உள்ள நகரமாகும். இந்த நகரத்தில் பல தரப்பட்ட வியாபாரம், கடைகள் என பெருகி காணப்பட்டாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக காணப்படுவது எலுமிச்சை வியாபாரமே ஆகும்.
இதன் காரணமாகவே புளியங்குடி நகராட்சிக்கு எலுமிச்சை நகரம் (லெமன் சிட்டி) என்று அழைக்கின்றனர்.
புளியங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக விளங்கி வருவது எலுமிச்சையே ஆகும்.
மேலும் அந்தப் பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் புளியங்குடியில் செயல்பட்டு வரும் எலுமிச்சை சந்தை ஆகும். எலுமிச்சை வியாபாரத்தின் மூலமாக அப்பகுதியானது பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது.
புளியங்குடி நகரும் எலுமிச்சை வியாபாரமும்
புளியங்குடி நகரில் எலுமிச்சை வியாபாரமானது பாரியளவில் கை கொடுக்க கூடிய வியாபாரமாக காணப்படுகின்றது. எலுமிச்சை நகரமாக காணப்படுகின்ற புளியங்குடி நகரானது இயற்கை விவசாயத்திற்கும் துணை நிற்கின்றது.
அதாவது சிவகிரி மற்றும் சங்கரன் கோவில் வட்டங்களை தவிர இராஜபாளையம் பகுதியை சேர்ந்த பல ஊர்களிலும் எலுமிச்சை விவசாயம் பிரதானமானதாக காணப்படுகின்றது. புளியங்குடி நகரில் எலுமிச்சை விவசாயம் இடம் பெற காரணமாக இருப்பது எலுமிச்சை சந்தையாகும்.
ஆரம்பத்தில் எலுமிச்சை வியாபாரிகள் தோட்டங்களுக்கு நேரில் சென்று பழங்களை வாங்கி வந்து பின்னர் வெளியூர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தனர். பின்னர் 1981ம் வருடத்தில் அவர்கள் புளியங்குடி எலுமிச்சைப்பழம் கமிசன் மண்டி என்ற பெயரில் சந்தையை ஏற்படுத்தினர்.
இன்று பல விவசாயிகள் பகல் பனிரெண்டு மணிக்குள் தங்களின் தோட்டங்களிலிருந்து உற்பத்தியை கொண்டு வந்து ஏலம் மூலமாக விற்கின்றனர். பின்னர் மதியத்திற்கு பிறகு எலுமிச்சையானது வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றது. இது தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, சேலம், திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்கின்றன.
எலுமிச்சை சந்தை மூலமாக சந்தைக்குள்ளும் வெளியிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பேருக்கு வேலை கிடைக்கின்றது. மேலும் எலுமிச்சை போடுவதற்காக சாக்குகளை தைக்கும் தொழில் மற்றும் சாக்குகளுக்குள் வைப்பதற்கான பனை ஓலைகளை பின்னும் தொழில் ஆகியன குறிப்பிடத்தக்கவையாக திகழ்கின்றன.
எலுமிச்சை வியாபாரத்தினூடாக அந்தப் பகுதி விவசாயிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த புளியங்குடி நகரமும் அதன் சுற்றுப் பகுதிகளும் பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகின்றன. மேலும் எலுமிச்சை விவசாயத்தினை மிகவும் சிறப்பாக இயற்கையான முறையில் செய்து வருகின்றனர். சொட்டு நீர்ப்பாசனம் மூலம் செயற்கை உரங்கள் எதுவுமின்றி எலுமிச்சையை உற்பத்தி செய்து வருகின்றனர்.
புளியங்குடி நகரானது வியாபாரத்தில் சிறந்து விளங்கும் நகரமாக காணப்படுவதோடு உள்ளூரில் மாத்திரமின்றி வெளியூர்களிலும் விற்பனை செய்கின்ற சூழலானது காணப்படுகின்றது.
மேலும் எலுமிச்சை விவசாயமானது எவ்வித செயற்கை உரங்களும் இல்லாது இயற்கையான முறையில் இடம் பெறுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முறைமையாகும்.
சிறந்த வியாபாரத்தை ஏற்படுத்துவதாக எலுமிச்சை வியாபாரமானது காணப்படுவதோடு பொருளாதார வளர்ச்சியிலும் எலுமிச்சை வியாபாரமானது செல்வாக்கு செலுத்துகின்றது எனலாம்.
You May Also Like: