தமிழ் சித்தர்களில் முதன்மையானவரும், சப்தரிஸிகளில் ஒருவராகவும் திகழ்பவரே அகத்தியராவார். இவர் தமிழை எடுத்தியம்பிய சிறந்த ஆசானாவார்.
மேலும் சிவபெருமானுடைய திருமணத்தின் போது ஏற்பட்ட பூமியின் சமமற்ற நிலையை நீக்க இறைவனால் தென்னாடு அனுப்பப்பட்டவரே அகத்தியர் என இந்துக்கள் நம்புகின்றனர்.
மருத்துவம், சோதிடம், வானவியல், சமஸ்கிருதம் என பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றே விளங்கினார் என்ற வகையில் இவர் பல வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றார்.
அகத்தியர் வேறு பெயர்கள்
- தமிழ்முனி
- மாமுனி
- திருமுனி
- குருமுனி
- முதல் சித்தர்
- பொதியில் முனிவன்
- மாதவமுனி
- குடமுனி
- கும்பமுனி
- சாம்பமுனி
- கும்பயோகி
- அமரமுனிவர்
- பொதியவரை முனிவன்
- குறுமுனி
- வண்டமிழ்
- அறிவான்
- ஆதிமுனி
அகத்தியரின் சிறப்புக்கள்
அகத்தியரானவர் தம் முன்னோர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அரசன் மற்றும் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தாரின் கடனை தீர்த்த சிறப்புமிக்கவராவர்.
மேலும் இராமனுக்கு சிவகீதையை போதித்தல், இலங்கை மன்னனான இராவணனை தம் இசை நிறத்தால் வெல்லல், பல வைத்திய கலைகளை கற்றுள்ளமை என பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஓர் மாமுனிவராவார்.
You May Also Like: