மேகவிடு தூதினை “திருநறையூர் நம்பி” கலி வெண்பாவில் எழுதியுள்ளார். ஒருவர் தனது கருத்தை மற்றொருவருக்கு தெரிவிக்க பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். இவ்வகையான தூதுகளில் ஒன்றே மேகவிடு தூதாகும்.
மேகவிடு தூது என்பது
மேகவிடு தூது என்பது தலைவன் தன்னுடைய நிலையினை தலைவிக்கு எடுத்து கூறுவதற்கு மேகத்தை தூதாக விடுவது மேகவிடு தூது எனப்படும். இது ஒரு கலி வெண்பா பாட்டாகும்.
திருநறையூர் என்பது சோழ நாட்டு திருப்பதியில் ஒன்றாகும். சோழன் கோச்செங்கணான் திருநறையூர் நம்பியை பணிந்து சேர பாண்டியர்களை வெல்லுவதற்கு வெற்றி வாள் பெற்ற தலமாகும்.
காதலரிடம் மேகத்தை தூது விடுவதாக கூறும் ஒரு பாடலாக மேகவிடு தூது காணப்படுகின்றது. மேகத்திடம் தூதாக அனுப்பி தனது செய்தியினை வெளிப்படுத்துகின்றார். அதாவது தலைவிக்கு தலைவனானவன் தனது வருகையினை அறியப்படுத்துவதாக மேகவிடு தூதானது காணப்படுகின்றது.
திருநறையூர் நம்பி இந்த பாடலில் கையாண்டுள்ள உத்திகள்
தூது அனுப்பும் தலைவனின் நிலையினை கூறுவதாக காணப்படுகின்றது. அதாவது தன் தலைவியை காண வருகை தருவதனை மிகவும் அழகாக பாடலடிகளினூடாக விளக்குகின்றார்.
தூதுப் பொருளிடம் அறிவுரை கூறுவதாக மேகவிடு தூதானது காணப்படுகின்றது. அதாவது மேகத்தை மிகவும் விரைவாக சென்று தலைவனின் நிலையினை தலைவியிடம் சென்று செல் என்பதினூடாக மேகத்தினை விழித்து மேகவிடு தூதானது இடம் பெறுகின்றது.
தலைவனுடைய பெருமைகளை விளக்கி கூறுவதினூடாக தலைவன் பற்றிய புரிதலை வெளிப்படுத்துவதாக இந்த தூதானது அமைந்துள்ளது.
மேகவிடு தூதானது தூது விடும் பொருளின் பெயரினை சுட்டியே காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும். இலக்கியங்களில் தூது பற்றிய செய்திகளை எடுத்தியம்பக் கூடியதாக மேகவிடு தூதானது காணப்படுகின்றது.
மேகவிடு தூதின் சிறப்புக்கள்
மேகவிடு தூதானது பல்வேறுபட்ட சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது மேகவிடு தூதின் மூலமாக தலைவன் தலைவியின் மீது கொண்டுள்ள காதலை விளக்குவதாக காணப்படுகின்றது. மேலும் தலைவனின் பெருமைகளை தலைவியிடம் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
இந்த தூதினூடாக மேகத்தினை தூது அனுப்பி தன்னுடைய வருகையை தலைவியிடம் தெரிவிக்கின்றார். அதாவது மேகத்தினை தூதாக அனுப்புவதானது மேகத்தின் சிறப்பினை சுட்டுகின்றது. மேலும் தலைவனுடைய வருகையை விட மேகமானது தலைவியிடம் வேகமாக சென்று விடும் என்பதினூடாக மேகத்தின் பெருமையினை எடுத்தியம்புகின்றது.
தலைவனின் போர் வீரத்தினை குறிப்பிடுவதன் மூலம் தலைவனின் வீரத்தை சுட்டிக்காட்டுகின்றது. தலைவனானவன் போரின் காரணமாக தலைவியினை சந்நிக்க முடியாத நிலை ஏற்பட்டதனை இதனூடாக தெளிவாக காண முடிகின்றது.
மேகவிடு தூதுப் பாடலடி
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும்
கூடு வருகுதென்று கூறுங்கள் நாடியே
நந்திச்சி ராமனுடைய நல் நகரில் நல் நுதலைச்
சந்திச்சீர் ஆமாகில் தான்
பொருள்: மேகத்தினை பார்த்து ஓடுகின்ற மேகங்களே நந்திச்சீர் ராமனுடைய நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அழகான நெற்றியை உடைய எனது தலைவியை காண்பதற்காக போரில் வெற்றி பெற்று சென்று கொண்டிருக்கின்றேன். நான் செல்லக் கூடிய தேரானது வேகமாக சென்றாலும் மேகமே உன்னை பார்க்கும் போது நீயே வேகமாகச் செல்கின்றாய்.
எனவே நீயே எனது தலைவியிடம் முதலில் செல்வாய் அங்கு சென்று தலைவியிடம் சொல் உனது தலைவனானவன் காதலோடு வந்து கொண்டிருக்கின்றான், தேரில் வந்து கொண்டிருப்பது வெறும் கூடுதான் மனதானது தலைவி உன்னிடமே உள்ளது என்று மேகத்திடம் தூது அனுப்பினார்.
You May Also Like: