நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை

neengal virumbi paditha noolgal in tamil

நூல்கள் என்பவை மனிதன் தான் சிந்தித்த கற்பனை செய்த விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்து வடிவில் பதித்து வைக்க உருவாக்கிக் கொண்ட கருவி ஆகும். நூல்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது.

அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருட்களின் பயன்பாடுகள் பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் நூல்களும், நூலகங்களும் பெருகின எனலாம்.

இன்று உலகளாவிய ரீதியில் எண்ணிடலங்கா நூல்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தையும் மனிதன் தன் வாழ்நாளில் படித்துவிட முடியாது.

எனினும் “நூலளவே ஆகுமாகும் நுண்னறிவு” என்பதற்கினங்க நூல்களை விரும்பிப் படிப்பது அவசியமாகும். அந்தவகையில் நான் விரும்பிப் படித்த நூல்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சில நூல்கள் உள்ளன.

நான் விரும்பிப் படித்த நூல்கள்

  • அக்கினிச் சிறகுகள்
  • சிவகாமி சபதம்
  • திருக்குறள்

அக்கினிச் சிறகுகள்

அப்துல்கலாம் அவர்கள் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கைவரலாக சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்கினிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதியுள்ளார். இது நேரடியாக தமிழில் எழுதப்பட்ட நூல் அல்ல. அப்துல்கலாம் ஐயா அவர்கள் காலத்தில் எழுதிய “Wing of Fire” புத்தகத்தின் தமிழாக்கமாகும்.

தன் சிறுவயது தொடங்கி கல்லூரி வேலை ஆராய்ச்சி வெற்றிகள் தோல்விகள் இழப்புக்கள் என அனைத்தையும் எழுதியுள்ளார்.

சிவகாமி சபதம்

சிவகாமி சபதம் எனும் நூலானது கல்கி எழுதிய புகழ்பெற்ற தமிழ் புதினமாகும். கல்கி வார இதழ்களில் 1940 களில் (12 வருடங்களாக) தொடர்கதையாக வெளிவந்த இக்கதையே பின்னாளில் புதினமாய் வெளியிடப்பட்டுள்ளது.

பரஞ்சோதி யாத்திரை காஞ்சி முற்றுகை பிட்சுவின் காதல் சிதைந்த கனவு என நான்கு பாகங்களை இந்நாவல் கொண்டுள்ளது. இந்நாவலானது பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நிறுத்தும் அதி அற்புதக் காவியமாகும்.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டது.

காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்கிய நாட்டின் தலைநகரம் வாதாபியின் மீது பல்லவர் போர் தொடுத்ததைப் பற்றியும் கூறுகிறது.

முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினாலும், பிற்பகுதி அவரது மகன் நரசிம்ம பல்லவனே கதையில் ஆதிக்கம் செலுத்துபவராவார்.

திருக்குறள்

நான் விரும்பிப் படித்த நூல்களில் திருக்குறளும் ஒன்றாகும். திருக்குறளானது உலகப் பொதுமறையாக அனைவராலும் கருதப்படுகின்ற சிறந்த நூல் என்பதாலேயே இது என்னை மிகவும் கவர்ந்தது.

இந்நூலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகக் கூறப்படுகின்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவராவார். இவர் 14000 சொற்களில் திருக்குறளைப் பாடியுள்ளார்.

மொத்தமாக 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை நூலாகத் திருக்குறள் விளங்குகின்றது. அறத்துப்பால், இன்பத்துப்பால், பொருட்பால் எனும் முப்பாலை கொண்டமைந்துள்ளது. முப்பாக்களும் இயல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. 1330 குறட்பாக்களில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 பாடல்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

முதற்பாலான அறத்துப்பாலில் மொத்தமாக 70 அதிகாரங்கள் உள்ளன. அதேபோல் பொருட்பாவிலும் 70 அதிகாரங்கள் உள்ளன. காமத்துப்பால் அல்லது இன்பத்துப் பாலில் மொத்தமாக 25 அதிகாரங்கள் உள்ளன.

உலகளாவிய ரீதியில் அதிகமான மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரிய நூலாகும். வாழ்வியல் அம்சங்களை இனிதே விளக்கியுள்ள இந்நூலை அனைவரும் படிப்பது சிறந்தது.

You May Also Like:

தமிழின் முதல் கள ஆய்வு நூல்

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்