கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை

கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை

இலங்கையின் மலையகப் பிரதேசமானது அனைத்து நாட்டவரும் கண்டு வியக்கும் இயற்கை அரண்கள் பல நிறைந்த சுற்றுலா தலமாக காணப்படுகிறது.

கண்டோர் வியக்கும் மலையகம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அமைவிடம்
  • நீர்வீழ்ச்சிகள்
  • பயிர்ச்செய்கை முறை
  • பண்பாடு
  • நில் தியா பொகுனா மற்றும் குகை
  • முடிவுரை

முன்னுரை

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்து காணப்படும் இலங்கை தீவானது, எண்ணற்ற இயற்கை அரண்களை கொண்ட அமைந்த எழில்மிகு நாடாகும். இலங்கை பொருளாதாரத்தின் அதிகப்படியான வருமானம் சுற்றுலா துறையின் மூலமாகவே கிடைக்கப் பெறுகின்றது.

அந்தவகையில், இலங்கையின் மலையகப் பிரதேசமானது கண்டோரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல இயற்கை வளங்களை கொண்டமைந்து காணப்படுகிறது.

அமைவிடம்

இலங்கைத் தீவானது கரையோர சமவெளி, அண்சமவெளி, மத்திய மலைநாடு என பிரதான மூன்று தரைத்தோற்ற அம்சங்களை கொண்டதாக காணப்படுகிறது.

இலங்கையின் நடுப்பகுதியில் சார்பாக அமைந்துள்ள சப்ரகமுவா கொன்றுகளை தவிர்த்து 300 மீட்டருக்கும் மேல் அமைந்துள்ள பகுதியே மலையக பிரதேசமாகும்.

இப்பிரதேசத்தினுள், மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்கள் உள்ளடங்கி காணப்படுகின்றன.

நீர்வீழ்ச்சிகள்

மலையகப் பிரதேசத்தில் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. அவற்றில் இராவணன் எல்ல, துன்ஹிந்த, பம்பரகந்த, டெவொன், சென்கிளயார், குருந்து ஓயா, லவர் சிலீப் மற்றும் தியலும போன்ற மிகப்பிரதானமான நீர்வீழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கன.

இவற்றுள் ஒன்றான தியலும நீர்வீழ்ச்சியானது, கடல் மட்டத்தில் இருந்து 628 அடி உயரத்தில் காணப்படும் 72 அடி உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். இது ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியில் கொஸ்லாந்தை பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காணப்படுகிறது.

இந்த நீர்வீழ்ச்சியானது, புங்கள ஆறு, கீர்த்தி ஆறு மற்றும் பண்டாரவளை பூனாக்கலை ஆற்றுடன் இணைந்து ஓடும் ரம்மியமான ஒரு நீர்வீழ்ச்சியாகும்.

இவ்வாறு பல நீர்வீழ்ச்சிகள் மலையக பிரதேசத்துக்கு அழகை சேர்ப்பனவாகவும், புத்துணர்ச்சியை வழங்குவதாகவும் , அதிகப்படியான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வனவாக அமைந்து காணப்படுகிறது.

பயிர்ச்செய்கை முறை

மலையகப் பிரதேசங்களில் அதிகப்படியாக தேயிலை செய்கையே பிரதானமாக இடம்பெறுகிறது. அத்தோடு, தெங்கு, இறப்பர், மிளகு, கறுவா போன்ற வாசனைப் பொருட்களும், மரக்கறி வகைகளும் இப்பிரதேசங்களில் பயிரிடப்படுகின்றன.

பிரதேசங்களில் தரைத்தோற்றமானது, சமாந்தரமாக அல்லாமல் குத்து சாய்வாகவே காணப்படுகிறது. ஆதலால் இங்கு படிக்கட்டு முறையிலான பயிற்சி நடவடிக்கைகளே இடம்பெறுகிறது. இம்முறைமை காண்பவர்களை வியப்பில் சிந்திப்பிலும் ஆழ்த்துவனவாக காணப்படுகிறது.

பண்பாடு

மலையக பிரதேசங்களில் இலங்கைத் தமிழர், இந்திய தமிழர், சிங்களவர்கள், பறங்கியர் என பல்வகைப்பட்ட சமூகத்தவர்கள் வாழ்வதனால் இங்கு வெவ்வேறு வகையான பண்டிகைகள், விழாக்கள், சடங்குகள் , பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் என்பன காணப்படுகின்றன. மலையகப் பகுதிகள் பல்கலாசாரங்களை அறியவும் உதவும் ஓர் ஊடகமாகவும் காணப்படுகிறது.

நில் தியா பொகுனா மற்றும் குகை

மலையகத்தின் எல்ல பகுதியில் நில் தியா பொகுனா மற்றும் குகைகள் எனப்படும் நிலத்தடி குகை அமைந்துள்ளன. இது இராவணன் கதையுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

100 மீட்டர் நிலத்தடி குளத்தை கொண்டு அமைந்துள்ளது. இது பிரகாசமான நீல நீரைக் கொண்ட பாறைகள் கொண்டு ஈரமான குன்றுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

முடிவுரை

இது மட்டுமல்லாது, ராவணன் குகை, கித்துல்கல பறவை பாதுகாப்பகம், பதுளை டச்சுக் கோட்டை, எல்லா ராக், மினி ஆடம்ஸ் சிகரம் என பல அழகிய இடங்களை கொண்ட அமைந்து காணப்படுகின்றன.

இவ்விடங்கள் யாவும் காணும் மக்களை வியப்பில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாது புத்துணர்வையும், மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சிறந்த சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது. இந்த இயற்கை அரண்களை பேணிப் பாதுகாப்பது இலங்கை நாட்டவராகிய எம் ஒவ்வொவ்வரின் தலையாய கடமை ஆகும்.

You May Also Like:

வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை

எமது நாடு இலங்கை கட்டுரை