தமிழில் எழுந்த இலக்கியங்களில் இலக்கணப் பிரிவில் மூன்றாவதாக அமையும் இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். இவ்விடம் பொருள் என சுட்டப்படுவது சொல்லின் பொருள் அன்று.
சங்க காலம் தொட்டு தமிழில் எழுந்த புலவர்கள் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே பாடல்களையும், இலக்கியங்களையும் இயற்றினர். அவ்வகையில் இப்பொருளும் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது. தொல்காப்பியமே பொருள் என்ற சொல்லை வரையறை செய்தது.
இலக்கியங்களில் காணப்படும் பாடுபொருளானது அகம், புறம் என இரண்டு வகைப்படும்.
அகம்
அகம் என்பது அகத்தே விளையும் இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளே அகம் எனப்படும். அதாவது அகப்பொருளாவது நுகர்ச்சியாகலான் அதனான் பயன் தான் அறிதலின் அகம் என்கின்றனர் உரையாசிரியர்கள்.
மேலும் விளக்கமாகக் கூறின் அகம் என்பது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் கூடியிருக்கும் காலத்தில் பிறந்த பேரின்பம் அக்கூடியிருந்த காலத்தில் பின் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தமக்கு ஏற்பட்ட இன்பத்தை கூறி மகிழ்வதே அகம் எனப்படும். பொதுவாக அகம் என்பது வீட்டின்பத்தையே அதாவது காதலையே குறிக்கின்றது.
சங்க காலத்தில் பெரும் பாடு பொருளாக அகம் காணப்பட்டது. சங்க காலத்தில் காணப்பட்ட அகம் என்ற பாடுபொருளானது ஐந்நிலங்களுக்கு அமைவாக புணர்தல், பிரிதல், ஊடல், இறங்கல், உடன்போக்கு கைக்கிளை, பெருந்திணை என ஏழு ஒழுக்கங்கள் காணப்பட்டன.
இவை ஏழையும் அடிப்படையாகக் கொண்டே பாடல்கள் பாடப்பட்டன. அவ்வகையில் அகநானூறு, நற்றினை, குறுந்தொகை, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, ஐங்குறுநூறு என்ற நூல்கள் தோன்றின. அவை அகத்தை அடிப்படையாகக் கொண்டே பாடப்பட்டன.
சங்க காலத்துக்குப் பின் வந்த சங்கமருவிய, சோழ, பல்லவ, பாண்டிய காலத்திலும் அகம் போற்றப்பட்டது, ஆனால் சங்ககாலம் போல் பெரிதாக பேசப்படவில்லை.
இவ்வாறான அகம் பற்றி பாடும் போது அங்கு தலைவன், தலைவி, தோழி போன்றோரின் பெயர்கள் சுட்டப்படவில்லை. காதலே மையப் பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டன. எனவே, அகம் என்பது உள்ளத்தில் உள்ளே நிகழும் உணர்வே அகம் என்பதை இலக்கிய வழியினூடாக அறியலாம்.
புறம்
புறம் என்பது அகத்துக்கு உறுதுணையாய் அதன் மறுதலையாக புறத்தே நிகழும் ஒழுக்கலாறுகள் பற்றி கூறுவதே புறமாகும்.
அதாவது புறம் என்பது போர், வெற்றி, ஈகை, புகழ், புறம் எனப்பட்டது, அவ்வகையில் சங்க காலத்தில் எவ்வாறு அகம் சார்ந்து பாடல் பாடப்பட்டதோ அதேபோல புறம் சார்ந்தும் பாடல்கள் பாடப்பட்டு அதன் வாயிலாக இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.
அவ்வகையில் சங்க காலத்தில் வெற்சி, வஞ்சி, உழிஞ்சை, தும்பை, வாகை பாடாந்திணை, காஞ்சித்திணை என ஏழு ஒழுக்கங்கள் காணப்பட்டதோடு இவ்வொழுக்கங்களைச் சார்ந்து பதிற்றுப்பற்று, பரிபாடல், புறநானூறு போன்ற நூல்கள் தோற்றம் பெற்றன.
சங்ககாலத்தில் மன்னர்களின் வீரம், கொடை போன்றவற்றைப் பாட இப்புறமே உறுதுணையாக அமைந்தது எனலாம். எனவே புறமாவது புறத்தே நிகழும் அறம் பொருள் பற்றி பாடுவதே புறம் எனலாம்.
வீட்டு வாழ்க்கை அகம் என்பதும் புறம் என்பது நாட்டு வாழ்க்கையையும் குறிக்கின்றது. எனவே இதன் மூலம் அகம் புறம் பற்றி நன்கு அறியலாம்.
You May Also Like: