இந்தியாவில் காணப்படும் சுற்றுலா தலங்களில் சிறப்பான ஓர் சுற்றுலாத்தலமாகவே இந்த ஊட்டி என்பது காணப்படுகின்றது. இயற்கையான காட்சிகளும் பசுமை நிறைந்த அம்சங்களும் இந்த ஊட்டிக்கு அழகு சேர்க்கின்றன.
கண்ணுக்கு விருந்தளிக்க கூடிய காட்சிகளையும் மகிழ்ச்சியையும் அடைந்து கொள்வதற்காக மக்கள் அதிகமாக ஊட்டிக்கு சுற்றுலா செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
ஊட்டி சுற்றுலா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஊட்டியின் அமைவிடம்
- ஊட்டியின் சிறப்புகள்
- ஊட்டியில் காணப்படும் சுற்றுலாத் தளங்கள்
- மலைகளின் அரசி ஊட்டி
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவில் காணப்படும் மாநிலங்களில் தமிழகம் சுற்றுலாத் தலங்களில் முதன்மையாக விளங்குகின்றது. தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலமாகவே ஊட்டி காணப்படுகின்றது.
உதகை மண்டலம் என அழைக்கப்படும் ஓர் சுற்றுலாத்தலமாகவே ஊட்டி காணப்படுகின்றது. இது மலைகளின் அரசி எனவும் அழைக்கப்படுகின்றது.
அதாவது பல்வேறு நீர்வீழ்ச்சிகள், மலைகள், பூங்கா, அருங்காட்சியகம், ஏரி என இயற்கை வளங்கள் கொண்டமைந்த சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய தளமாக இந்த ஊட்டி காணப்படுகின்றது.
ஊட்டியின் அமைவிடம்
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களாளும் விரும்பப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக இந்த ஊட்டி காணப்படுகின்றது. அதிக மலைப் பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதாவது கிழக்கு தொடர்ச்சி மலைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் சங்கமிக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
இது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா எனும் மூன்று மாநிலங்களுக்கு இடையில் அமைந்துள்ளதோடு, கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளமையினால் இங்கு வெப்பமானது 11° செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதோடு அதிக குளிர்ச்சி தன்மை பொருந்திய ஓர் இடமாகவும் காணப்படுகின்றது.
ஊட்டியின் சிறப்புகள்
உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் பலரும் விரும்பி பயணிக்கும் ஒரு சுற்றுலா தளமாகவே இந்த ஊட்டி காணப்படுகின்றது.
அதாவது ஊட்டியில் எப்போதும் இதமான காலநிலை, இயற்கை வளங்கள் மிகுந்த வனப்பகுதிகள் பல காணப்படுகின்றமையால் அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் பல சுற்றுலாத் தளங்களை ஒரே இடத்தில் கொண்ட இயற்கை வளங்கள் பொருந்திய ஒரு இடமாகவும் ஊட்டி காணப்படுகின்றது.
அதாவது அரசு தாவிரவியல் பூங்கா, வருகை மான் பூங்கா, உதகை மண்டல ஏரி, மேல் பவானி ஏரி, புனித ஸ்டீபன் தேவாலயம் போன்றவற்றை குறிப்பிடலாம்.
சர்வதேச ரோஸ் சங்கத்தினால் தென்கிழக்காசியாவில் உள்ள சிறந்த ரோஜா தோட்டமாக ஊட்டியில் காணப்படும் ரோஸ் கார்டன் 2006ம் ஆண்டு விருதை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊட்டியில் காணப்படும் சுற்றுலாத் தளங்கள்
கண்களுக்கு விருந்தளிக்க கூடிய ஊட்டிப் பிரதேசத்தில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் நோக்கினால் ஊட்டியில் உள்ள தாரவியல் பூங்கா 1848 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு தோட்டக்கலைத் துறையினால் பராமரிக்கப்பட்டு வருவதோடு, பலவகையான பூக்களையும் செடி கொடிகளையும் கொண்டு அமைந்துள்ளது.
ஊட்டி ரோஜா தோட்டம் – ரோஜாக்களை பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு இடமாகும்.
தொட்ட பெட்டா சிகரம் – ஊட்டி மலைகளின் உயர்ந்த சிகரமாக காணப்படுகின்றது கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, எமரால்ட் ஏரி – மீன் பிடி மற்றும் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக உள்ளது.
புலி மலை – மலை ஏறுவதற்கு சிறந்த இடமாகும். மேலும் துருக்கோட்டை, அண்ணாமலை கோவில், கோத்தகிரி, காமராஜ் சாகர் ஏரி, ஸ்டீபன் தேவாலயம், கேத்தரின் நீர்வீழ்ச்சி, ரயில் பொம்மை, ஊட்டி ஏரி போன்ற சிறந்த சுற்றுலா தளங்கள் காணப்படுவதனைப் பார்க்கலாம்.
மலைகளின் அரசி ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி மையமாகவும், நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குவதே ஊட்டியாகும்.
உயரமான மலைகள், பறந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் அதிகமாக காணப்படுவதனால் உதக மண்டலம் அதாவது ஊட்டி “மலைகளின் அரசி” என அழைக்கப்படுகின்றது.
உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் என பொருள்படும். எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.
இங்கு காணப்படும் மலைகளில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீல நிற குறிஞ்சிப் பூக்கள் காணப்படுவதனால் அம்மலைகள் சிறப்பு பெறுகின்றன.
முடிவுரை
இயற்கை வளமும் பல்வேறு அரிய வகைத் தாவரங்களையும் கொண்டமைந்த இந்த ஊட்டி பிரதேசமானது மக்கள் அனைவராலும் விரும்பப்படும் ஓர் சுற்றுலா தளமாகவே காணப்படுகின்றது.
இங்கு நிலவும் அற்புதமான காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் வருகை தருவதோடு, அங்கு நடைபெறும் தேயிலை விழா மற்றும் கோடை விழா ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவதனைக் காண முடியும்.
இந்த ஊட்டிப் பிரதேசமானது கோடை காலங்களில் இதமான ஓர் குளிர்ச்சி தன்மையை தருகின்றமையே மக்கள் அனைவரும் இப் பிரதேசத்தினை விரும்புவதற்கு முக்கிய காரணமாகும்.
You May Also Like: