நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

neerin mukkiyaththuvam katturai in tamil

மனிதன் தான் வாழும் வாழ்க்கையின் ஆதாரமாக நீரே காணப்படுகிறது. நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. ஏனெனில் மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களின் அடிப்படையாக நீரே காணப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நீரின் முக்கியத்துவம்
  • நீர் மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்
  • நீர் மாசடைவை தவிர்க்கும் வழிமுறைகள்
  • நீர் வீண்விரயமாதல்
  • முடிவுரை

முன்னுரை

இப்பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக நீரே விளங்குகிறது. உணவின்றி வாழ்கின்ற மனிதனால் நீரின்றி வாழ முடியாது என்றளவிற்கு நீரானது மனித வாழ்வில் மிக முக்கியத்துவமிக்க ஒன்றாக காணப்படுகிறது. ஒரு மனிதனானவன் ஆரோக்கியமாக சிறந்து விளங்க நீரே இன்றியமையாத ஒன்றாக திகழ்கின்றது.

நீரின் முக்கியத்துவம்

நீர் இன்றேல் உலகமே இல்லை என்றளவிற்கு நீரானது மிகவும் முக்கியத்துவமிக்க தொன்றாகவே காணப்படுகிறது. ஒரு மனிதனுடைய வாழ்வில் அனைத்து செயற்பாட்டிற்கும் நீரானது அவசியமானதொன்றாகும்.

அதாவது மனித உடல் செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெறுவதற்கும் அன்றாட வீட்டு வேலைகளை நிறைவேற்றி கொள்வதற்கும். மேலும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு நீர் விளையாட்டுக்கள் மற்றும் மின்சார சக்தி உற்பத்தி என பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் நீரானது மிக அவசியமானதொன்றாகும்.

நீர் மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்

எம் உயிர் காக்கும் நீரை சிறந்த முறையில் பாதுகாக்காமல் இருப்பதால் இன்று பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அதாவது நீர் மாசடைவின் காரணமாக பல்வேறு நோய்கள் எம்மை வந்தடைகின்றன.

தூய்மையான நீரில் பல்வேறு கழிவுகளை இடும்போது அக்கழிவுகளால் உயிரினங்கள் அழிவடைதல், மாசடைந்த நீரை பருகுவதால் பல்வேறுபட்ட சுகாதார சீர்கேடுகள் எம்மை வந்தடைதல், டெங்கு, யானைக்கால், மலேரியா போன்ற கொடிய நோய்கள் ஏற்படல், பயிர்ச்செய்கைகளை மேற்கொள்கின்ற போது மாசடைந்த நீரால் பயிர்களின் வளர்ச்சி குன்றுதல் என பல்வேறுபட்ட விளைவுகள் ஏற்படுகின்றன.

நீர் மாசடைவை தவிர்க்கும் வழிமுறைகள்

கழிவுகளை நீர் நிலைகளில் விடாமல் முறையாக அகற்றுவதன் மூலம் நீர் மாசடைதலை தவிர்த்தல், தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை மீள் சுழற்சிப்படுத்துவதனூடாக நீரின் தூய்மைத்தன்மையை பேணுதல், இறந்த பிராணிகளை நீரில் போடுவதை தவிர்த்தல், விவசாய நடவடிக்கைகளில் சரியான நீர் முகாமைத்துவத்தை பேணல், நீர் பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்துதல், நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களை மேற்கொண்டு நீரை மாசடையாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

நீர் வீண்விரயமாதல்

இன்று அதிகளவானோர் பல்வேறு செயற்பாடுகளின் மூலம் நீரை வீண்விரயமாக்குகின்றனர்.

அதாவது குளித்தல், குடித்தல் மற்றும் சமையல் தேவைகள் என பல்வேறுபட்ட செயற்பாடுகளின் போது அளவுக்கதிகமான நீரானது வீண்விரயம் செய்யப்படுகிறது இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் நீர் பற்றாக்குறை உருவாகும் நிலையே ஏற்படும். நீரின் பெறுமதியை உணர்ந்து தேவைக்கேற்றாற் போல் நீரை பயன்படுத்தல் வேண்டும்.

முடிவுரை

நீரை பாதுகாத்தல் என்பது இந்த உலகில் உள்ள அனைவரினதும் கடமையாகும். மேலும் நீரை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வருவதனூடாக நீர் மாசடைவை தவிர்த்து நீரை பாதுகாத்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் நீரின் மகத்துவத்தை உணர்ந்து நீரை பேணி பாதுகாப்பது அவசியமாகும்.

You May Also Like:

மரம் பற்றிய வாசகங்கள்

மழை நீர் சேமிப்பு வாசகங்கள்