மகளிர் தினம் கட்டுரை

magalir thinam katturai tamil

வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடந்த பெண் சமுதாயமானது தற்போது சுதந்திரமாக வானில் வண்ண பறவைகளாக பறந்து கொண்டிருப்பதற்கு வித்திட்ட பல போராட்டங்களின் வெற்றி தினமே மகளிர் தினமாக அனைவராலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மகளிர் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மகளிர் தின வரலாறு
  3. பெண்களின் மகத்துவம்
  4. மகளிர் அதிகாரங்கள்
  5. சமூகத்தின் வளர்ச்சியில் மகளிரின் பங்கு
  6. முடிவுரை

முன்னுரை

இப்பாரினிலே ஆண் ஆதிக்கம் சமுதாயத்தில் மேலோங்கி பெண்கள் அவர்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்பட்ட தருணத்தில் அவர்களின் உரிமைகளை பல போராட்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த தினமான மார்ச் மாதம் 8ம் திகதி மகளிர் தினமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினம் எனும் இக்கட்டுரையில் மகளிர் தினவரலாறு, பெண்களின் மகத்துவம், சமத்துவத்தின் வெளிப்பாடு, சமூக வளர்ச்சியில் மகளிரின் பங்கு என்பவற்றை பற்றி ஆராய்வோம்.

மகளிர் தின வரலாறு

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெண்கள் தொழிற்சாலைகளில் 16 மணி நேரம் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜவுளி ஆலைகளில் பெண்கள் மூன்று டாலர் ஊதியத்திற்கு வாரம் 81 மணி நேரம் வேலை செய்தனர். அதிக வேலை புரிந்து குறைவான ஊதியம் பெறுவதனால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகினர்.

எனவே ஆண்களுக்கு நிகரான ஊதியம் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், பணி நிலைமைகள் மேம்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், பெண்களுக்கும் ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அமெரிக்காவில் உள்ள மான்ஹெட்டன் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் நாள் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்க பெண்களை எடுத்துக் கொள்ள செய்தது. 1910 மார்ச் 8ம் திகதி இந்த போராட்டத்தின் முடிவாக அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

பெண்களின் மகத்துவம்

பெண் என்பவள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவராக காணப்படுகின்றார். பூமி, நதி, மலை என்பன பெண்ணாகவே கருதப்படுகின்றது. ஒரு குடும்பத்தில் பெண்ணானவள் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என பல உறவாக காணப்படுகின்றாள்.

பெண்ணானவள் அன்பு, பொறுமை, சாந்தம், ஆக்கத்திறன், சிந்திக்கும் வேகம் என பல திறமைகளை கொண்டவர்களாக காணப்படுகின்றாள்.

மகளிர் அதிகாரங்கள்

தற்போது சமூகத்தில் ஆண்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து விதமான உரிமைகளும் அதிகாரங்களும் பெண்களுக்கு சமநிலையில் கிடைக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் காணப்பட்ட பெண் அடக்குமுறை குறைவடைந்து தற்காலத்தில் பெண்கள் சுதந்திரமாக தலை நிமிர்ந்து நடமாட கூடியதாக காணப்படுகிறது.

பெண்கள் சுதந்திரமாக விரும்பிய இடத்தில் வாழ்தல், விரும்பிய கல்வியை கற்றல், விரும்பிய தொழிலை செய்தல், ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறல், உயர் பதவிகள் பெறல், தனது வாழ்க்கை துணையே தானே தேர்ந்தெடுத்தல் என பல சுதந்திர அதிகாரங்கள் காணப்படுகின்றன.

சமூகத்தின் வளர்ச்சியில் மகளிரின் பங்கு

இன்றைய சமூகத்தில் பெண்கள் தங்கள் திறமைகளை அனைத்து துறைகளிலும் சிறந்த முறையில் வெளிப்படுத்துகின்றனர்.

கல்வி, விளையாட்டு, ஊடகம், விவசாய நடவடிக்கை, கைத்தொழில் செயல்பாடுகள்,மருத்துவ ஆய்வு, விண்வெளி ஆய்வு என பலவற்றில் பல சாதனைகளையும் புரிகின்றனர்.

இவை மட்டுமல்லாது குடும்பங்களை தலைமை தாங்கி சிறப்பான முறையில் நடத்துகின்றனர். பெண்களுடைய இத்தகைய சாதனைகள் நாட்டின் பொருளாதாரத்தில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

முடிவுரை

“பெண்கள் எனப்படுபவர் ஒரு நாட்டினுடைய இரு கண்களாக ஆவர்” என்ற கூற்றானது மகளிர் அது சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. சமுதாயத்தின் அறிய பொக்கிஷமாக காணப்படுவது பெண் இனமே ஆகும். மகளிரது உரிமைகளை சரிவர பாதுகாத்தல் வேண்டும்.

You May Also Like:

பெண் கல்வி கட்டுரை

பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை