நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் படம் தான் கங்குவா. இப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகின்றார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனையான கதைக்களம் கொண்ட படம். ‘கங்குவா’ எனும் பட தலைப்பிற்கு அர்த்தம் நெருப்பாய் இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பது பொருள்.
தற்போது மோஷன் போஸ்டரில் காட்டப்பட்டுள்ள நாய், முகமூடி, குதிரை, கழுகு ஆகியவை இந்த படத்திற்கு முக்கியமானதாகும். இந்த படத்தில் அதிக அளவில் சி. ஜி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது என் கனவு திரைப்படம். 3டி வடிவில் இந்த படத்தை உருவாக்கி வருகிறோம் என்றும் சிவா கூறியுள்ளார்.
கங்குவா சூர்யாவின் 42 வது படமாகும். இதற்கு முன்பு நடித்த எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்பது குறிப்பிட தக்கது. ஆனால் இந்த படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப் படத்தை தொடந்து புற நானூறு படத்திலும் நடித்து வருகின்றார்.
கங்குவா படத்தின் பட்ஜெட் 350 கோடி என்று கூறப்படுகின்றது. இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிக பிரமாண்டமாகவும் சண்டை காட்சி ரியலாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக 10000 பேரை வைத்து சண்டை காட்சி எடுப்பதாக கூறப்படுகின்றது. இப் படம் 350 கோடி செலவில் இப் படம் எடுப்பதால் இப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது.