தூய்மை சென்னை கட்டுரை

thuimai chennai katturai in tamil

“சுத்தம் சுகம் தரும்” என்ற பழமொழிக்கு இணங்க, தூய்மையாகவும், சுத்தமாகவும் இருப்பது எமக்கு எப்பொழுதும் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

அந்த வகையில் நாம் எவ்வளவு தூய்மையாக இருக்கின்றோமோ அதுபோல, எம்முடைய சுற்றுப்புற சூழலும் தூய்மையாக இருப்பது அவசியமானதாகும்.

தூய்மை சென்னை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நோக்கம்
  • தூய்மை சென்னைக்கான செயற்பாடுகள்
  • தூய்மை சென்னையின் அவசியம்
  • நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

மக்களின் உடல், உள, சுற்றுப்புறச் சூழல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகவே இந்த “தூய்மை சென்னை” என்பது காணப்படுகின்றது.

அந்த வகையில் சென்னையில் வாழக்கூடிய மக்களது நலன்கள், ஆரோக்கியம் என்பன அவர்களுடைய சுற்றுப்புற சூழலின் தூய்மையின் பொருட்டு நிர்ணயிக்கப்படுகின்றது என்பதனால், இந்த மக்களின் நலன் கருதி “தூய்மை சென்னை” செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிப்பதனை காணலாம்.

நோக்கம்

பொதுவாக ஒவ்வொரு செயல்திட்டமும் தனக்கென தனியான ஒவ்வொரு நோக்கங்களை கொண்டு காணப்படும். அதேபோன்றே இந்த “தூய்மை சென்னை” செயற்றிட்டமானது தனக்கே உரிய சில நோக்குகளை கொண்டுள்ளது.

அதாவது சென்னை நகரில் வாழக்கூடிய பொதுமக்களது மனதினில் சென்னையினை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குறிப்பாக சென்னை மாநகரின் நலனினில் அக்கறை காட்டும் தனியன்களையும், நிறுவனங்களையும், அமைப்புகளையும் ஒன்றிணைத்து தூய்மையான சென்னையினை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

தூய்மை சென்னைக்கான செயற்பாடுகள்

சென்னை மாநகராட்சியானது இந்த “தூய்மை சென்னை” செயல்திட்டத்தின் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருவதனை காணலாம்.

அதன் முதற்கட்டமாக சென்னையில் உள்ள தெருக்களின் தூய்மையை பேணுவதற்காக தெருக்களில் உள்ள அசுத்தங்களை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதனை காணலாம்.

இதற்கான இணையதளங்கள் மற்றும் வலைத்தளங்களின் ஊடாக மக்களை அணி சேர்த்துக் கொண்டு அந்த செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மற்றும் நகரத்தில் காணப்படக்கூடிய தேவையற்ற கழிவுகளை அகற்றுவதோடு, வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை மங்கும் குப்பை, மங்காத குப்பை எனும் அடிப்படையில் வேறு பிரித்து அவற்றினை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்த செயல் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதனை நாம் இங்கு அவதானிக்க முடியும்.

தூய்மை சென்னையின் அவசியம்

மக்கள் மற்றும் இந்த நிலப்பகுதியில் வாழக்கூடிய ஜீவராசிகள் அனைத்தும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நீர், நிலம், வளி ஆகிய இயற்கையின் தூய்மை மிகவும் அவசியமானதாகும்.

இங்கு இயற்கை தூய்மையாக இருக்க வேண்டுமெனில் அதன் சுற்றுப்புற சூழல் கட்டாயமாக தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டும். அல்லாவிட்டால் மக்களாலும், ஜீவராசிகளாலும் தூய்மையான காற்று, தூய்மையான நீர் என்பவற்றை உள்ளெடுக்க முடியாமல் போய்விடும்.

ஆகையால், சுற்றுப்புற சூழலின் தூய்மையை பேணுவது மிகவும் அவசியமானதாகும். இவ்வாறாக நகரங்கள் தூய்மையாக காணப்பட்டாலே அந்நாடு தூய்மையானதாக மாற்றம் பெறும். ஆகவே சுற்றுப்புற சூழலின் தூய்மையை பேணுவது மிகவும் அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.

நன்மைகள்

“தூய்மை சென்னை” செயற்றிட்டத்தின் மூலமாக சென்னை சுற்றுப்புறச் சூழலில் தூய்மை முன்னெடுக்கப்பட்டு வருவதால் அங்கு சூழல் மாசு குறைவடைவதோடு உயிர்ச் சூழல் சமநிலையும் பேணப்படும்.

அத்தோடு மிகவும் முக்கியமாகவே சூழல் மாசுகளினால் அழிவடைந்து வரக்கூடிய சில உயிரினங்களை, இந்த சூழலை தூய்மையாக வைத்திருப்பதன் மூலமாக பாதுகாக்கவும் முடியும்.

மேலும் சுற்றுப்புறச் சூழல் தூய்மையின் மூலம் பல்வேறு இயற்கை வளங்களை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்கள் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

சுத்தமான நீர், சுத்தமான காற்று, ஆரோக்கியமான உணவு என்பவற்றினையும் பெற்றுக் கொள்வதற்கு இந்த சுற்றுப்புற சூழல் தூய்மையானது மிகவும் உதவியாக அமைவதனை நாம் இங்கு குறிப்பிடலாம்.

முடிவுரை

இந்தியாவின் தூய்மையான முதல் 50 நகரங்களின் பட்டியலில் சென்னையும் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது “தூய்மை சென்னை” போன்ற செயற்திட்டங்களின் மூலமாகவே இந்த நகரங்களின் தூய்மைகளை பேணிப் பாதுகாக்க முடியும்.

ஆகவே நகரங்களின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு முன்னெடுக்கப்படக்கூடிய செயல் திட்டங்களில் நாமும் பங்கு கொண்டு எமது சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும் என்பதனை நாம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் செயல்படுவது எமது கடமையாகும்.

You May Also Like:

கழிப்பறை சுத்தம் கட்டுரை

சுத்தம் சுகம் தரும் கட்டுரை