வினைமுற்று என்றால் என்ன

vinai mutru endral enna

ஒரு செயலை குறித்து நிற்கும் சொல்லை வினைச்சொல் என குறிப்பிடலாம். வினைச்சொல்லானது முற்றுப் பெற்று வருகின்றமையினை வினைமுற்று எனலாம்.

வினைமுற்று என்றால் என்ன

வினைமுற்று என்பது பொருள் முற்றுப் பெற்று வருகின்ற வினைச்சொற்கள் வினைமுற்று எனப்படும். இந்த வினைமுற்றானது ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் போன்றவற்றை பெற்று வரக்கூடியதொன்றாகும்.

உதாரணமாக குறிப்பிடுவேமேயானால் மாலா பாடினால் என்ற வசனத்தில் இறந்த காலத்தினையும், படர்க்கை இடத்தினையும், பெண்பாலையும் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வினைமுற்றின் வகைகள்

வினைமுற்றானது பொதுவாக 6 வகைகளாக காணப்படுகின்றது. அவையாவன,

  1. தெரிநிலை வினைமுற்று
  2. குறிப்பு வினைமுற்று
  3. உடன்பாட்டு வினைமுற்று
  4. எதிர்மறை வினைமுற்று
  5. ஏவல் வினைமுற்று
  6. வியங்கோள் வினைமுற்று

1. தெரிநிலை வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று என்பது யாதெனில் ஒரு செயலானது நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என இவை ஆறும் வெளிப்படுமாறு அமைந்து காணப்படுவதே தெரிநிலை வினைமுற்று ஆகும்.

உதாரணம் வருமாறு,

மாலா கட்டுரை எழுதினாள்
செய்பவர் – மாலா
கருவி – எழுதுகோலும், பேப்பரும்
நிலம் – பாடசாலை
காலம் – இறந்த காலம்
செய்பொருள் – கட்டுரை
செயல் – எழுதுதல்

மேல் குறிப்பிட்ட உதாரணத்தின் அடிப்படையில் ஓர் தெரிநிலை வினைமுற்றானது இந்த ஆறு விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அமைந்து காணப்படும்.

2. குறிப்பு வினைமுற்று

குறிப்பு வினைமுற்று என்பது யாதெனில் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அடிப்படையில் காணப்படும் வினைமுற்றே குறிப்பு வினைமுற்றாகும். இந்த வினைமுற்றானது செய்பவனாகிய கருத்தாவை விளக்கக்கூடியதாகும். மேலும் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பினால் உணர்த்தக் கூடிய வினைமுற்றே குறிப்பு வினைமுற்றாகும்.

உதாரணம்:

பொருள் – பொன்னன்
இடம் – தென்னாட்டோர்
காலம் – ஆதிரையான்
சினை – கண்ணண்
பண்பு – கரியன்
தொழில் – எழுத்தன்

3. வியங்கோள் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று என்பது வாழ்த்துதல், வைதல், வேண்டல், விதித்தல் போன்றவற்றை பெற்று வருவதேயாகும். இவ் வியங்கோள் வினைமுற்றானது இரு திணையையும், ஐம்பால், மூவிடங்களுக்கும் பயன்படுத்துவதை காணலாம். (க, இய, இயர், அல்) என விகுதி பெற்று வரும்.

உதாரணம்:

வாழ்த்தல் பொருள் – வெல்க
வைதல் பொருள் – வீழ்க
விதித்தல் பொருள் – வருக
வேண்டல் பொருள் – அருள்க

4. ஏவல் வினைமுற்று

ஏவல் வினைமுற்று என்பது தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்றையே ஏவல் வினைமுற்று என குறிப்பிடலாம். இவ் வினைமுற்றானது ஒருமை, பன்மை என இரண்டு வகைகளில் வரக்கூடியதாகும்.

உதாரணம்:

பாடம் படி
கடைக்குப் போ
எழுது – ஒருமை (செய்வாய், செல்லாதீர்)
எழுதுமின் – பன்மை (எழுதுமின், சென்மின்)

ஏவல் மற்றும் வியங்கோள் வினைமுற்றுக்கிடையேயான வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்றானது முன்னிலையில் வரும் ஆனால் வியங்கோள் வினைமுற்றானது இருதினை ஐம்பால் மூவிடங்களுக்கு பொதுவாக வரக்கூடியதாகும். ஏவல் வினையானது ஒருமை, பன்மை என்ற வேறுபாட்டுடன் காணப்படும். வியங்கோள் வினையில் இந்த வேறுபாடு காணப்படுவதில்லை.

கட்டளை பொருளை உணர்த்துவதாக ஏவல் வினைமுற்று அமைகின்றது. ஆனால் வியங்கோள் வினைமுற்றானது வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் பொருள்களை உணர்த்த கூடியதாகும். விகுதி பெற்றும் பெறாமலும் வரக்கூடியதே ஏவல் வினையாகும். வியங்கோள் வினைமுற்று விகுதி பெற்றே வரக்கூடியதாகும்.

5. உடன்பாட்டு வினைமுற்று

ஒரு வினையை செய்வதை சுட்டும் வினைமுற்று உடன்பாட்டு வினைமுற்றாகும்.

உதாரணம் – படித்தேன், செய்யேன்

6. எதிர்மறை வினைமுற்று

ஒரு செயல் நடைபெறாமையினை சுட்டும் வினைமுற்றே எதிர்மறை வினைமுற்றாகும்.

உதாரணம் – சொல்லாதீர், வராதீர்

You May Also Like:

சொல் என்றால் என்ன

சந்திப்பிழை என்றால் என்ன