புயலிலே ஒரு தோணி கட்டுரை

puyalile oru thoni katturai in tamil

மனிதர்களது வாழ்க்கை துன்பம், மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இணைத்ததாகவே காணப்படுகின்றது. அதாவது புயலிலே சிக்குண்டு கரை சேர தத்தளிக்கும் ஒரு தோணி போன்றது தான் மனித வாழ்க்கையாகும்.

எனவே கிடைக்கும்போது மகிழ்வதும், இல்லாத போது வருந்தாமல் இருந்தாலும் தான் சிறப்பாக வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்.

புயலிலே ஒரு தோணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பா.சிங்காரம் அவரது கருத்து
  • வாழ்க்கை என்னும் புயல்
  • எதையும் எதிர் கொள்ளும் நம்பிக்கை
  • மனவலிமை
  • முடிவுரை

முன்னுரை

புயலில் சிக்குண்ட ஒரு தோணி கடலில் தத்தளித்து எவ்வாறு கரை சேர்கின்றது, என்பது சுவாரஸ்யமானது. அதேபோன்றுதான் மனித வாழ்க்கையும் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள், போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லுதல் என்பதில் தான் சுவாரசியம் அடங்கியுள்ளது.

எனவே மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் புயல் போல் சுழலும் பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடித்தான் ஆக வேண்டும்.

பா.சிங்காரம் அவரது கருத்து

புலம்பெயர்ந்த தமிழர்கள் அதே வாழ்வியலை எடுத்துக்காட்டும் வகையில் புயலிலே ஒரு தோணி என்ற புதின நூலினை பா.சிங்காரம் அவர்கள் எழுதியுள்ளார். தெற்காசிய நாடுகளிலேயே பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியமர்ந்தனர்.

அதில் குடி பெயர்ந்த ஒருவராகவே இவர் காணப்படுகின்றார். இவரது வாழ்க்கையை அனுபவத்தையும், கற்பனையும் கலைந்த வகையில் புயலில் அகப்பட்டு தத்தளிக்கும் ஒரு தோணி போல் தான் புலம்பெயர்ந்து மக்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.

வாழ்க்கை எனும் புயல்

நாம் ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கை ஒரே மாதிரியானது அல்ல. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாகவே காணப்படும். சிலருக்கு இன்பம் தருவதாகவும் இன்னும் சிலருக்கு இவ்வாழ்வு துன்பம் அளிப்பதாகவும் காணப்படும்.

எமது எதிர்கால வாழ்வில் என்ன நடக்கும் என யாரும் அறிவதில்லை. வாழ்வில் புயல் போன்று திடீரென பிரச்சனைகள் எழக்கூடும் அவற்றை சமாளித்து வாழ பழகிக் கொள்வதிலே எமது திறமை அடங்கியுள்ளது.

எதையும் எதிர்கொள்ளும் தன்நம்பிக்கை

புயலில் சிக்குண்ட தோணி கரை சேர வேண்டுமாயின் அத் தோணியும் துடுப்பும் எவ்வாறு பயனளிக்குமோ அது போன்று மனித வாழ்வில் ஏற்படும் புயல் போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்ள தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருத்தல் வேண்டும்.

எனவே எவ்வளவுதான் தோல்வியும், நிராகரிப்பும், தடைகளும் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள தன்னம்பிக்கை அவசியமாகும்.

மனவலிமை

மனித வாழ்வில் ஏற்படும் கொடூரமான புயல்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மனவலிமை அவசியமானதாகும்.

“எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியார் திண்ணியாராகப் பெறின்”எனும் குறளின் மூலம், மிகுந்த வலிமை உடையவர்கள் அவர்கள் எண்ணிய வகையில் வாழ்க்கையினை சாதித்து காட்ட முடியும் என திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

எனவே வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவற்றினை எதிர்கொள்ளக்கூடிய மனவலிமை மிகவும் அவசியமானதாகும்.

முடிவுரை

நாம் வாழும் உலகம் எத்தனை புயல்களை சந்தித்து சந்தித்திருக்கும் அவற்றில் சிக்குன்ற பல தோணிகள் கரையை அடைந்து இருக்கும். அவ்வாறே எமது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையோடும், மனிதநேயத்தோடும் பிரச்சினைகளில் இருந்து நாமும் விடுபட்டு பிறரையும் காப்பாற்ற வேண்டும்.

You May Also Like:

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்