நாம் வாழும் பூமியானது இயற்கை ரீதியாக உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து புவியியல் ரீதியிலான அம்சங்களையும் கொண்டுள்ளது.
அத்தகைய புவியில் மனிதன் உயிர் வாழ்வதற்கு தனக்கு தேவையான அனைத்து உணவுப் பண்டங்களையும் ஆடைகளையும் தானே விவசாயம், வேளாண்மை, உற்பத்தி செய்து நுகர்வு செய்கின்றான்.
அவ்வாறான பூமியில் ஒரு இடத்தில் விளையக்கூடிய பயிர் செய்யக்கூடிய மற்றும் உருவாக்க கூடிய பொருட்களின் தரம் அந்த இடத்தினுடைய காலநிலை, நிலம், நீர் போன்றவற்றின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே புவிசார் குறியீடு நிர்ணயம் செய்யப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் ஒரு பொருளுக்கான சொந்த இடத்தின் தொன்றுதொட்ட பாரம்பரியத்தை உலகுக்கு தெரிவிப்பதற்கும் எதிர்காலத்தில் அடுத்துவரும் தலைமுறை சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்குவதற்காக புவிசார் குறியீடு பாதுகாப்புச்சட்டம் என்பதனை அரசு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் புவிசார் குறியீடு பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு ஊருக்கும் அந்த ஊரில் சிறப்பான பிரபல்யமான விடயத்திற்காக புவிசார் குறியீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த புவி சார் குறியீடு மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சுக்களோடு அறிவுசார் சொத்துரிமைத்துறை ஆகிய அமைச்சுக்கள் இணைந்து புவிசார் குறியீட்டினை வழங்குகின்றது.
இதன் அடிப்படையில் இந்த சட்டம் 2003 இல் இந்தியாவில் நடைமுறையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3200 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் இந்திய மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 32ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
புவிசார் குறியீடு என்றால் என்ன
ஒவ்வொரு ஊருக்கும் அந்த ஊரைப் பெருமைப்படுத்தக்கூடிய சிறப்பான வடிவங்கள் காணப்படும். அத்தகைய பிரபல்யம் மிக்க பொருட்களை அங்கீகாரம் செய்வதற்கும் கௌரவிக்கும் வகையிலும் வழங்கப்படுவதே புவிசார் குறியீடு ஆகும்.
புவிசார் குறியீடுகள் வழங்கப்படுவதன் நன்மைகள்
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு புவிசார் குறியீடு வழங்கப்படுவதால் அந்த ஊர் மக்களைத் தவிர அந்த புவிசார் குறியீட்டுப் பெயரை பயன்படுத்தி வேறு ஊர் மக்களால் உருவாக்க முடியாது.
உதாரணமாக திருநெல்வேலி அல்வா என்பது திருநெல்வேலியில் உள்ள மக்களால் மட்டுமே தயாரிக்க முடியும். அவற்றைத் தவிர வேறு ஊர் மக்களால் திருநெல்வேலி அல்வாவை தயாரித்து விற்பனை செய்ய முடியாது.
இவ்வாறு புவிசார் குறியீடுகள் வழங்கப்படுவதால் போலிகள் தயாரிப்பது தடுக்கப்படுவதோடு அந்தந்த ஊர் தொழிலாளர்கள், சுய தொழில் புரிவோர்களுக்கு மிகுந்த பயன்மிக்கதாக அமையும்.
அந்தந்த ஊர்களுக்கு பிரபல்யம் அதிகரிப்பதோடு அந்த ஊர் உற்பத்திகளுக்கான கேள்வியும் அதிகரிக்கும். உற்பத்திகளின் அளவும் கூடும்.
மேலும் அந்த ஊர் மக்களுக்கும் அந்த ஊர்ப் பொருட்களுக்குமான இணைவு மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும். அத்தோடு சட்ட ரீதியாக பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் சட்டப் பாதுகாப்பும் புவிசார்க் குறியீட்டிற்கு கிடைக்கப்பெறுகிறது.
இந்தியாவில் உள்ள சில புவிசார் குறியீடுகளும் பொருட்களும்
- காஞ்சிபுரம் பட்டுச்சேலை
- மதுரை சுங்குடி சேலை
- ஆரணிப்பட்டு
- கோவை கோரா பட்டு
- சேலம் வெண்பட்டு
- திருபுவனம் பட்டு
- பவாணியமக்காலம் பத்தமடைப் பாய்
- தோடர்களின் வேலை பட்டுத் துணிகள்
- மதுரை மல்லி
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
- தஞ்சாவூர் ஓவியங்கள்
- தஞ்சாவூர் கலைத்தட்டு
- கொடைக்கானல் மலை பூண்டு
- பவானி ஜமக்காளம்
- விருப்பாச்சி மலை வாழை
- செட்டி நாடு அரண்மனை
- நாகர்கோவில் குத்துவிளக்கு
- சுவாமிமலை வெண்கலச்சிலை
- கோவை வெட் கிரைண்டர்
- கோவை தொல்பொருட்கள்
- நீலகிரி தேயிலை
- பழனி பஞ்சாமிர்தம்
- சேலம் மாம்பழம்
- தூத்துக்குடி மக்ரூன்
- திருநெல்வேலி அல்வா
- திண்டுக்கல் பூட்டு
- காரைக்குடி கண்டாங்கி சேலை
- ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா
You May Also Like: