பாரதியார் பற்றிய பேச்சு போட்டி

bharathiyar speech in tamil

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்கால இலக்கியத்தின் முன்னோடி, தேசியக்கவி, மக்கள் கவிஞர், சிந்துக்கு தந்தை, அமரக்கவி என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட பாரதியார் பற்றியே இன்றைய நாளில் பேசப்போகின்றேன்.

பிறப்பு

மகாகவி பாரதியார் 1822ம் ஆண்டு மார்கழி மாதம் 11ம் திகதி எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சின்னசுவாமி ஐயர் மற்றும் இலக்கு அம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியம் என்றிருந்தாலும் சுப்பையா என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

இவருக்கு 11 வயது இருக்கும்போதே இவரது கவிபாடும் திறனை பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினர். இதன் காரணமாக அன்று தொட்டு இன்று வரை சுப்ரமணிய பாரதி என்றே அழைக்கப்படுகின்றார். தமிழினை வியந்து போற்றும் ஒரு மகாகவியாகவே பாரதியார் திகழ்ந்தார்.

தேசியக் கவியான பாரதியார்

இவர் கவிதை படைப்பதில் சிறப்பு தேர்ச்சி பெற்ற கவிஞராக காணப்பட்டார். இதன் காரணமாக விடுதலை போராட்ட காலங்களில் பல்வேறுபட்ட கவிதைகளைப் படைத்து மக்களை ஒன்று சேர இணைத்த காரணத்தினால் இவரை தேசியக்கவியாக போற்றுகின்றனர்.

இவர் தன்னுடைய நாட்டை நினைத்து பெருமை கொண்டதோடு மட்டுமல்லாமல் அதனது எதிர்காலம் பற்றியும் சிறப்பித்து பல கவிதைகளை படைத்தார்.

“வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குது என்போம் பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என பல கவிதைகளை தனது நாட்டை பற்றி படைத்தவராவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவரது தாயான இலக்குமி அம்மாள் மறைந்ததன் பின்னர் பாரதியார் தனது பாட்டியின் வீட்டிலேயே வளர்ந்து வந்தார். தனது பதினோராவது வயதில் கவிதைகளை படைக்கும் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

இவர் 1897ம் ஆண்டு செல்லம்மா என்பவரை மணந்தார். இவ்வாறாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் 1898ம் ஆண்டு தனது தொழிலில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக வறுமை நிலை ஏற்பட்டது.

இவ்வாறான தொரு சந்தர்ப்பத்தில் பல துயரங்கள் பாரதியாரை ஆட்கொண்ட போதிலும் அனைத்து விதமான தடைகளையும் தாண்டி தமிழுக்கு பாரிய பங்களிப்பினை மேற்கொண்டே வந்தார்.

பாரதியாரின் தமிழ்பற்று

பாரதியார் ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளை கற்று தேர்ந்தவராக காணப்பட்டார். இவ்வாறான மொழிகளை இவர் தமிழ் மொழியுடன் ஒப்பிட்டு பார்த்த போது தமிழ் மொழியே சிறப்பு மிக்க மொழி என்பதனை உணர்ந்து தமிழ் மொழி பற்றி பல கவிதைகளை படைத்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறு புதுக்கவிதைகளை படைத்தவராக பாரதியே திகழ்கின்றார்.

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என்ற கவிதையினூடாக தமிழின் பெருமையை உலகறியச் செய்தவராக பாரதியார் காணப்படுகின்றார். இவர் தமிழில் பல கவிதைகள், ஆக்கங்கள், சிறுகதைகள் போன்றவற்றை படைத்து தமிழ் மீதான பற்றை வெளிப்படுத்தினார்.

அதாவது கண்ணண்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம் போன்ற கவிதைகளினூடாகவும் சின்ன சங்கரன் கதை, தண்டிம சாஸ்திரி, நவதந்திரக்கதைகள் என சிறுகதைகளினூடாகவும் தமிழின் பெருமையை எடுத்தியம்புகின்றார்.

சுதந்திர தாகத்தை மிகவும் அழகான கவிவரிகளினூடாக எடுத்துக்கூறி மக்கள் மனதில் சுதந்திரம் பற்றிய எண்ணங்களை விதைத்தவராவார்.

இறப்பு

இவர் 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்றும் அனைத்து தமிழர்களின் மனதிலும் நிலைத்து நிற்கின்றார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

என தமிழ் வளர்த்த பாரதியாரை போற்றி வணங்கிடுவமாக.!

You May Also Like:

கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி

கொடிகாத்த குமரன் பேச்சு போட்டி